Back
Home » லேட்டஸ்ட்
அக்டோபர் 16: 64எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8ப்ரோ.!
Gizbot | 9th Oct, 2019 06:46 PM

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி வரும் அக்டோபர் 16-ம் தேதி ரெட்மி நோட் 8ப்ரோ என்ற மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் 64எம்பி கேமராவுடன் வெளிவரும் என்பதால் அதிக

எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்து.

மேலும் இன்று ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு இந்த ரெட்மி 8 ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்களுடன் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340x1080பிக்சல் திர்மானம் மற்றும் 3டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார்+ 2எம்பி மூன்றாவது சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8ப்ரோ சாதனத்தில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனவும், பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி ஆதவுடன் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

   
 
ஆரோக்கியம்