முந்தைய காலத்தில் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களுக்கு காபி, டீ கொடுப்பதற்கு பதிலாக மோர் கொடுப்பார்கள். சொல்லப்போனால் அக்காலத்தில் மோர் இல்லாத வீடுகளே இருக்காது. மேலும் பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.
அதுவும் மோரில் இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து குடித்தால், ருசியாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும். இத்தகைய மோரை அன்றாடம் ஒருமுறை குடித்தால், பல்வேறு நன்மைகள் கிடைத்து, உடல் ஃபிட்டாக இருக்கும். இப்போது தினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.