Back
Home » லேட்டஸ்ட்
விலை ரூ.9,999: மூன்று ரியர் கேமரா: மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Gizbot | 9th Oct, 2019 01:49 PM
  • அக்டோபர் 12

    மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் வரும் அக்டோபர் 12-ம் தேதி மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.


  • மோட்டோரோலா ஒன் மேக்ரோ டிஸ்பிளே

    மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1520 x 720 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

    மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் டார்க்மோட்: கடைசியில் ஒரு விடை கிடைத்தது.!


  • ஹீலியோ பி70 சிப்செட்

    மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஹீலியோ பி70 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

    மலிவு விலையில் புதிய வசதிகளுடன் தெறிக்கவிட வரும் சியோமி ரெட்மி 8.!


  • 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி

    மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


  • மோட்டோரோலா ஒன் மேக்ரோ கேமரா

    மோட்டோரோலா ஒன் மேக்ரோ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.


  • 0400எம்ஏஎச் பேட்டரி

    மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட்,வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

    4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் மேக்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் பட்ஜெட் விலையில்

அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

   
 
ஆரோக்கியம்