Back
Home » லேட்டஸ்ட்
நோக்கியா 8.1 சாதனத்திற்கு கிடைத்தது ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!
Gizbot | 9th Oct, 2019 08:26 PM
  • நோக்கியா 8.1 டிஸ்பிளே

    நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2244 பிக்சல் திர்மானம் மற்றும் 18:7:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


  • ஸ்னாப்டிராகன் 710சிப்செட்

    இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு
    ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான்
    கூறவேண்டும்.

    விலை ரூ.9,999: மூன்று ரியர் கேமரா: மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!


  • நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு

    நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க
    மெமரி வசதியுடன் வெளிவரும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


  • நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா

    நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

    152 ஆப்களால் ஆபத்து பயனர்களை எச்சரிக்கும் ஜியோ-உடனடியாக இதை செய்யுங்க.!


  • 3500எம்ஏஎச் பேட்டரி

    இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு
    ஆதரவுகள் அடக்கம்.




எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

   
 
ஆரோக்கியம்