Back
Home » ஆரோக்கியம்
விமானப்பயணத்தின் போது உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
Boldsky | 5th Oct, 2019 04:05 PM
 • சுவை மொட்டுக்கள் உணர்ச்சியிழப்பு

  விமானங்களில் வழங்கப்படும் உணவுகளின் சுவை எப்பொழுதும் சுமாரானதாகத்தான் இருக்கும். இதற்கு உண்மையான காரணம் விமானத்தில் நமது சுவைமொட்டுகள் சரியாக செயல்படாததுதான். உலர் விமானக் காற்று நாசி சளியை ஆவியாக்கும் மற்றும் கேபின் அழுத்தம் சவ்வுகள் வீக்கத்தை ஏற்படுத்தும், இவை இரண்டும் சுவைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த உணவு நறுமணங்களை முழுமையாகக் கண்டறிவதைத் தடுக்கின்றன. எனவே விமானத்தில் இருக்கும்போது உங்களால் உணவின் முழுமையான சுவையை உணர முடியாது. அதிக உயரத்தில் இருக்கும்போது நம்முடைய இனிப்பு மற்றும் உப்பை உணரும் திறன் 30 சதவீதம் குறையும்.


 • இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவதால் தூக்கம் வரும்

  விமான பயணத்தின் அதிக தூக்கம் வருவதற்கு காரணம் வசதியான இருக்கைகள் மட்டுமல்ல. விமானத்தில் இருக்கும் குறைந்த ஆக்சிஜன் அளவு உங்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. விமானங்கள் 6000 முதல் 8000 அடியில் இருக்கும்போது இருக்கும் அழுத்தத்திற்காக வடிவமைக்கப்பட்டது. உங்கள் இரத்தம் இருக்கும் குறைந்த ஆக்சிஜனையும் உறிஞ்சிவிடும். சறுக்கு வீரர்கள் இதனை நன்கு அறிவார்கள், அந்த உயரத்தில் தலைசுற்றல், தூக்கம்,சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் நீங்கள் அமர்ந்திருக்கும் போது உங்கள் இரத்தம் அசையாது.

  MOST READ: இந்த ராசிக்காரங்களோட நேர்மைதான் இவங்களோட பெரிய பிரச்சினையே... உங்க ராசியும் இதுல இருக்கா?


 • பாதங்களில் இரத்த அதிகமிருக்கும்

  நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது, உங்கள் கால்களிலும், பாதங்களிலும் இரத்தம் அதிகம் சேருகிறது. விமானத்தில் இருக்கும்போது சுற்றியுள்ள திசுக்களுக்கு இது உங்கள் நரம்புகளை விட்டு வெளியேறும்போது கால் வீக்கம் ஏற்படுகிறது. சில அரிதான சந்தர்ப்பங்களில் இது இரத்தகட்டாக மாறவும் வாய்ப்புள்ளது. இந்த இரத்தத்தை கால்களில் இருந்து இதயத்திற்கு அனுப்புவதே நல்லது. கால்களை தொடர்ந்து இயக்கத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.


 • வாயுப்பிடிப்பு

  விமானம் உயரமாக பறக்கும் போது கேபின் அழுத்தம் குறையும் போது, உங்கள் குடலில் உள்ள வாயு விரிவடைகிறது. உங்கள் வயிறு நிரம்பியதாகவோ அல்லது தடைபட்டதாகவோ உணரக்கூடும். எனவே நீங்கள் சில வாயுவை அகற்ற வேண்டும் என்றால், அதை வெளியே விடுங்கள். அவ்வாறு செய்யாமல் இருப்பது வலி, வீக்கம் போன்றவற்றிற்கு வ வழிவகுக்கும். வாயு ஏற்ற இறக்கங்கள் உங்கள் காதுகளையும் பாதிக்கும். விமானத்தில் பயணிக்கும் போது அழுத்தத்தைத் தக்க வைத்துக் கொள்ள காற்றை உள்ளேயும் வெளியேயும் அனுமதிக்கும் குழாய் விரைவாக செயல்படாது, எனவே காற்று வழியாகச் சென்று உங்கள் காதுக்கு சரியாக அழுத்தம் கொடுக்க முடியாது.


 • சரும பாதிப்பு

  விமானத்தின் அழுத்தம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட காற்று சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சும். உங்கள் சருமத்தை மீண்டும் உயிர்ப்பிக்க சில லோஷன்களை பயன்படுத்தலாம். விமானத்தில் பயணிக்கும் போது அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். விமான ஜன்னல்கள் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களை போதுமான அளவு தடுப்பதில்லை.

  MOST READ: உங்கள் முன்னாள் காதலன்/காதலியிடம் இந்த வார்த்தைங்கள தெரியாமகூட சொல்லிராதீங்க...!


 • மனஅழுத்தத்தை உயர்த்தும்

  இந்த பிரச்சினை முதல் முறை விமானத்தில் பயணிப்பவர்களுக்கு அதிகம் இருக்கும். பொதுவான பயம், லக்கேஜ் குறித்த கவலை, சுவையான உணவின்மை போன்ற பல பிரச்சினைகளால் உங்களின் மனஅழுத்தம் அதிகரிக்கும் அதிலும் பக்கத்து இருக்கையில் பிடிக்காதவர்கள் யாரேனும் அமர்ந்து விட்டால் இந்த பிரச்சினை இருமடங்கு அதிகரிக்கும்.
பயணம் செய்வது என்பது அனைவருக்குமே பிடித்த ஒன்றாகும். நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதிலும், பல்வேறு வகையான அனுபவங்களை வழங்குவதிலும் பயணங்கள் முக்கியமான இடத்தை வகிக்கிறது. பயணங்களில் அனைவரும் விரும்புவது பெரும்பாலும் விமானப் பயணம்தான். விமானப் பயணம் என்பது இன்னும் பலரின் கனவாக இருக்கிறது.

விமானப் பயணம் அனைவருக்கும் உற்சாகத்தை அளிப்பதாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் இதிலும் பல பக்கவிளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. விமான பயணத்தின் பக்க விளைவுகள் பற்றி பலரும் அறிவதில்லை, இது ஆபத்தானதாக இல்லை என்றாலும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த பதிவில் விமானப் பயணத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்