Back
Home » ஆரோக்கியம்
77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா?
Boldsky | 11th Oct, 2019 03:00 PM
 • வெஜிடேரியன் டயட்

  அமிதாப் பச்சன் ஒரு சுத்தமான சைவ உணவாளர். சில வருடங்களுக்கு முன் இறைச்சி சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். ஆனால் வயதாவதன் காரணமாக தற்போது முழுமையாக இறைச்சியைத் தவிர்த்து, சைவ உணவை மட்டுமே சாப்பிடுகிறார். அசைவ உணவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம். இதை வயதான காலத்தில் செரிமானம் செய்வது என்பது கடினம். இதை நன்கு அறிந்ததால், அமிதாப் பச்சன் அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூலம் பெறுகிறார்.


 • அன்றாட உடற்பயிற்சி

  அமிதாப் பச்சன் இன்னும் ஃபிட்டாக இருப்பதற்கு காரணம், உடற்பயிற்சி தான். இவர் ஒரு நாள் கூட காலையில் உடற்பயிற்சி செய்வதை தவறமாட்டார். ஒருவேளை காலையில் முடியாவிட்டால், மாலையில் செய்வாராம். அதுமட்டுமின்றி, இவர் மனதையும் உடலையும் இணைப்பதற்கு தினமும் யோகா செய்வாராம்.


 • டீ, காபி இல்லை

  அமிதாப் பச்சன் டீ, காபி குடிக்கமாட்டார் என்பது பலருக்கு ஆச்சரியத்தை தரலாம். ஆனால் முன்பு இவர் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது அதையும் விட்டுவிட்டார். காபியில் உள்ள அதிகப்படியான காப்ஃபைன், குறிப்பிட்ட வயதிற்கு பின் கேடு விளைவிக்கக்கூடியது. முக்கியமாக இது நினைவாற்றலை பாதிக்கும். ஆகவே தான் இவர் இப்பழக்கத்தை முற்றிலும் கைவிட்டாராம்.


 • எலுமிச்சை நீர்

  அமிதாப் பச்சன் நீர் மற்றும் எலுமிச்சை நீரை மட்டும் தான் குடிப்பாராம். தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பராமரிக்கும் மற்றும் எலுமிச்சை செரிமானத்திற்கு நல்லது. ஆகவே செரிமானம் சிறப்பாக நடைபெற தினமும் எலுமிச்சை நீர் அல்லது எலுமிச்சை ஜூஸைக் குடிப்பாராம்.


 • ஒரு டீஸ்பூன் தேன்

  ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒரு பேட்டியில் அமிதாப் பச்சனுக்கு தினமும் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடும் பழக்கம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இந்த பழக்கம் அவருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த பச்சன் குடும்படுத்திற்கே உள்ளதாம்.


 • சர்க்கரை மற்றும் அரிசியை சாப்பிடமாட்டார்

  அமிதாப் பச்சன் சாதம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை சாப்பிடமாட்டாராம். இவரது டயட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை எதுவும் இருக்காதாம். ஆரம்ப காலத்தில் இவர் கீர் மற்றும் ஜிலேபியை விரும்பி சாப்பிடுவாராம். ஆனால் உடல் ஆரோக்கிய நலனுக்காக அனைத்து சர்க்கரை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டாராம்.


 • காற்றூட்டப்பட்ட பானங்கள் இல்லை

  அமிதாப் பச்சன் குளிர் பானங்கள், சோடா அல்லது காற்றூட்டப்பட்ட பானங்களை எப்போதுமே குடிக்கமாட்டாராம். மேலும் ஒருமுறை பேட்டியில் கூட, கார்போனேட்டட் பானங்களல் அதிகளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் இருப்பதால், ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மீடியாக்களிடம் கூறியுள்ளார்.


 • ஆல்கஹால் இல்லை

  முந்தைய காலத்தில் அமிதாப் பச்சன் பீர் மட்டும் குடிப்பாராம். ஆனால் அந்த பழக்கத்தைக் கூட கைவிட்டு 3 வருடங்கள் ஆகிவிட்டதாம். ஆல்கஹால் ஒருவரது மனம் மற்றும் உடலை முழுமையாக அழிக்கக்கூடியது. எனவே இவர் நிச்சயம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.


 • புகைப்பழக்கமே இல்லை

  அமிதாப் பச்சனை திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போன்று பார்த்திருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் புகைப்பிடிக்கமாட்டாராம். ஆரம்ப காலத்தில் இவர் புகைப்பிடித்தாராம். ஆனால் தற்போது அப்பழக்கத்தை முழுமையாக கைவிட்டுவிட்டார். புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு. இந்த பழக்கத்தைக் கைவிட மன உறுதி அவசியம் தேவை. ஆனால் நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுள் வேண்டுமானால், இப்பழக்கத்தைக் கைவிட்டாக வேண்டும்.


 • சாக்லேட் பிடிக்காதாம்

  சாக்லேட்டில் கலோரிகள் அதிகம் உள்ளதால், அமிதாப் பச்சன் சாக்லேட் சாப்பிடமாட்டாராம். மேலும் சாக்லேட் உள்ள எந்த உணவுப் பொருளையும் தொடவே மாட்டாராம்.
பாலிவுட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன் இன்று தனது 77 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 'வயது ஒரு பொருட்டல்ல' என்பதற்கு உதாரணமான மிகச் சில நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவார். என்ன தான் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்த்து போராடினாலும், இன்னும் பாலிவுட்டில் மிகச்சிறந்த ஃபிட்டான நடிகராக இருக்கிறார். இதற்கு காரணம், இவர் தனது உடல் ஆரோக்கியத்தின் மீது கொண்டுள்ள அக்கறை தான்.

எவ்வளவு தான் வயதானாலும், எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், இவர் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க பார்க், தெருக்களில் ஜாக்கிங் செய்வதைக் காணலாம். இவர் தினமும் 16 மணிநேரம் வேலை செய்வாராம். என்ன நம்பமுடியவில்லை தானே! இவர் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவும் செய்கிறார். இவ்வளவு ஆற்றல் இவருக்கு கிடைப்பதற்கு பின்னணியில் உள்ள ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா?

MOST READ: தன்னுடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள்!

அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு அமிதாப் பச்சனின் ஃபிட்டான உடலுக்கும், ஆற்றலுடன் செயல்படுவதற்கும் பின் இருக்கும் அவரது சில பழக்கவழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தான் 77 வயதிலும் ஃபிட்டாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதன் ரகசியமும் கூட.

   
 
ஆரோக்கியம்