Back
Home » திரைவிமர்சனம்
அருவம் படம் எப்படி இருக்கு.. நிறை குறைகளை விலாவரியா புட்டு புட்டு வச்சிருக்காரு போஸ்டர் பக்கிரி!
Oneindia | 12th Oct, 2019 04:19 PM

சென்னை: அருவம் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தெளிவாக அலசியிருக்கிறார் போஸ்டர் பக்கிரி.

த்ரில்லர் ஆக்ஷன் படமான அருவம் நேற்று திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் சித்தார்த், கேத்தரின் தெரேசா, சதீஷ், ஆடுகளம் நரேன், மயில்சாமி, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் தனது ஸ்டைலில் படத்தின் போஸ்டரை ஒட்டியப்படியே படம் எப்படியிருக்கிறது என அலசியிருக்கிறார் போஸ்டர் பக்கிரி..

ஓகே.. இப்போ அருவம் படத்தோட ரிவ்யூ பாக்கலாம் வாங்க.. உருவம் நா உடம்போட இருக்குறது.. அருவம்னா உடம்பு இல்லாத ஆவி... இந்த படம் டைரக்டர் சாய் சேகருக்கு முதல் படம். இவர் பூபதி பாண்டியன் கிட்ட அசிஸ்டண்டா இருந்தவரு.. எனக்கு தெரிஞ்சு இந்த டைரக்டர் கோமாளி படத்துல வர்ற மாதிரி 10 வருஷமா கோமால இருந்துருப்பாரு போல.. 10 வருஷத்துக்கு முன்னாடி வந்த படத்தோட ஸ்க்ரின் பேட்டர்ன்.

வில்லன்கள் 4 பேரு உணவுல கலப்படம் பண்ணி மக்கள ஏமாத்துவானுங்க அதை ஹீரோ தட்டி கேப்பாரு.. அதுக்கு ஹீரோக்கு செம்ம அடி விழும் அதுக்கு ஹீரோ 4 வில்லனையும் பழி வாங்குவாரு க்ளைமேக்ஸ்ல எல்லாரும் ஒரு எம்ப்டி கிரவுண்ட்ல சேர்ந்து அவங்க சண்டைக் காட்சி ஹீரோ வின்.. வில்லன்ஸ் லாஸ்.. மனசாட்சியை தொட்டு சொல்லுங்க எத்தனை விஜயகாந்த் படம் பாத்துருப்போம். குறிப்பா 90ஸ் கிட்ஸ் நிறைய படம் பாத்துருப்பீங்க.. கலப்படத்தை பத்தி பேசுற படத்துலயும் பழைய கதைல பேய் பேட்டர்ன கலப்படம் பண்ணி மக்கள ஏமாத்தியிருக்காங்க.. நா கூட எங்க 4 பாட்டு இருக்கும், அதுல ரெண்டு வெளிநாட்டுல இருக்கும் ஒரு ஐட்டம் டான்ஸ் இருக்கும் அதுல கவர்ச்சியா ஆடுற பொண்ணு தொப்புள்ல இருந்து பேய் வந்து வில்லன கொல்லணும்னு பயந்தேன்.. நல்ல வேலையா படத்துல 2 பாட்டோட நிறுத்திக்கிட்டாங்க.

ஹீரோயினா கேத்தரின் தேரசா வராங்க, அவங்களுக்கு வாசனை அரியுற உணர்வு கிடையாது. அந்த விஷயம் புதுசா இருந்தாலும் படத்துக்கு அது தேவை இல்லாத கான்செப்ட்டா இருந்துச்சு..ஏன்னா படத்தோட கத வேற.. சிவனே னு வருசத்துக்கு ஒரு நல்ல படம் குடுத்துட்டு இருந்த சித்தார்த்த புடிச்சு சீரியஸா நடிக்க சொல்லி சிரிப்பேத்தி. அதும் அவர் சாப்பாட மோந்து பார்த்தே கலப்படமானு கண்டுபுடிப்பேன்னு சாப்பாட மூக்குல வச்சு உறுஞ்சி புருவத்த தூக்குற சீன பாக்க முடியாம தியேட்டர்ல வாந்தி வந்து ஒரே அசிங்கமா போய்டுச்சு குமாரு..

படத்துல ஏன்டா வச்சீங்கன்னு யோசிச்சாலும் ஹீரோயினுக்கு இருந்த அந்த ஸ்மெல்லிங் சென்ஸ் டிஸ்ஸபிலிட்டிங்ற நல்ல கான்செப்ட்டையும் இடைவேளைக்கு முன்னாடியே ஒரு விபத்துல அவங்களுக்கு அந்த ஸ்மெல்லிங் சென்ஸ வர வச்சு அது ஏன்டா வந்துச்சுனு யோசிக்குறதுக்குள்ள இண்டெர்வல்ல ஒரு டிவிஸ்ட் ஹீரோயின ரோப் டிரெஸ்ல வந்து நல்லா இருக்கேடா சிஜினு சொல்றதுக்குள்ள ரோப் மாதிரியே ஹீரோயினுக்கு டிரெஸ் தைச்சு குடுத்து அத போட முடியாம சங்கடத்துல நிக்குற ஹீரோயின பாத்து சிரிக்குறதுக்குள்ள ஹீரோவுக்கு இருந்த சஸ்பென்ஸ் சீன ஓபன் பண்ணி.. சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க படத்தை.. படம் இன்டர்வல்லயே முடிஞ்சு எழுந்து போலாம்..

செகன்ட் ஹாஃப்ல ஹீரோ உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியா வர்ற காட்சிகள் எல்லாம் கடமைக்கு எடுத்த கமர்ஷியலே தவிர இம்பிரஸிவ்வா இல்ல.. இதைவிட ஜோதிகா நடிச்ச 36 வயதினிலே படத்துல அழுத்தமா மனசு வலிக்கிற மாதிரி உணவு கலப்படத்தை சொல்லிருப்பாங்க.. இன்னும் ரெண்டு பேர கொள்ள வேண்டி இருக்குன்னு செகன்ட் ஹாஃப்ல வர்ற பழைய பஞ்சாங்க சீன்ல இன்டர்வல்ல வாங்கி குடுச்ச கோக் கோமட்ல வர்ற அளவுக்கு குத்தி எடுத்து.. க்ளைமேக்ஸ்ல பேய் ஓட்ட மாடர்ன் டிரெஸ்ல வர்ற நைஜீரியன் சாமியாருங்கள பாத்து பாவம்டா சித்தரித்து இந்த படமும் போச்சேனு வழக்கம் போல க்ளைமேக்ஸ்ல எல்லா வில்லனையும் சாவடிக்குற வரைக்கும் நாம சாகம படத்தை பாத்து வெளில வந்து.. அய்யா சித்தார்த்து நீ பரவா இல்லையா 100% காதல்னு ஒரு படம் இன்டர்வல் வரைக்குமே உட்கார முடியலனு எனக்கு நானே ஆறுதல் சொல்லிட்டு வந்துட்டேங்க.

   
 
ஆரோக்கியம்