Back
Home » ஆரோக்கியம்
ஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா?
Boldsky | 20th Sep, 2019 12:05 PM
 • ஆஸ்துமா

  ஆஸ்துமா ஒரு நாள்பட்ட கோளாறு. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 10 மில்லியன் மக்கள் ஆஸ்துமா பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். அதேப் போல் அமெரிக்காவிலும் ஆஸ்துமா நோயாளிகள் அதிகம்.

  ஆஸ்துமா பிரச்சனையினால் நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு, சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கக்கூடும். ஆஸ்துமாவை நிரந்தரமாக சரிசெய்ய முடியாது. ஆனால் அது வராமல் தடுக்க முடியும்.

  இங்கு செப்டம்பர் மாதத்தில் ஆஸ்துமா தாக்கத்தைத் தடுப்பதற்கான சில டிப்ஸ் மற்றும் உண்ண வேண்டிய உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.


 • டிப்ஸ் #1

  காற்று மாசுபாட்டில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். அதாவது தூசி நிறைந்த அல்லது புகைமிக்க இடங்களில் அதிகம் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு தூசி அல்லது புகையே ஆகாது. எனவே இம்மாதிரியான இடங்களைக் கடக்கும் முன், மூக்கு மற்றும் வாயை துணியால் மூடிக் கொள்ளுங்கள். முக்கியமாக வீட்டிற்குள் ஒட்டடை எடுப்பது, தூசி மிகுந்த இடங்களை சுத்தம் செய்வது போன்ற செயல்களை அறவே செய்யக்கூடாது. இல்லாவிட்டால், ஆஸ்துமா உடனே தாக்கி உங்களை பலவீனமாக்கிவிடும். சில சமயங்களில் மூச்சுத்திணறல் தீவிரமாகி கடுமையாக அவஸ்தைப்பட நேரிடும்.


 • டிப்ஸ் #2

  சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்சனை தான் சளி மற்றும் இருமல். அதிலும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சளி பிடித்துவிட்டால், பின் மூச்சுத்திணறலால் அவஸ்தைப்படக்கூடும். எனவே இந்த காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் யாருக்கேனும் சளி பிடித்திருந்தால், அவர்களிடம் சிறிது இடைவெளியை மேற்கொள்ளுங்கள். ஆஸ்துமா இருப்பவர்களுக்கு சளி பிடித்தால், நிலைமை மோசமாகி கட்டுப்படுத்துவதே கடினமாகிவிடும்.


 • டிப்ஸ் #3

  மருந்துகளை தவறாமல் எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் எப்போதுமே ஆஸ்துமா நோயாளிகள் தங்கள் கையிலேயே இன்ஹேலரை வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் மருத்துவர்கள் ஆஸ்துமா தீவிரமாக இருப்பவர்களுக்கு இரண்டு இன்ஹேலரைப் பயன்படுத்த பரிந்துரைப்பார்கள். இந்த மருந்துகரை தவறாமல் பயன்படுத்துவதோடு, சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்திவிட்டால், நிலைமை மோசமாகக்கூடும். எனவே மருத்துவர் பரிந்துரைத்த அளவில் மட்டுமே மருந்துகளை எடுக்க வேண்டும்.


 • டிப்ஸ் #4

  இன்று ஆஸ்துமா நிலையை கண்காணிப்பதற்கு என்று ஸ்மார்ட் இன்ஹேலர் விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் இன்ஹேலர் சாதனமானது ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மொபைல் அப்ளிகேஷனுடன் இணைக்கப்படும். முக்கியமாக இந்த சாதனம் ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு ஏற்றது. இதனால் குழந்தைகளின் ஆஸ்துமா நிலையை மருத்துவர்களும், பெற்றோர்களும் கண்காணிக்க முடியும்.


 • டிப்ஸ் #5

  ஆஸ்துமா நோயாளிகளுக்கு என்று தனிப்பட்ட டயட் எதுவும் இல்லை. ஆனால் ஒருசில உணவுகளை உண்பதன் மூலம், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நுரையீரலின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். இப்போது அந்த உணவுகளை எவையென்று காண்போம்.


 • வைட்டமின் டி

  ஒருவரது உடலில் போதுமான அளவு வைட்டமின் டி கிடைத்தால், ஆஸ்துமா தாக்கத்தைக் குறைக்கலாம். எனவே வைட்டமின் டி அதிகம் நிறைந்த உணவுகளான சால்மன் மீன், பால், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் முட்டைகளை உண்பது நல்லது. ஒருவேளை பால் மற்றும் முட்டை அலர்ஜியை ஏற்படுத்தினால், அந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். அலர்ஜியை உண்டாக்கும் உணவுகளை உட்கொண்டால், அது ஆஸ்துமாவை மேலும் தீவிரமாக்கும்.


 • வைட்டமின் ஏ

  2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வைட்டமின் ஏ குறைவாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டது. வைட்டமின் ஏ, நுரையீரல் செயல்பாட்டிற்கு பெரிதும் அவசியமானது. எனவே வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளான கேரட், முலாம் பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, லெட்யூஸ், கேல், பசலைக்கீரை மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


 • ஆப்பிள்

  ஒரு நாள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆஸ்துமா நெருங்குவதைத் தடுக்கலாம். ஆய்வு ஒன்றில், ஆப்பிள் ஆஸ்துமா அபாயத்தைக் குறைப்பதோடு, நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆப்பிள் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.


 • வாழைப்பழம்

  ஐரோப்பிய சுவாச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஆஸ்துமா உள்ள குழந்தைகள் வாழைப்பழங்களை சாப்பிட்டால் மூச்சுத்திணறல் குறையக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இந்த பழத்தின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பொட்டாசியம் காரணமாக இருக்கலாம். மேலும் வாழைப்பழம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடும்.


 • மக்னீசியம்

  அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜி ஆய்வில், குறைந்த அளவு மெக்னீசியம் கொண்ட 11 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளின் நுரையீரல் ஓட்டம் மற்றும் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடலில் மக்னீசியத்தை அளவை அதிகரிக்க, அந்த சத்து நிறைந்த உணவுகளான பசலைக்கீரை, பூசணி விதைகள், டார்க் சாக்லேட், சால்மன் போன்றவற்றை உணவுகளை உண்ண வேண்டும்.
உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மோசமான மாதமாக கருதப்படுகிறது. அமெரிக்காவில், பூக்கள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம், அதே சமயம் இந்தியாவில் மழைக்காலத்தின் முடிவு என்பதால், காற்று மிகவும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

எனவே தான் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்துமா நோயாளிகள் கடும் அவஸ்தைப்படுகிறார்கள். அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை அறக்கட்டளையின் படி, செப்டம்பர் மாதத்தில் ஆஸ்துமா சம்பந்தமான பிரச்சனைகள் தீவிரமாக இருக்குமாம்.

   
 
ஆரோக்கியம்