Back
Home » ஆரோக்கியம்
உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா?
Boldsky | 19th Sep, 2019 03:19 PM
 • மார்பு வலி

  மார்பு பகுதியில் வலி வந்தாலே அது எந்த வயதினராக இருந்தாலும் அவர்கள் மனதில் முதலில் எழும் பயம் மாரடைப்பாக இருக்கும் என்பதுதான். ஆனால் சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகள் இல்லாத இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலும் இளம்வயதினருக்கு ஏற்படும் மார்பு வலிக்கு காரணம் பதட்டம், மனஅழுத்தம், நெஞ்செரிச்சல் போன்றவையாகத்தான் இருக்கும் அல்லது மார்பு பகுதியில் கொடுக்கப்பட்ட அதிக அழுத்தம் காரணமாக இருக்கலாம்.


 • காதுகளில் சத்தம்

  உங்கள் காதுகளில் எரிச்சலூட்டும் சத்தம் கேட்பது சாதாரண வயதான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் தமனிகள் கடினமடையும் போது அல்லது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கும்போது, இரத்த ஓட்டம் மாறி, நீங்கள் மட்டுமே கேட்கக்கூடிய சத்தத்தை உருவாக்கும். இது பொதுவாக ஆபத்தானது அல்ல, ஆனால் இது உங்களுக்கு காது சேதமடைவதன் ஆரம்பக்கட்டமாக இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகுவது நல்லது.


 • கைநடுக்கம்

  உங்கள் கைகள் நடுங்கும் அறிகுறி இருந்தால் உடனடியாக உங்களுக்கு பார்கின்சன் நோய் இருக்கிறது என்று முடிவு செய்து விடாதீர்கள். பார்கின்சன் பெரும்பாலும் உடலின் ஒரு பக்கத்தில் தொடங்குகிறது, மேலும் விறைப்பு, மெதுவான இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு இழப்பு ஆகியவை இதனுடன் கைகோர்க்கும். இது குறைவான சர்க்கரை அல்லது தைராய்டு பிரச்சினையாக இருக்க வாய்ப்புள்ளது. இது அத்தியாவசியமான நடுக்கமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஆபத்தான நடுக்கம் அல்ல.

  MOST READ: கும்பகர்ணனின் மகன் பீமா விஷ்ணுவை அழிக்க ஏன் சபதம் எடுத்தார் தெரியுமா?


 • மறதி

  உங்களுக்கு வயதாகும் போது தானாக மறதிகள் ஆரம்பிக்க தொடங்கும். இது டிமென்ஷியா நோயாக இருக்கும் என்று நீங்கள் பயப்படாதீர்கள். இளமைக்காலத்தில் மறதி ஏற்படுவது என்பது சாதாரணமான ஒன்றுதான், இதற்கு காரணம் மனஅழுத்தமாக இருக்கலாம்.


 • கண் பார்வை

  உங்கள் பார்வையில் திடீரென கருப்பு "மிதவைகளை" கவனிப்பது வினோதமாக இருக்கலாம், இதனால் உங்களுக்கு பார்வைக் குறைபாடு என்று நினைத்து பயப்பட வேண்டாம். இது வயதாவதன் சாதாரண அறிகுறிதான். நீங்கள் கவனித்து பார்த்தால் கிட்டத்தட்ட அனைவருமே இந்த குறைபாடு தனக்கு உள்ளதாக கூறுவார்கள். இதனை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம்.


 • மலத்தில் இரத்தம்

  திடீரென உடலில் இருந்து வெளிப்படுவது உங்களை பதட்டமடைய வைக்கலாம் ஆனால் உண்மையில் இளம் வயதினரை பொறுத்தவரையில் இவ்வாறு இரத்தம் வெளிப்படுவது ஆபத்தான ஒன்றல்ல. இதற்கு காரணம் அவர்கள் குறைந்த நார்சத்துக்கள் உள்ள உணவுகளை உண்பது அல்லது மலச்சிக்கல் இருப்பதுதான். அதிக தண்ணீர் குடிப்பது அல்லது நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும் உணவுகளை உண்பதன் மூலம் இதனை சரிசெய்யலாம்.


 • மாதவிடாய் தள்ளிப்போவது

  உங்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவதற்கு கர்ப்பம் மட்டுமே காரணமாக இருக்காது, இதற்கு பல காரணங்கள் உள்ளது. உங்கள் ஹார்மோன்கள் உடல் மற்றும் உணர்ச்சி மன அழுத்தத்திற்கு உணர்திறன் கொண்டவை, எனவே கவலை அல்லது திடீர் எடை இழப்பு போன்ற விஷயங்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சியை தள்ளிப்போட வாய்ப்புள்ளது. ஒன்று அல்லது இரண்டு மாதவிடாய் தள்ளிப்போவது சாதாரணமான ஒன்றுதான் ஆனால் மூன்று மாதவிடாய்க்கு மேல் தள்ளிப்போனால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

  MOST READ: குறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...!


 • மூட்டுகளில் சத்தம்

  உங்கள் மூட்டுகளில் விரிசல் ஏற்படுவது போன்ற சத்தம் கீல்வாதத்தை உண்டுபண்ணாது என்று புரிந்து கொள்ளுங்கள். மூட்டுகளுக்குள் காற்று புகுந்து பின்னர் வெளியேறுவது சத்தத்தை ஏற்படுத்தும். ஆழமான சோம்பல் முறிப்பு அல்லது சுடுநீரில் மூட்டை நனைப்பது இதனை சரிசெய்துவிடும்.
இன்றைய மாறிவிட்ட வாழ்க்கை முறையில் நமது உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட நமக்கு அதீத பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஏனெனில் நாம் எவ்வளவு ஆரோக்கியமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நமக்கே நன்றாக தெரிந்திருக்கிறது.

மருத்துவர்களின் அறிவுரையின் படி நீங்கள் உங்கள் உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் நினைத்து பயப்பட வேண்டாம். நீங்கள் மிகவும் ஆபத்தானது என்று நினைக்கும் சில அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் அவ்வாறு உங்களை பயமுறுத்தும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்