Back
Home » ஆரோக்கியம்
தினமும் நைட் இத 1/4 டீஸ்பூன் சாப்பிட்டா, நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும் தெரியுமா?
Boldsky | 5th Oct, 2019 10:07 AM
 • தூக்கமின்மையின் விளைவு

  உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய இரவு நேரத்தில் தூங்காமல் இருந்தால், மறுநாள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சிறு வேலையும் செய்வதற்கு கடினமாக இருப்பதோடு, உடலில் ஆற்றல் இல்லாதது போல் உணரக்கூடும். முக்கியமாக எந்நேரமும் சோம்பேறித்தனமாக களைப்புடனேயே இருக்க வேண்டியிருக்கும்.

  MOST READ: திடீர்னு மூச்சு விடவே சிரமமா இருக்கா? அப்ப நிச்சயம் இதுல ஒன்னு தான் காரணமா இருக்கும்...


 • யாரெல்லாம் தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள்?

  தூக்கமின்மை பிரச்சனையானது அதிகளவு வெளிச்சம் அல்லது அதிக சப்தம் போன்ற வெளிக் காரணிகள் மட்டும் காரணமல்ல. பெரும்பாலும் இந்த பிரச்சனை மன அழுத்தம், மன இறுக்கம் அல்லது பதற்றம் போன்றவற்றால் கஷ்டப்படுபவர்களுக்கு தான் இருக்கும்.

  தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதற்கு முன், இயற்கை வழிகளை ஒருமுறை முயற்சித்துப் பார்ப்பது நல்லது. இதனால் அதிக மருந்து மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்ப்பதோடு, அதனால் சந்திக்கும் பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம்.


 • தூக்கமின்மையை சரிசெய்யும் மருந்து மாத்திரைகளால் சந்திக்கும் பக்க விளைவுகள்

  * தலைச்சுற்றல் மற்றும் பலவீனம்

  * வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல்

  * விசித்திரமான கனவுகள்

  * கவனம் செலுத்த முடியாமை

  * மூட்டுக்களில் எரிச்சல்

  * தலைவலி

  * நெஞ்செரிச்சல்

  * வயிற்று வலி

  * வாய் வறட்சி மற்றும் தொண்டை வறட்சி

  * பகல் நேர தலைச்சுற்றல்

  இப்போது தூக்கமின்மையை சரிசெய்ய உதவும் அற்புத பொருள் குறித்தும், அதை எடுக்கும் முறை குறித்தும் காண்போம்.

  MOST READ: ஆண்கள் ஏன் கட்டாயம் அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கணும் தெரியுமா?


 • ஜாதிக்காய்

  தூக்கமின்மையை சரிசெய்யும் சிறப்பான பொருள் தான் ஜாதிக்காய். இது தூக்கமின்மையை குணப்படுத்தும் இயற்கையான சக்திவாய்ந்த மயக்க மருந்தாக செயல்படுகிறது. மேலும் ஜாதிக்காய் மன அழுத்தத்தைக் குறைக்கும். ஏனெனில் இதில் மிரிஸ்டிஸின் என்னும் மன அழுத்த அளவு அதிகரிக்கும் நொதிகளின் உற்பத்தியைக் குறைக்கும் பொருள் அதிகளவில் உள்ளது.


 • இந்தோனேசியா

  ஜாதிக்காயின் பிறப்பிடம் இந்தோனேசியா. இது உண்மையில் மைரிஸ்டிகா ஃப்ராக்ரான்ஸ் என்று அழைக்கப்படும் பசுமையான மரத்தில் வளரும் பழத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட விதைகளால் ஆனது. தற்போது இது தென்னிந்தியா, மலேசியா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. இந்த ஜாதிக்காய் அழகுப் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது. ஏனெனில் ஜாதிக்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் பி1, வைட்டமின் பி6 மற்றும் கனிமச்சத்துக்களான மாங்கனீசு, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது.

  ஜாதிக்காயை மிதமான அளவில் எடுத்து வந்தால், உடல் ரிலாக்ஸாக இருக்கும் மற்றும் மனம் அமைதியடையும். இதன் விளைவாக தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்.

  MOST READ: உங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை!


 • உட்கொள்ளும் முறை

  ஒரு கப் நீரில் 1/4 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரை இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்க வேண்டும். ஆனால் இந்த பானத்தை கர்ப்பிணிப் பெண்கள் குடிக்கக்கூடாது.
இன்று பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் தூக்கமின்மை. உலகம் முழுவதும் ஏராளமானோர் இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் சுமார் 30 சதவீத மக்கள் தூக்கமின்மையால் கஷ்டப்படுகிறார்கள் மற்றும் இப்பிரச்சனையில் இருந்து விடுபட எதையும் செய்வதற்கு தயாராக உள்ளனர்.

தூக்கமின்மை என்பது இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியாத நிலையாகும். மேலும் நாள் முழுவதும் எவ்வளவு தான் கடினமாக வேலை செய்தாலும், எவ்வளவு சோர்வுடன் இருந்தாலும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படும் நிலை. தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், இரவு நேரத்தில் அடிக்கடி விழிப்பதோடு, அதிகாலையில் வேகமாக எழுந்துவிடுவார்கள்.

MOST READ: உங்கள் இதய தசையில் அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

   
 
ஆரோக்கியம்