Back
Home » பேட்டி
வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி
Oneindia | 23rd Sep, 2019 02:30 PM
 • அழகான அம்மா நடிகை

  சில பேர்களின் முகங்கள் என்னதான் வசீகரமாகவும் தெய்வாம்சத்துடன் இருந்தாலும் சில குறிப்பிட்ட கேரக்டர்களுக்கு தான் பொருத்தமாக இருப்பார்கள். சில பேர் என்னதான் அழகாகவும், இளமையாக இருந்தாலும் வயதான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தான் லாயக்கு என்று முத்திரை குத்திவிடுவார்கள். தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடக்கும் கூத்து இது. அந்தக் காலத்தில் பி.கண்ணாம்பாள், பண்டரி பாய் தொடங்கி இன்றைய காலம் வரை இன்னமும் தொடர்ந்து நடக்கின்றது. இதில் டிவி சீரியல் நடிகை ஸ்ரீரஞ்சனியும் விதிவிலக்கல்ல.


 • அம்மாவாக முத்திரை

  ஸ்ரீரஞ்சனி முதன் முதலில் அலைபாயுதே படத்தில் நடிகர் மாதவனுக்கு அண்ணியாக நடித்தார். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை கண்டுகொண்டது அந்நியன் படத்தில் நடிகை சதாவின் அம்மாவாக நடித்த போதுதான். அப்போதிருந்து இவருக்கு தொடர்ந்து அம்மா, அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரங்களே வந்து கொண்டிருக்கின்றன.


 • வில்லியாக நடிக்க ஆசை


  நல்ல நடிப்புத் திறமை இருப்பதால், வில்லியாகவும் தன்னால் நடிக்க முடியும் என்று சொல்லும் ஸ்ரீரஞ்சனிக்கு யாரும் வில்லி கேரக்டர் கொடுக்க தயாராக இல்லை. ஒருவேளை அதுக்கு இவங்க சரிப்பட்டு வரமாட்டார் என்று நினைத்துவிட்டார்கள் போல.
  டெய்லி சண்டை தான்

  நான் முதன் முதலில் நடிகர் மாதவனுக்கு அண்ணியாக நடித்தேன். அதோடு தொடர்ந்து அவருக்கு மூன்று படங்களில் நடித்ததால், எல்லோருமே என்னை உண்மையிலேயே நடிகர் மாதவனுடைய அண்ணி என்று நினைத்துவிட்டனர். எனக்கு முதன் முதலில் டயலாக் சொல்லிக்கொடுத்தது, டைரக்டர் சமுத்திரக்கனி தான். டைரக்டர் பாலச்சந்தர் சார் யூனிட்ல, சுந்தர்.கே.விஜயன் டைரக்சன்ல தான் அவர் எனக்கு டயலாக் சொல்லிக்கொடுத்தார். அதுக்காகவே நாங்க டெய்லி சண்டை போடுவோம்.


 • என்கு டமிழ் தெர்யாத்

  ஏன்னா, எனக்கு ஆரம்பத்துல சுத்தமா தமிழ் தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பைதான். இங்கிலீஷ்லயே பேசி வளர்ந்துட்டோமா, அதனால் எனக்கு அவ்வளவா தமிழ் வராது. ரொம்ப சமீபத்துலதான் சென்னைக்கு வந்தேன். வந்த புதுசுல சுத்தமா தமிழ் தெரியாது. அப்புறமாதான் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேச கத்துக்கிட்டேன்.


 • வந்துட்டான்யா வந்துட்டான்

  அதனால, மொதல்ல டயாலாக் பேசுறதுக்கே பயமா இருக்கும். டயலாக் சொல்லித்தர்றதுக்கு சமுத்திரக்கனி சார் வரும்போதே, அடடா வந்துட்டான்யா வந்துட்டான் அப்பிடின்னு நாங்க நினைப்போம். ஏன்னா அவ்வளவு கோபம், பயம் ரெண்டும் சேர்ந்து வரும். காரணம் அவரு டயலாக் சொல்லலைன்னா திட்டி திட்டி சொல்லிக்கொடுப்பாரு. ஆனா இப்ப பழகிடிச்சி.


