Back
Home » ஆரோக்கியம்
சர்க்கரை நோய் இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...
Boldsky | 21st Sep, 2019 04:38 PM
 • ஆய்வின் கூற்று

  எஃப்ஜிஏவின் மருத்துவ அதிகாரி டாக்டர் சூசன் பெர்சாஃப்-மாட்சா, எஸ்ஜிஎல்டி 2 தடுப்பான்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் எஃப்ஜி ஏற்படுவது ஒரு அரிய நிகழ்வு என்று கூறினார், ஆனால் ஒரு ஆய்வில் இருவருக்கும் இடையிலான தொடர்பு கண்டறியப்பட்டது. சுகாதார பாதுகாப்புக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மையத்தின் மூத்த அறிஞர் டாக்டர் அமேஷ் அடல்ஜாவின் கூற்றுப்படி, இந்த நோய் விரைவான விகிதத்தில் பெருகி முக்கியமாக பிறப்புறுப்பு பகுதியிலும் முன்புற வயிற்று சுவரிலும் தொற்றை ஏற்படுத்துகிறது என்கிறார்.

  MOST READ: சாப்பிடதும் வயிறு திம்முனு ஆயிடுதா?... அப்ப இதெல்லாம் சாப்பிடவே சாப்பிடாதீங்க...


 • பின்னால் இருக்கும் உண்மை

  ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, எஸ்ஜிஎல்டி 2 தடுப்பான்கள் சிறுநீரகத்தின் மூலம் அதிகப்படியான இரத்த சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்ற அனுமதிக்கிறது. இப்படி இரத்த குளுக்கோஸைக் குறைக்கும் போது இதயம் தொடர்பான ஆபத்துகள் குறைக்கப்படுகிறது. ஆனால் மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்று மற்றும் ஃபோர்னியர் கேங்க்ரீன் போன்ற பிற பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன .


 • சர்க்கரை தொற்றுக்கு உணவு

  மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் நச்சுயியல் உதவி பேராசிரியர் ஜேமி ஆலன் கூறுகையில், உடலின் எந்தப் பகுதியிலும் அதிக அளவு சர்க்கரை இருந்தால் அந்த குறிப்பிட்ட பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஏனெனில் சர்க்கரை பெரும்பாலான நுண்ணுயிரிகளால் விரும்பப்படுகிறது. சர்க்கரை கொண்ட சிறுநீர் பிறப்புறுப்புகள் வழியாக செல்லும்போது, ​​அது பாக்டீரியாவை அழைக்கும் இடமாக மாறும். இருப்பினும், தொற்று உடனே பரவாது, பரவுவதற்கு ஒரு வெட்டு அல்லது காயம் தேவைப்படுகிறது. இப்படி அந்த பகுதியில் இருக்கும் காயங்கள் வழியாக கிருமிகள் பரவி தொற்றை ஏற்படுத்தி சதையை அழுகச் செய்து ஃபோர்னியர் கேங்கிரீனை ஏற்படுத்துகின்றன.

  MOST READ: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்...


 • அரிதான ஒன்று

  ஆய்வில் சேர்க்கப்படாத மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகையில் நீரிழிவு நோயாளியின் பிறப்புறுப்பு நோய்த்தொற்று என்பது பொதுவானது, ஆனால் எஃப்ஜி மிகவும் அரிதான ஒன்றாகும். எம்பாக்ளிஃப்ளோசின் போன்ற டயாபெட்டீஸ் மருந்து தயாரிக்கும் நிறுவனம் மருந்தின் பக்க விளைவுகளை தொடர்ந்து கண்காணிப்பதாகக் கூறியுள்ளது. இருப்பினும், எஃப்ஜி ஆபத்து காரணமாக எஸ்ஜிஎல்டி 2 தடுப்பான் மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்வது தற்போது குறைவாகிவிட்டது என்று உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் சமீபத்திய பாதுகாப்பு அறிக்கையின்படி, சோடியம்-குளுக்கோஸ் கோட்ரான்ஸ்போர்ட்டர் -2 (எஸ்ஜிஎல்டி 2) தடுப்பான்கள் எனப்படும் பிரபல நீரிழிவு மருந்து பிறப்புறுப்புகளில் சதை உண்ணும் ஃபோர்னியர் கேங்க்ரீன் (எஃப்ஜி) என்ற தொற்று அபாயத்தை உண்டு பண்ணுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்றை நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் என்றும் அழைக்கின்றனர்.

மார்ச் 2013 முதல் 2019 ஜனவரி வரையிலான 5 ஆண்டுகளில், மூன்று வெவ்வேறு வகையான அங்கீகரிக்கப்பட்ட எஸ்ஜிஎல்டி 2 தடுப்பான்களை உட்கொள்ளும் மக்களில் சுமார் 55 பேர்களுக்கு எஃப்ஜி தொற்று இருப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கீழ்க்கண்ட தடுப்பான் மருந்துகள் இந்த தொற்றிற்கு காரணமாக அமைகின்றன

கனாக்லிஃப்ளோசின் எம்பாக்லிஃப்ளோசின் டபாக்லிஃப்ளோசின் எர்டுக்லிஃப்ளோசின்

இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேர்களில் 3 பேர்கள் மருத்துவ சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். இந்த 55 பேரில், 16 பேர் டபாக்லிஃப்ளோசினும் 21 பேர் கனாக்லிஃப்ளோசினும், 18 பேர் எம்பாக்ளிஃப்ளோசின் உட்கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.

   
 
ஆரோக்கியம்