Back
Home » ஆரோக்கியம்
உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா?... அது இந்த நோயா இருக்கலாம்...
Boldsky | 20th Sep, 2019 01:20 PM
 • எந்த வயதினரை தாக்கும்

  நெக்ரோடிக் தொற்று பெரும்பாலும் பெண்களை விட 60-70 வயதுடைய ஆண்களையே அதிகம் தாக்க கூடியது. ஒரு திசு பாதிக்கப்பட்டால் அப்படியே பரவி மற்ற திசுக்களுக்கும் தொற்று சென்று விடும். அந்த பகுதி சிவந்து போய், வலியுடன் காணப்படும். முதல் எஃப்ஜி 1883 ஆம் ஆண்டில் ஜீன் ஆல்பிரட் ஃபோர்னியர் என்ற பிரெஞ்சு தோல் மருத்துவரால் அடையாளம் காணப்பட்டது. இதை 5 ஆரோக்கியமான நபர்களிடம் அவர் கண்டறிந்தார்.

  MOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: சிம்ம லக்னகாரர்களுக்கு பூர்வ புண்ணிய குருவால் ராஜயோகம்


 • காரணங்கள்

  டயாபெட்டீஸ் போன்ற நோயாளிகளுக்கு சிறுநீர் வழியாக சர்க்கரை அதிகளவில் வெளியேறுவதால் பிறப்புறுப்புகள் பாக்டீரியாவை அழைக்கும் இடமாக உள்ளது. தொற்று உடனே பரவாது. அது பரவுவதற்கு ஒரு காயம் அல்லது வெட்டு தேவைப்படுகிறது. ஒரு காயத்தின் வழியாக நுழையும் பாக்டீரியாக்கள் பரந்து தொற்றை பரப்புகின்றது. இறுதியில், அவை அந்த பகுதியில் உள்ள திசுக்களை அழுகச் செய்து ஃபோர்னியர் கேங்கிரீனை ஏற்படுத்துகின்றன.


 • நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும் காரணிகள்

  சிறுநீர் பாதை தொற்று
  கருப்பை நீக்கம்
  சிறுநீர்ப் பை நோய்த்தொற்றுகள்
  சீழ் கொண்ட திசுக்கள்
  டயாபெட்டீஸ் மருந்துகளான எஸ்.ஜி.எல்.டி 2 தடுப்பான்கள்
  கீமோதெரபி
  எச். ஐ.வி
  குழந்தைகளுக்கு பூச்சி கடித்தல்
  சிரோசிஸ் (நுரையீரல் அழற்சி)
  பிறப்புறுப்பு நோய்கள்
  ஸ்டீராய்டு மருந்துகள்
  அறிகுறிகள்
  பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம்
  பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு
  ஓய்வின்மை
  பிறப்புறுப்பு பகுதியில் வலி
  பிறப்புறுப்பு பகுதியில் துர்நாற்றம்
  காய்ச்சல்
  அழற்சியால் இரத்தம் கட்டுதல்
  செப்டிக் அதிர்ச்சி
  பாதிக்கப்பட்ட பகுதியில் வெடிப்பது போன்ற ஒலி அல்லது விரிசல் ஏற்படுதல்.


 • ஆபத்து காரணிகள்

  டயாபெட்டீஸ்
  லூபஸ்
  கீமோதெரபி
  க்ரோன் நோய்
  ஊட்டச்சத்து குறைபாடு
  லுகோமியா
  தீவிர உடல் பருமன்
  நோயெதிப்பு சக்தியை அடக்கும் மருந்துகள்
  எச். ஐ.வி
  கல்லீரல் நோய்
  கார்டிகோஸ்டீராய்டு மருந்துகள்.
  விளைவுகள்
  இதற்கு உடனே சிகிச்சை அளிக்கா விட்டால் பிறப்புறுப்பு பகுதியில் ஆபத்து விளைவிக்கக் கூடும்.
  செப்சிஸ்
  பல உறுப்பு செயலிழப்பு
  சிறுநீரக செயலிழப்பு

  MOST READ: மழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...


 • நோயைக் கண்டறிதல்

  அல்ட்ரா சவுண்ட்
  இதன் மூலம் நோய்த்தொற்று பகுதியை கண்டறியலாம்
  கம்பியூட்டர் டோமோகிராபி
  இந்த எஃப்ஜி எப்படி உருவானது, இதற்கு பின்னால் உள்ள காரணங்களை கண்டறிய உதவுகிறது.
  எக்ஸ்ரே
  தொற்று இருக்கும் இடம், தொற்றால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளிவரும் வாயுவின் அளவை கண்டறிய உதவுகிறது
  அல்ட்ரா சோனோகிராபி
  நோய்தொற்றால் அந்த பகுதியில் ஏற்படும் திரவம் மற்றும் வாயுக்களைக் கண்டறிய உதவுகிறது.


 • சிகிச்சைகள்

  ஆன்டி பயாடிக்
  முதலில் தொற்றுக்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கும் விதமாக ஆன்டி பயாடிக் மருந்துகளை உட் செலுத்துகின்றன.

  அறுவை சிகிச்சை

  இப்பொழுது பாதிக்கப்பட்ட திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி நீக்கி சுத்தம் செய்கின்றனர்.

  ஹைபர்பெரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை

  பாதிக்கப்பட்ட பகுதியில் 100% ஆக்ஸிஜன் சப்ளே அளித்து பாக்டீரியாவின் வளர்ச்சியை குறைக்கிறார்கள். இது காயங்கள் சீக்கிரம் ஆறுவதற்கும், பாதிக்கப்பட்ட இரத்த குழாய்களை சரி செய்யவும் உதவுகிறது.

  அறுவை சிகிச்சை

  இறந்த திசுக்களை நீக்க தோல் ஒட்டுதல் அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.


 • தடுப்பு முறைகள்

  பிறப்புறுப்புகளில் காயங்கள் மற்றும் வெட்டுக்கள் உள்ளதா என்பதை தவறாமல் சரி பாருங்கள்
  காயத்தின் அறிகுறி இருந்தால் அதில் சோப்பு அல்லது வெந்நீரைக் கொண்டு கழுவுங்கள்.
  உடல் எடையை சீராக வைத்து வந்தால் டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். எஸ்ஜிஎல்டி 2 டயாபெட்டீஸ் தடுப்பான் மருந்துகள் எடுப்பதை இதன் மூலம் குறைத்து கொள்ளலாம்.

  MOST READ: புரட்டாசி மாதத்தில் பிள்ளை பிறந்தால் புரட்டி எடுக்குமா? - குணநலன்கள் எப்படி


 • புகைப்பிடித்தலை தவிருங்கள்

  எஸ்ஜிஎல்டி 2 தடுப்பான் மருந்துகள் நீங்கள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து அதன் பக்க விளைவுகளை கேட்டுக் கொள்ளுங்கள்.
  எப்பொழுதும் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஃபோர்னியர் கேங்கிரீன் (எஃப்ஜி) என்பது பிறப்புறுப்புகளில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான சதை உண்ணும் நோயாகும், இது பெரும்பாலும் நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸின் ஒரு வடிவமாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸின் பிறப்புறுப்புகள் உட்பட மற்ற பகுதிகளையும் தாக்ககூடியது. ஆனால் ஃபோர்னியர் கேங்க்ரீன் பிறப்புறுப்புகளை மட்டும் தாக்கவல்லது.

   
 
ஆரோக்கியம்