Back
Home » ஆரோக்கியம்
உங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை!
Boldsky | 19th Sep, 2019 05:32 PM
  • அறிகுறிகள்:

    ஒருவர் ஆஸ்பெஸ்டாஸ் பொருளை அதிகம் சுவாசித்தால், அதனால் உண்டாகும் நோயின் அறிகுறிகளானது 10-40 வருடங்களுக்கு மேல் தான் நன்கு காண முடியும். இப்போது அவற்றின் அறிகுறிகள் என்னவென்று காண்போம்.

    * மூச்சுவிடுவதில் சிரமம்

    * தொடர்ச்சியான வறட்டு இருமல்

    * பசியின்மையுடன் எடை குறைவு

    * கைவிரல் நகங்கள் மற்றும் கால் விரல் நகங்கள், சாதாரண தோற்றத்தை விட சற்று மாறி வட்டமாகவும், அகலமாகவும் மாறுவது

    * நெஞ்சு வலி

    மரணம் வரை கொண்டு செல்லும் கொடிய நோய்கள் - ஓர் பார்வை!


  • எப்போது மருத்துவரை காண வேண்டும்?

    உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே யாருக்கேனும் ஆஸ்பெஸ்டாசிஸிஸ் பிரச்சனை இருந்தால் மற்றும் உங்களால் பேசவே முடியாத அளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.


  • காரணங்கள்

    ஒருவர் அளவுக்கு அதிகமாக கல்நார் தூசியை பல நாட்களாக சுவாசித்தால், அந்த கல்நாரின் இழைகளால், நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் இரத்தத்தில் ஆக்ஸிஜனுக்கு பதிலாக கார்பன்டைஆக்ஸைடை பரிமாறும். மேலும் கல்நார் இழைகள் நுரையீரல் திசுக்களில் எரிச்சல் மற்றும் வடுக்களை உண்டாக்கி, நுரையீரலை இறுக்கமடையச் செய்து, சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க வைக்கும்.

    ஆஸ்பெஸ்டாஸிஸ் தீவிரமாகும் போது நுரையீரல் திசுக்கள் மேலும் பாதிக்கப்பட்டு, நுரையீரலால் எளிதில் சுருங்கி, விரிவடையாத நிலை ஏற்படும்.

    ஆண்களை அதிகம் தாக்கும் முதுகெலும்பு அழற்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!


  • புகைப்பிடிப்பது

    ஆஸ்பெஸ்டாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர் அதிகம் புகைப்பிடிக்கும் போது, கல்நார் இழைகள் நுரையீரலினுள் நுழைந்து அப்படியே தங்கி நீடித்து, ஆஸ்பெஸ்டாஸிஸ் நுரையீரல் நோயை மிகவும் தீவிரமாக்கும்.


  • யாருக்கெல்லாம் இந்நோய் அதிகம் தாக்கும் அபாயம் உள்ளது?

    ஆஸ்பெஸ்டாஸ் வீட்டில் இருப்போருக்கு, ஆஸ்பெஸ்டாஸ் பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு இந்நோயின் தாக்கம் இருக்கும். மேலும் ஆஸ்பெஸ்டாஸ் வெளிப்பாடு இருக்கும் இடத்தில் வேலை செய்வோருக்கும் இந்நோய் தாக்கக்கூடும். அதுமட்டுமின்றி,

    * கல்நார் சுரங்கத் தொழிலாளர்கள்

    * விமானம் மற்றும் ஆட்டோ மெக்கானிக்ஸ்

    * கொதிகலன் ஆபரேட்டர்கள்

    * கட்டிடத் தொழிலாளர்கள்

    * எலக்ட்ரீசியன்

    * இரயில் பாதை தொழிலாளர்கள்

    * கப்பல் கட்டும் தொழிலாளர்கள்

    * பழைய கட்டிடங்களில் நீராவி குழாய்களைச் சுற்றி கல்நார் காப்பு அகற்றும் தொழிலாளர்கள்

    மேலே கொடுக்கப்பட்டவர்களுக்கும் ஆஸ்பெஸ்டாஸிஸ் நோயின் அபாயம் அதிகம் உள்ளது.

    கக்கா.. போகும் போது வலியுடன், இரத்தக்கசிவும் ஏற்பட காரணம் என்ன?


  • சிக்கல்கள்

    ஆஸ்பெஸ்டாஸிஸ் நோய் இருப்பவர்கள், இந்நோய்க்கு உடனே சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், நுரையீரல் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும். குறிப்பாக புகைப்பிடித்தால், நுரையீரல் புற்றுநோய் விரைவில் தாக்கக்கூடும்.




ஆஸ்பெஸ்டாஸிஸ் என்பது நாள்பட்ட நுரையீரல் நோய் ஆகும். இந்த நோயானது கல்நார் என்னும் பொருளை சுவாசிப்பதால் ஏற்படுகிறது. அது என்ன கல்நார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆஸ்பெஸ்டாஸ் என்னும் கல்நார், தீப்பிடிக்காத தன்மையுடைய, வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கக்கூடிய, இழை வடிவில் கிடைக்கும் சாம்பல் நிறத் தாதுப் பொருளாகும்.

இந்த பொருள் நாம் பயன்படுத்தும் பல பொருட்களில் உள்ளது. அதில் கூரை ஓடுகள், நீர்த்தடங்கள், தீயணைப்புப் போர்வைகள், கிளச், பிரேக் லைனிங், தானியங்கி காஸ்கெட்டுகள் மற்றும் பேடுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த பொருளால் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட சுவாச நோய்களின் அபாயம் அதிகம் உள்ளது. அதில் முக்கியமான ஓர் நோய் தான் ஆஸ்பெஸ்டாசிஸ் ஆகும்.

உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா?

இப்போது ஆஸ்பெஸ்டாஸிஸ் நோயின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் காரணிகளைக் காண்போம்.

   
 
ஆரோக்கியம்