Back
Home » Bike News
லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!
DriveSpark | 9th Oct, 2019 12:56 AM
 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன தயாரிப்பு நிறுவனமான கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம், அதன் புத்தம் புதிய மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

  இந்த நிறுவனம் தயாரிக்கும் இ-பைக்குகள் குறைந்த செலவில் நிறைந்த பலனளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  அந்தவகையில், அதன் முதல் மாடலான மண்டிஸ் இ-பைக்கை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-பைக்கின் உற்பத்தியை கடந்த மூன்று வருடங்களாக இந்நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

  மேலும், இதற்கு அராய் அமைப்பு கடந்த 2018ம் ஆண்டுதான் ஒப்புதல் வழங்கியது.

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  இதையடுத்து விற்பனையில் இறங்கும் விதமான முயற்சியில் கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், அதற்கு சொந்தமான ஷோரூம்களில் மட்டுமே தற்போது விற்பனைக்காக இ-பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

  இதோடு நிறுத்திக்கொள்ளாமல், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இ-பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டம் தீட்டி வருகின்றது.

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  இந்த இ-பைக்கானது மொபட் மற்றும் பிரீமியம் மிதிவண்டி ரகத்தில் காட்சியளிக்கின்றது. இதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் அனைத்தும் பார்ப்பவர்களை உடனே கவரும் வகையில் இருக்கின்றது. அந்தவகையில், கூடுதல் வசதியான அமைப்புடைய இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இது, மற்ற இ-சைக்கிள்களில் காணப்படுவதை சற்று வித்தியாசமாக காணப்படுகின்றது.

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  இந்த இ-பைக்கை வாகன துறை சார்ந்த வல்லுநர்கள் 'நோ செல்லாண்' என்று கூறுகின்றனர். இதற்கு காரணம் இருக்கின்றது. ஏனென்றால், இந்த இ-பைக்கச் சாலையில் இயக்க ஹெல்மெட், பதிவெண் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

  ஆகையால், இதனை வாங்கும் உரிமையாளர்கள் சாலையில் போலீஸார் மடக்குவார்கள் என அஞ்ச தேவையில்லை.

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  அதேசமயம், நாம் என்னதான் சரியாக சாலை சென்றாலும், எதிரில் வருபவர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில், நமக்குதான் ஆபத்து. ஆகையால், பாதுகாப்பு அம்சங்களை அணிவது சால சிறந்தது.

  MOST READ: இனி அபராத செல்லாண் கிடையாது: அதற்கு பதிலாக வேறொரு ஆப்பு காத்திருக்கு... என்ன தெரியுமா அது..?

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  மண்டிஸ் இ-பைக் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், எலெக்ட்ரிக் யூடியூப் தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

  MOST READ: விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  மண்டிஸ் இ-பைக்கில் 250 வாட் திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், இதற்கு சக்தியை வழங்க 48v 14.5Ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது தனியாக கழட்டி மாட்டும் தன்மைக் கொண்டது.

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை செல்லலாம். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 2.5 மணி நேரமே போதும்.

  அதேசமயம், இந்த இ-பைக் அதிகபட்சமாக 100 கிலோ வரை சுமையேற்றி இழுக்கும் தன்மைக் கொண்டதாக இருக்கின்றது. மேலும், வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது.

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  இதுமட்டுமின்றி, கூடுதலாக பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியாதக இந்த இ-பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், இ-பைக்கின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், சிறிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் எல்இடி மின் விளக்கு உள்ளிட்டவை காட்சியளிக்கின்றன.

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  பல்வேறு சிறப்பம்சங்களைக் அடக்கியிருக்கும் இந்த இ-பைக்கினை கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம், ரூ 35 என்ற விலையில் விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளது. இத்துடன், இ-பைக்கின் மோட்டாருக்கு ஆயுள் முழுவதுமான வாரண்டியும், பேட்டரி உள்ளிட்டவைக்கு 2 வருட வாரண்டியையும் அது வழங்க இருக்கின்றது.

  தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மண்டிஸ் இ-பைக்கைப் போன்று, மற்றுமொரு மின்சார இருசக்கர வாகனத்தை அந்நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் எதுவுமே வேண்டாம்: போலீசும் அபராதம் விதிக்க மாட்டங்க... சூப்பர் இ-பைக் அறிமுகம்!

  அந்த எலெக்ட்ரிக் டூ வீலர் அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்திலும், ஒரு முழுமையான சார்ஜில் 100 கிமீ பயணிக்கின்ற வசதியுடன் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. இதனை அந்த நிறுவனம், அடுத்து வரும் வருடங்களில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த இ-பைக்கில் பயணிப்பதற்கு ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் என எதையுமே வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் அறிமுகமானது சூப்பர் இ-பைக். கூடுதல் தகவலை கீழே காணலாம்.

ஆரோக்கியம்