Back
Home » உலக நடப்புகள்
சிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...
Boldsky | 7th Nov, 2019 06:00 AM
 • மேஷம்

  உங்க வார்த்தைகளில் கவனம் தேவை காரணம் அது உங்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்களைத் தரலாம். உங்க நிதி நிலைமை இப்போ சரியில்லாமல் இருக்கிறது. திடீர் செலவுகள் எட்டிப்பார்க்கும். உங்க பட்ஜெட்டை சமாளிக்க முடியாத அளவிற்கு இருக்கும். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக போகும். அமைதியான வீடு உற்சாகத்தை தரும். அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உங்க கூட வேலை செய்பவரைப்பற்றி விமர்சிக்க வேண்டாம் அது உங்களுக்கே விபரீதமாக முடியும். உங்க உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கும். கூர்மையான பொருட்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்க.

  அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  அதிர்ஷ்ட எண் : 8
  அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12 மணி - இரவு 7 மணி


 • ரிஷபம்

  இன்றைக்கு குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். உங்க அன்புக்குரியவரின் மூடு நன்றாக இருக்காது உங்க வார்த்தைகளை காப்பாற்ற முடியாமல் போகலாம். முதலீடு செய்ய இது சரியான நேரமில்லை. வேலை செய்யும் இடத்தில் சூடான விவாதங்களை தவிர்த்து விடுங்கள். குழந்தைகள் விசயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். அர்ஜெண்ட் இல்லாத விசயங்களுக்காக சந்திக்க வேண்டாம். பணம் விசயத்தில் இன்றைய நாள் கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
  அதிர்ஷ்ட எண் : 24
  அதிர்ஷ்ட நேரம் : காலை 9 மணி - இரவு 8.20 மணி


 • மிதுனம்

  இன்றைக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த உங்க பெண்டிங் வேலைகளை எல்லாம் செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களுடனான சந்திப்பு நன்மையில் முடியும். பிசினஸ் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மனைவியின் அன்பான அனுசரனையான ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். நிதி விசயங்களில் கவனமாக இருங்க. இல்லாவிட்டால் சிலர் ஏமாற்றிவிடுவார்கள். திடீர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உடல்நிலையில கவனமாக இருங்க. உணவு விசயத்தில் கவனமாக இல்லாவிட்டால் வயிறு உபாதைகள் வந்து விடும் கவனம்.

  அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
  அதிர்ஷ்ட எண்: 2
  அதிர்ஷ்ட நேரம் : இரவு 1.30 மணி - இரவு 8 மணி


 • கடகம்

  முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்றைய தினம் ஒத்திப்போடுங்கள். உங்க உடம்பு பிரச்சினை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இன்றைக்கு உங்களுக்கு சுமாரான நாள்தான் மறுநாள் நல்ல நாள் அதுவரை காத்திருக்கவும். உங்க உடல் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். வேலையில் கவனமாக இருங்க. குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் இன்றைக்கு சாதாரண நாளாகவே அமையும். தம்பதியரின் நெருக்கம் அதிகரிக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
  அதிர்ஷ்ட எண் : 16
  அதிர்ஷ்ட நேரம் : இரவு 1.30 மணி மாலை 3.30 மணி


 • சிம்மம்

  இந்த நாள் உங்களுக்கு காதல் விசயங்களுக்கு ஏற்ற நாள். சில பாசிட்டிவ் விசயங்கள் உங்க உறவுகளில் நடைபெறும். உங்க காதலை வீட்டில் பெரியவர்கள் ஒத்துக்கொள்வார்கள். நாளின் பிற்பகுதியில் பயணங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. பொரித்த வறுத்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். தேவையான நேரத்தில ஓய்வெடுங்க. நிதி நிலைமை இன்றைக்கு அற்புதமாக இருக்கிறது. குடும்ப வாழ்க்கையில் துணையின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். தம்பதியர் இடையே சூடான விவாதங்களை தவிர்த்து விடுங்கள். உம்முன்னு கம்முன்னு இருங்க இன்றைய நாளை ஜம்முன்னு கடத்திடலாம்.

  அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
  அதிர்ஷ்ட எண் : 12
  அதிர்ஷ்ட நேரம் : இரவு 12.45 மணி - இரவு 6 மணி


 • கன்னி

  இந்த நாள் உங்களுக்கு மிக மிக நல்ல நாள். உங்க உற்சாகம் அதிகரிக்கும். நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். உங்க முயற்சியும் கடினமான வேலையாலும் நல்லது நடக்கும். முக்கிய வேலைகளை ஈசியாக செய்து முடிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் இன்றைக்கு நல்ல நாள். வாழ்க்கைத்துணையுடன் உணர்ச்சிகரமான பிணைப்பில் ஈடுபடுவீர்கள். உங்க நெருங்கிய உறவினர் உடனான சந்திப்பு நன்மையில் முடியும். நிதி நிலைமை இன்றைக்கு சந்தோஷத்தை கொடுக்கும். செலவுகளை உங்க கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் உற்சாகத்தை கொடுக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் : புளு
  அதிர்ஷ்ட எண் : 15
  அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி - இரவு 9.20 மணி


 • துலாம்

  சில புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பண விசயத்தில் நல்ல செய்திகள் தேடி வரும். பிசினஸ் செய்பவர்களுக்கு பொருளாதாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்க கனவுகளை நனவாக்கும் முக்கிய முடிவுகளை நீங்க எடுக்க வேண்டியிருக்கும். உங்க காதல் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்கள் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். பிரச்சினைகளை சுமூகமாக முடித்துவிடுங்கள்.

  அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  அதிர்ஷ்ட எண் : 30
  அதிர்ஷ்ட நேரம் : காலை 11.30 - 6.30 மணி


 • விருச்சிகம்

  இன்றைக்கு நீங்க எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் உற்சாகமாக இருப்பீர்கள். வாழ்க்கை துணையுடனான பழைய சண்டைகள் பிரச்சினைகளை மறந்து விடுவீர்கள். வேலையில் திட்டமிட்டபடி அனைத்தையும் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உங்க முடிக்காத வேலைகளை நீங்க ஒத்தி வைப்பது நல்லதல்ல. மாலைக்கு மேல் நல்ல செய்திகள் தேடி வரும். பொருளாதார நிலை உயர்வடையும். எதையும் அவசரம் அவசரமாக செய்து முடிக்க வேண்டாம் அது பிரச்சினையில் முடியும்.

  அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
  அதிர்ஷ்ட எண் : 32
  அதிர்ஷ்ட நேரம்: மாலை 3.30 மணி இரவு 8.மணி


 • தனுசு

  இன்றைய தினம் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் அது உங்களை அப்செட் ஆக்கும். உங்க அட்டிடியூட் மாற்றுவதற்கு இது சரியான சந்தர்ப்பம். நீங்க சந்தோஷமாக கடினமாக வேலை செய்தால் அதற்கேற்ப நல்ல ரிசல்ட் கிடைக்கும். பிற்பகலில் வேடிக்கையான சில சம்பவங்கள் நிகழலாம். உங்க மனதை உற்சாகப்படுத்த நண்பர்களுடன் வெளி இடங்களுக்கு செல்வீர்கள். முக்கிய வாய்ப்புகள் உங்க வாசல்கதவை தட்டும் விழிப்புணர்வோடு இருங்கள். உங்க நிதி நிலைமை இன்றைக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். உங்க உடல் ஆரோக்கியத்திலும் மனைவியின் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க நல்லதே நடக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
  அதிர்ஷ்ட எண் : 6
  அதிர்ஷ்ட நேரம் : காலை 8 மணி - இரவு 2.15 மணி


 • மகரம்

  இன்றைய தினம் உங்க மண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க ரொம்ப நல்ல நாள். உங்க தரப்பு கருத்துக்களை புரிந்து கொள்வார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். எது சரி எது தவறு என்பதை புரிந்து கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்றைக்கு தவிர்த்து விடுங்கள். உங்க பிஸியான வாழ்க்கையிலும் நீங்க சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஒருவழியாக உங்க வாழ்க்கை துணை உடனான பிரச்சினை இன்றைக்கு முடிவுக்கு வரும்.

  அதிர்ஷ்ட நிறம் : க்ரே
  அதிர்ஷ்ட எண் : 9
  அதிர்ஷ்ட நேரம் : மாலை 2 மணி - இரவு 7 மணி


 • கும்பம்

  உங்க நிதி விசயத்தில் இன்றைக்கு நீங்க கவனமாக இருக்கவேண்டிய நாள். நிதி முதலீடுகளில் கவனம் தேவை. அனுபவசாலிகள் சொல்லும் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டால் பிரச்சினைகள் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். வேலை செய்யும் இடங்களில் நீங்க முடிக்க முடியாத வேலைகளை முடிப்பீர்கள். உங்க சக வேலையாட்கள் உயரதிகாரிகளுடன் இணக்காமவே செல்லுங்கள் நல்லதாக நடக்கும். உங்க பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால் மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவும். ரிஸ்க் எடுக்க இது உகந்த நேரமல்ல. மாலையில் அதிக பணவரவு இருக்கும் உங்களின் பழைய கடன்கள் அடைபடும்.

  அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
  அதிர்ஷ்ட நம்பர் : 20
  அதிர்ஷ்ட நேரம் : காலை 6.30 மணி - மாலை 4 மணி


 • மீனம்

  வெற்றிக்காக நீங்க நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வேலையில் கவனம் செலுத்துங்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொருளாதார நிலையில் நிறைய நல்லதும் கெட்டதும் மாறி மாறி நடக்கும். உங்களுடைய பிரச்சினைகளை தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்வீர்கள். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் வேலைகளை முடிக்க முடியாமல் திணறுவீர்கள் உயரதிகாரிகளின் கோபத்தை சம்பாதிப்பீர்கள். பயணத்திற்கு இந்த நாள் ஏற்றதல்ல.

  அதிர்ஷ்ட நிறம் : காவி
  அதிர்ஷ்ட எண் : 38
  அதிர்ஷ்ட நேரம் : மாலை 2.15 மணி இரவு 7.20 மணி
தினசரி ராசிபலன்கள் என்பது உங்களுக்கு சிறியதும் பெரியதுமாக தகவல்களை சொல்வதற்குத்தான். உங்களுடைய சொந்த வாழ்க்கை நிதி திட்டமிடல், திருமணத்திற்கு வரன் பார்த்தல், வேலை, பிசினஸ் போன்றவைகளுக்கு இன்றைய ராசிபலன் சொல்வதை படித்து விட்டு முடிவு செய்யுங்கள்.

   
 
ஆரோக்கியம்