 • சமுத்திரக்கனியின் ரசிகை

  ஆனா, சமுத்திரக்கனி சார் டைரக்சன்ல இப்போ நாடோடிகள் 2 படத்தில நடிச்சிருக்கேன். உண்மையில் நான் அவரோட தீவிர ரசிகை. இது இப்போ ஆரம்பிச்சது கிடையாது. கடந்த 1997லில் ஆரம்பிச்ச நட்புன்னு சொல்லலாம். இன்னமும் தொடருது. சமுத்திரக்கனி சார் அப்போ தான் ஆரம்பகட்டத்துல இருந்தாரு. எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது. ஏன்னா நான் பாம்பே, பெங்களூரு, கோவா, புனேன்னு படிக்க போனதுனாலே தமிழ் சுத்தமா தெரியாது. அதோட நான் ஒரு ஸ்போர்ட்ஸ் உமன் வேற.


 • ஜுனியர் லெவல் சேம்பியன்

  தடகள போட்டியில் ஜூனியர் லெவல்ல நேஷனல் சேம்பியன் நான். அதோட ஹாக்கியும் விளையாடுவேன். ஆனால், அதை எல்லாத்தையுமே தூக்கி போட்டுட்டு சினிமாவுக்கு வந்துட்டேன். அதெல்லாம் ஒரு வரலாறு. நாம ஒன்ன நினைக்கிறோம்னா, கடவுள் வேற மாதிரி நினைச்சிருக்காரு. அதனால் தான் அந்த ஸ்போர்ட்ஸை தூக்கி போட்டுட்டு சினிமாவ கொடுத்திட்டாரு. சினிமாங்குறது இன்னைக்கு வரைக்கும் என்னோட பிளான்லயே கிடையாது. எல்லாமே கடவுள் கொடுத்த கிப்டு தான்.


 • திறமையை கண்டுபிடித்த பாலசந்தர்

  அதனால தான் நான் எப்பவுமே வர்ற கேரக்டர்களை எடுத்து பண்றேன். ஏன்னா நான் ஆரம்பத்துலே பாலச்சந்தர் சார் யூனிட்ல் இருந்தேன். அதுவே எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். அதெல்லாம் எனக்கு ஒரு வரம். ஒண்ணுமே தெரியாம மகா மக்கு பிளாஸ்திரியா தான் அங்கே இருந்தேன். ஆனால் எனக்குள்ள இருந்த டேலண்ட்டை பாலச்சந்தர் சார் கண்டுபிடிச்சி வெளிய கொண்டுவந்தார்.


 • கேரக்டரா மாறிடணும்

  நான் ஒரு நடிகை, எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதுவா மாறிடனும். அதுல என்னோட திறமையை நான் காட்டணும்கிறதுதான். அது எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் சரி. அது ஒரு சாதாரண கெஸ்ட் ரோலா இருந்தாலும் சரி, நம்மளோட பெஸ்ட் டேலண்ட்டை நாம் கொடுக்கணும் என்பதை நான் புரிஞ்சிகிட்டேன் என்கிறார் ஸ்ரீரஞ்சினி.
சென்னை: நான் என்ன புரிஞ்சிகிட்டேன்னா, நான் ஒரு நடிகை, எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதுவா மாறிடனும். அதுல என்னோட திறமையை நான் காட்டனும்கிறதுதான். அது எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் சரி. அது ஒரு சாதாரண கெஸ்ட் ரோலா இருந்தாலும் சரி, நம்மளோட பெஸ்ட் டேலண்ட்டை நாம் கொடுக்கணும் என்றார் ஸ்ரீரஞ்சினி சினிமா, டிவி சீரியல்களில் அம்மா, அக்காவாக நடிக்கும் ஸ்ரீரஞ்சினி ஸ்ரீரஞ்சனி தன்னுடைய சினிமா மற்றும் டிவி சீரியல் அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பைதான். இங்கிலீஷ்லயே பேசி வளர்ந்துட்டோமா, அதனால் எனக்கு அவ்வளவா தமிழ் வராது. சென்னைக்கு வந்த புதுசுல சுத்தமா தமிழ் தெரியாது. அப்புறமாதான் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேச கத்துக்கிட்டேன்.

எனக்கு முதன் முதலில் டயலாக் சொல்லிக்கொடுத்தது, டைரக்டர் சமுத்திரக்கனி தான். டைரக்டர் பாலச்சந்தர் சார் யூனிட்ல, சுந்தர்.கே.விஜயன் டைரக்சன்ல தான் அவர் எனக்கு டயலாக் சொல்லிக்கொடுத்தார். அதுக்காகவே நாங்க டெய்லி சண்டை போடுவோம்.

   
 
ஆரோக்கியம்