Back
Home » Bike News
விலையுயர்ந்த பைக்குகளில் ஜாலி ரைடு சென்றவர்களை திட்டிதீர்த்த பாதசாரிகள்... ஏன் தெரியுமா???
DriveSpark | 13th Oct, 2019 07:57 PM
 • விலையுயர்ந்த பைக்குகளில் சென்ற குழுவுக்கு ஏற்பட்ட சோகம்: மடக்கிபிடித்து திட்டிதீர்த்த பாதசாரிகள்!!!

  இந்தியாவில் சூப்பர் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு நிலவுகின்றது. இந்த பைக்குகளை பயன்படுத்தி வரும் ஒரு சில இளைஞர்கள் குழுவாக ஒன்று கூடி அவ்வப்போது ஜாலி ரைடு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

  மேற்கத்திய நாடுகளில் காணப்பட்டு வந்த இதுபோன்ற கலாச்சாரங்கள் அண்மைக் காலங்களாக இந்தியாவிலும் சற்று வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது.

 • விலையுயர்ந்த பைக்குகளில் சென்ற குழுவுக்கு ஏற்பட்ட சோகம்: மடக்கிபிடித்து திட்டிதீர்த்த பாதசாரிகள்!!!

  இதுபோன்று, சூப்பர் பைக்குகளில் இளைஞர்கள் குழுவாக வளம் வருவதை நாட்டின் முக்கியமான நகரங்கள் சிலவற்றில் நம்மால் காண முடியும்.

  இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் சூப்பர் பைக்குகளில் வலம் வந்த ஒரு குழுவை சக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் மடக்கிப்பிடித்து திட்டிதீர்ப்பதைப் போன்று காட்சி வெளியாகியுள்ளது.

 • விலையுயர்ந்த பைக்குகளில் சென்ற குழுவுக்கு ஏற்பட்ட சோகம்: மடக்கிபிடித்து திட்டிதீர்த்த பாதசாரிகள்!!!

  அந்த வாகன ஓட்டிகள் குழு, சாலையை ஆக்கிரமித்தவாறு சென்றது மட்டுமின்றி ஒரு சில விதிமீறலிலும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே, சூப்பர் பைக் ரைடர்கள் குழுவை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து வசைபாடியுள்ளனர்.

  அதிக ஒலியை வெளிப்படுத்தும் சைலென்சரைப் பயன்படுத்தியது, சாலையை ஆக்கிரமித்தவாறு பயணித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த பைக்கர்கள்மீது பொதுமக்கள் முன்வைத்தனர். இதுகுறித்த வீடியோவை நீங்கள் காணலாம்.

 • விலையுயர்ந்த பைக்குகளில் சென்ற குழுவுக்கு ஏற்பட்ட சோகம்: மடக்கிபிடித்து திட்டிதீர்த்த பாதசாரிகள்!!!

  இதன்காரணமாகவே, ஓர் நடுத்தர வயதுடைய நபர் அந்த வாகன ஓட்டிகளை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்.

  இந்த கூட்டத்தில் பல விலையுயர்ந்த பைக்குள் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், ஹார்லி டேவிட்சன், ஹோண்டா, சுஸுகி ஹயபுசா உள்ளிட்ட பல்வேறு பைக்குகள் அணி வகுத்து நிற்கின்றன.

 • விலையுயர்ந்த பைக்குகளில் சென்ற குழுவுக்கு ஏற்பட்ட சோகம்: மடக்கிபிடித்து திட்டிதீர்த்த பாதசாரிகள்!!!

  இந்த வாக்கும் ஏன் தொடங்கியது என்ற தகவல் தெரியவில்லை. இருப்பினும், பைக்கர்களின் விதிமீறல் காரணமாக அது ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

  MOST READ: சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

 • விலையுயர்ந்த பைக்குகளில் சென்ற குழுவுக்கு ஏற்பட்ட சோகம்: மடக்கிபிடித்து திட்டிதீர்த்த பாதசாரிகள்!!!

  சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக அந்த வீடியோக் காட்சிகள் உள்ளது. இருப்பினும், அதில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே வாக்கும்வாதம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது, பைக்குகள் சாலையின் நடுவிலேயே நிறுத்தப்படுகின்றன. அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் மற்ற வாகனங்களின் போக்குவரத்து குறைச்சலாக இருந்த காரணத்தால், டிராஃபிக் எதுவும் ஏற்படவில்லை.

  MOST READ: ஆபத்தில் சிக்கிய பென்ஸ் இ-கிளாஸ் கார்: மீட்பதற்கு பேரம் பேசிய உள்ளூர் வாசிகள்... எவ்வளவு தெரியுமா???

 • விலையுயர்ந்த பைக்குகளில் சென்ற குழுவுக்கு ஏற்பட்ட சோகம்: மடக்கிபிடித்து திட்டிதீர்த்த பாதசாரிகள்!!!

  இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகனங்களை மாடிஃபை செய்து இயக்குவது குற்றமாகும். பொதுவாக மாடிஃபை உதிரி பாகங்கள், அரசு அளவிடப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகளவிலான திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன. இது, சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.

  MOST READ: ரியல் ஹீரோ... சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்

 • விலையுயர்ந்த பைக்குகளில் சென்ற குழுவுக்கு ஏற்பட்ட சோகம்: மடக்கிபிடித்து திட்டிதீர்த்த பாதசாரிகள்!!!

  அதுமட்டுமின்றி, சக வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் செல்பவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது. இதுபோன்ற பல காரணங்களால் சந்தைக்கு பிறகான பாகங்களை பயன்படுத்த வேண்டாம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

 • விலையுயர்ந்த பைக்குகளில் சென்ற குழுவுக்கு ஏற்பட்ட சோகம்: மடக்கிபிடித்து திட்டிதீர்த்த பாதசாரிகள்!!!

  இருப்பினும், பல வாகன ஓட்டிகள் தங்களுடைய ரைடின்போது சாலையில் செல்லும் அநேகரின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாடிஃபை பாகங்களை பயன்படுத்தி சிக்கிலில் சிக்குகின்றனர். மேலும், அதற்கான பலனையும் அவர்கள் அனுபவிக்கின்றனர்.

 • விலையுயர்ந்த பைக்குகளில் சென்ற குழுவுக்கு ஏற்பட்ட சோகம்: மடக்கிபிடித்து திட்டிதீர்த்த பாதசாரிகள்!!!

  அதேசமயம், சாகசம் மற்றும் விதிமீறல் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாவதன் காரணமாகவும், அந்த சம்பவத்திற்கு உரித்தானவர்கள் போலீஸாரிடம் சிக்குகின்றனர்.

  எனவே, தற்போது விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி வளம் வரும் வீடியோவால், பைக்கர் குழுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, இந்த குழு விதிமீறலில் ஈடுபட்டிருந்தால், அதற்கான பலனை விரைவில் அனுபவிப்பார்கள் என தெரிகின்றது.
விலையுயர்ந்த பைக்குகளில் ஜாலி ரைடு சென்ற இளைஞர்களுடன் பாதசாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுபோன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆரோக்கியம்