Back
Home » திரைவிமர்சனம்
ஜோக்கர் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்
Oneindia | 3rd Oct, 2019 04:35 PM

சென்னை: ஜோக்கர் என்ற ஹாலிவுட் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதில் ஜோகுயின் பீனிக்ஸ் ஜோக்கராக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஆர்தர் என்று பெயர் இட்டுள்ளனர். படத்தில் இவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர். ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியான போதே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. பேட்மேன் படத்தில் வரும் புகழ்பெற்ற கதாப்பாத்திரமான ஜோக்கரை அடிப்படையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சாதாரண ஒரு சைன் போர்டு வச்சிக்கிட்டு ஒரு தொழிலை பிரபலப்படுத்தும் நபராக வருபவர். அவரை இந்த சமூகம் அடிக்கிறது, ஒதுக்குகிறது. ஒரு திக்பிரமை பிடித்த நபராக சட்ட திட்டங்களுக்குள் சிக்கி தவிக்கும் இவர், எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்கும் போது தத்ரூபமாக இருக்கும். நம் அனைவரையும் நெகிழவைக்கும். சீட் நுனியில் அமர்த்திவிடும்.

ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் காண்போரை கவர்ந்து விடும் காட்சிகளாகவே அமைந்துள்ளது. இந்த படம் ஹாலிவுட் திரைப்பட தொழில்நுட்பங்களை பயன்படுத்திருப்பதால் நம் தமிழ் நாட்டில் எப்படி எடுபடும். மக்களை எப்படி கவரும் என்பது ஒரு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் இதை பார்க்கும் இளைஞர்களை அந்த கதாபாத்திரம் மாற்றிவிடுமோ என்ற அச்சம் தென்படுகிறது.

அமெரிக்காவில் இந்த படத்தை பார்க்கச் செல்லும் சிலர் படத்தில் அந்த கதாபாத்திரம் பயன்படுத்தும் உடைகளை அணிந்து செல்கிறார்களாம். இதனையடுத்து திரையரங்குகளில் போலீஸார் குவிந்துள்ளார்களாம். இந்த திரைப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நட்சத்திரங்களும் நடித்த விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

படத்தில் வரும் இசை பிரமாதம். காட்சித்திறன் செம தூள். ஜோக்கராக அவர் பேசும் டயலாக் அனைத்தும் பார்வையாளர்களின் கண்ணீரை வரவழைக்கும் என்பது நிச்சயம். ஒரு காட்சியில் அவர், நான் ரோட்டில் ஓரமாக இறந்திருப்பதை பார்த்தால் நீங்கள் அழுவீர்களா, என்று கேட்கும் விதம் நம்மை சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்த சமூகத்தில் ஏற்ற தாழ்வு மனப்பான்மை எப்படி ஊடுருவி கிடக்கின்றன என்பதை புரிந்துகொள்ளலாம். பார்க்க பார்க்க இது தான் நடக்க போகிறது என்று யூகிப்போம். ஆனால் திடீர் திருப்பம் ஏற்படுவதை பார்க்கலாம். ப்பா எப்படி எடுத்திருக்காங்கடான்னு தோணும். இந்த படத்திற்காக 20 கிலோவிற்கு மேல் எடை குறைந்து அந்த ஜோக்கராகவே வாழ்ந்திருக்கிறார்.

இந்த படம் கடந்த மாதம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போதே பார்வையாளர்களின் மனதை நெகிழ வைத்தது. திரைப்பட விழாவில் படம் முடிந்தும் படக்குழுவினரை பாராட்டி பார்வையாளர்கள் எழுந்து நின்று சுமார் 10 நிமிடங்கள் வரை தொடர்ந்து கைதட்டி உற்சாகப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மறைந்த ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜரை விட ஜோக்கர் கதாப்பாத்திரத்தில் பீனிக்ஸ் மிரட்டியுள்ளதாக பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

அப்போதே இது ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெறும் என்று பலரும் ஆருடம் சொன்னார்கள். அதே போல சிறந்த படம், சிறந்த நடிகர் என பல பகுதிகளில் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அனைத்து அபிநயங்களையும் கலவையாக செய்திருக்கும் திரைப்படம் என்று சொல்லலாம். தியேட்டரில் பார்ப்பது தான் நாம் இந்த ஜோக்கருக்கு செய்யும் மரியாதை என்று சொல்லலாம். அனைவரையும் ரசிக்க வைத்த ஜோக்கருக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா? பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்