Back
Home » பேட்டி
விஜய் சேதுபதி சீனு ராமசாமி காம்போவில் மீண்டும் நடிக்கணும் ஆசைப்படும் வசுந்தரா - எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
Oneindia | 31st Oct, 2019 12:54 PM

சென்னை: திரும்பவும் விஜய் சேதுபதி, டைரக்டர் சீனு ராமசாமி காம்பினேஷன்ல நடிக்கிறதுக்கு நான் எப்பவும் தயாரா ஆவலா இருக்கேன். அது வந்து ஒரு சென்டிமெண்டல நல்லா அழகா இருக்கும்னு நான் ஃபீல் பண்றேன் என்று நடிகை வசுந்தரா கூறியுள்ளார். நல்ல கதையம்சம் உள்ள படமா இருந்திச்சின்னா, எந்த ஒரு கேள்வியும் கேட்காம அந்த படத்தில் நடிக்க சம்மதிச்சிடுவேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை வசுந்தரா.

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து நடித்து வரும் வசுந்தரா, தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் தென்றலாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியவர். தன்னுடைய சினிமா அனுபவங்களை நமது ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நான் படங்களை பொதுவா செலக்ட் பண்றது எப்படின்னா, கதைய கேட்டு, நான் அந்த கதைக்குள்ளாற போய் சரியா அந்த கேரக்டரா உக்கார முடியுமான்னு பாத்து தான் நடிக்க சம்மதிப்பேன். சில படங்கள்ல நடிக்க சான்ஸ் வந்தது. இருந்தாலும் அதெல்லாம் ஒரு சீன் ரெண்டு சீன் அப்படி தான். அதெல்லாம் நம்மளால பண்ண முடியாதுன்னு தோணும்ல. நான் ஏற்கனவே பயந்தாங்கொள்ளி. அதனால பயந்துட்டு வேண்டாம்னு விட்டுடுவேன்.

எல்லாரும், ஏன் நீங்க பாவாடை தாவணி கட்டிகிட்டு கிராமத்து பொண்ணாவே நடிக்கிறீங்கன்னு கேக்குறாங்க. வாஸ்தவம் தான். ஒருவேளை எனக்கு பூர்வீகம் தஞ்சாவூர்ங்கிறதால, எனக்கு அந்த மாதிரி கேரக்டராவே கொடுக்குறாங்களான்னு தெரியலை. பரவாயில்லை, நம்ம ஊரு பொண்ணு, நல்லா செட்டிலாயிட்டேன், அவ்வளவு தான்.

இருந்தாலும், நான் இப்போ சூஸ் பண்ணினது எல்லாமே மாடர்ன் கேர்ள் கேரக்டர்கள் தான். அதனால, என்னால முடிஞ்சது அவ்வளவு தான். வில்லேஜ் கேரக்டர் பண்ணினாலும், பாவாடை தாவணிக்கு பதிலா, ஜீன்ஸ் டிசர்ட் தான் போடுவேன்னு நான் அடம் பிடிக்க முடியாதுல்லையா. என்னால முடிஞ்சது மாடர்ன் ரோல் கிடைச்சி அது புடிச்ச மாதிரி இருந்தா பண்றது. அந்த மாதிரி தான் இப்போ நான் நடிக்கிற படத்துல மாடர்ன் ரோல் பண்றேன். அநேகமா இது சூட் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்.

பிகில், கைதியை தொடர்ந்து இந்தியன் 2வில் இணைந்த பிரபல நடிகர்!

நான் தென்மேற்கு பருவக்காற்று படத்துல நடிக்கும்போது ரொம்ப ரொம்ப ஜாலியா இருந்தது. ஏன்னா, நான் முதன்முதலா கிராமத்துக்கு போனதுனால, சூட்டிங் பண்ணும்போது கூட அங்க இருக்குற ஆடு மாடுகள் கூட விளையாடிட்டு தான் இருந்தேன். படத்துலயே நான் ஆட்டுக்குட்டியோட விளையாடுற மாதிரி நெறைய சீன்லாம் இருக்கும். மொத்தத்தில அந்த படத்தோட சூட்டிங்ல ரொம்ப ரொம்ப என்ஜாய் பண்ணினோம்.

அந்த படத்தோட டைரக்டர் சீனு ராமசாமி, ரொம்ப யதார்த்தமா இருப்பாரு. ரொம்ப ஜாலியா குட்டி குட்டியா நடிச்சி காட்டுவாரு. உண்மையிலேயே அது ஒரு ஜாலியான அனுபவம். மறுபடியும் அந்த மாதிரியான கதையம்சம் உள்ள படத்துல நடிக்கிறதுக்கு சான்ஸ் கிடைச்சதுன்னா எந்த கேள்வியும் கேட்காம உடனே ஒகேன்னு சொல்லிடுவேன்.

அதனால், திரும்பவும் விஜய் சேதுபதி, டைரக்டர் சீனு ராமசாமி காம்பினேஷன்ல நடிக்கிறதுக்கு நான் எப்பவும் தயாரா ஆவலா இருக்கேன். அது வந்து ஒரு சென்டிமெண்டல நல்லா அழகா இருக்கும்னு நான் ஃபீல் பண்றேன்.

எனக்கு நேஷனல் அவார்டு கிடைக்கலைன்னு நிறைய பேர் ஃபீல் பண்ணி கமெண்ட் பண்றாங்கன்னு கேள்விப்பட்டேன். இருந்தாலும், அந்த மாதிரி கமெண்ட் வர்றதே எனக்கு அவார்டு கிடைச்ச மாதிரிதான். பொதுவா ஆடியன்ஸ் கிட்ட நல்லா ரீச் ஆகுறது தான் ஒரு ஆக்டரோட வேலை. அவார்டுகாகவே படம் பண்றதா இருந்தா, நம்ம கமர்ஷியலா படம் பண்ணவே முடியாது. ஆர்ட்டிஸ்டிக்கா தான் படம் பண்ண முடியும்.

நம்ம தமிழ் சினிமாவுல, ரெண்டையுமே ஆடியன்ஸ் ஏத்துக்கிட்டதுனால, எனக்கு பிடிச்ச விஷயம், ஆடியன்ஸுக்கு பிடிச்ச மாதிரி படம் பண்ணனும்கிறது தான் என்றார் வசுந்தரா காஷ்யப்.

   
 
ஆரோக்கியம்