Back
Home » ஆரோக்கியம்
உங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா? அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...!
Boldsky | 12th Oct, 2019 03:20 PM
 • காய்கறி எண்ணெய்கள்

  பொதுவாக எண்ணெய்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. னோலா, சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்களில் அதிக அளவு ஒமேகா -6 உள்ளது, இது உங்கள் மூளையில் வீக்கத்தை ஊக்குவிக்கும் கொழுப்பு அமிலமாகும். எளிமையாகச் சொல்வதென்றால் வீக்கம்தான் ஒரு நல்ல மூளையை கெட்டதாக ஆக்குகிறது. ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உங்கள் எலும்புகள், தோல் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும், ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு ஒமேகா -3 களைக் கொண்ட எண்ணெய்களுடன் நீங்கள் சிறப்பாக இருக்கலாம். ஆனால் இது உங்களின் மூளைக்கு அவ்வளவு நல்லதல்ல.


 • டூனா மீன்

  டூனா மீன் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதனை அடிக்கடியாக சாப்பிடுவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். டூனா, சுறா போன்ற மீன்கள் அதிகம் சாப்பிடுவது உங்களின் மூளைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. உடலில் அதிகளவு பாதரசம் இருப்பது உங்கள் மூளையின் செயல்பாட்டை ஐந்து சதவீதம் குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த மீன்களில் பாதரசம் அதிகமுள்ளது.


 • வறுக்கப்பட்ட உணவுகள்

  வறுக்கப்பட்ட உணவுகள் பொதுவாகவே உங்களுக்கு பல தீமைகளை ஏற்படுத்தும் என்று நாம் நன்கு அறிவோம். அதில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக வறுக்கப்பட்ட உணவுகள் உங்கள் மூளையின் செயல்திறனை குறைக்கும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக வறுக்கப்பட்ட உணவுகளை உண்பது நினைவக இழப்பு, மறதி போன்ற மூளை குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். மேலும் அதிகளவு இதனை சாப்பிடுவது சிறுமூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

  MOST READ: உங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் எளிய வழிகள் என்னென்ன தெரியுமா?


 • சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள்

  குளிர்பானம், பழச்சாறு, எனர்ஜி பானங்கள் மற்றும் இனிப்பு தேநீர் ஆகியவற்றிடம் இருந்து விலகி இருப்பது உங்கள் மூளைக்கு நல்லதாகும். அதிகளவு சர்க்கரை மூளையில் நரம்பியல் சேதத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இவற்றில் இருக்கும் அதிகளவு ப்ரெக்டொஸ் ஆகும். இது உங்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.


 • ட்ரான்ஸ் கொழுப்புகள்

  உற்பத்தியாளர்கள் உணவின் ஆயுளை நீட்டிக்கவும், அவற்றின் உணவின் சுவையை அதிகரிக்கவும் டிரான்ஸ் கொழுப்புகளைப் பயன்படுத்துகையில், இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு எமனாக மாறுகிறது. கேக், குக்கீகள் மற்றும் மஃபின்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்வது உங்கள் மூளையில் பிளேக் கட்டமைக்கக்கூடும், அல்சைமர் நோய் போன்ற அறிவாற்றல் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.


 • சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

  உங்கள் மூளையை நீங்கள் 100 சதவீதம் பயன்படுத்த விரும்பினால் அரிசி, சர்க்கரை, பாஸ்தா போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் விரைவாக இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் இரண்டையும் அதிகரிக்கும். உங்கள் இரத்த சர்க்கரை அதிகமாக இருப்பதால், அல்சைமர் நோயுடன் இணைக்கப்பட்டுள்ள நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். முழு கோதுமை ரொட்டி, பழுப்பு அரிசி, குயினோவா, பார்லி மற்றும் ஃபோரோ ஆகியவை உணவு நார்ச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன, இது உங்கள் குடல் பாக்டீரியாவை வளர்த்து வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது, இவை உங்களின் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

  MOST READ: இந்த ராசிக்காரங்க தோல்வியில் இருந்து பீனிக்ஸ் மாதிரி மீண்டு வருவாங்களாம் தெரியுமா?


 • ஆல்கஹால்

  ரெட் ஒயின் குடிப்பது உங்களின் மூளைக்கு நல்லது. ஆனால் அனைத்து ஆல்கஹாலும் உங்கள் மூளைக்கு நன்மை பயக்கும் என்று கூறமுடியாது. அதிகளவு மது குடிப்பது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு நீங்களே செய்து கொள்ளும் துரோகமாகும். உங்கள் கிரானியத்தைப் பாதுகாக்க, உங்கள் மது அருந்தும் பழக்கத்தை மிதமாக வைத்திருங்கள்.
புத்திசாலியாக இருக்க வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் அனைவரும் அவ்வாறு இருப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் அவர்களுக்கு புத்திக்கூர்மை இல்லை என்பதல்ல, அவர்கள் தங்களின் மூளையை சரியாக உபயோகிக்கவில்லை என்றே கூற வேண்டும். அனைவருக்கும் ஒரே அளவுள்ள மூளையைதான் கடவுள் கொடுத்துள்ளார், ஆனால் அதனை எப்படி உபயோகிக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய புத்திக்கூர்மை நிர்ணயிக்கப்படுகிறது.

மூளையின் செயல்திறனை அதிகரிக்க அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பது அதிகப்படியான செல்போன் உபயோகிப்பும், டிவி பயன்பாடு மட்டுமல்ல. நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த பதிவில் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்