Back
Home » Car News
2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...
DriveSpark | 7th Nov, 2019 03:33 PM
  • 2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...

    இந்நிலையில் இந்திய வாடிக்கையாளர்களின் பார்வைக்காக ஸ்கோடா காமிக் எஸ்யூவியின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இந்த புகைப்படங்களில் உள்ள காமிக் கார் ஐரோப்பிய மாடலில் உள்ளது.


  • 2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...

    ஹூண்டாய்யின் க்ரெட்டா எஸ்யூவி காரின் அளவில் தென்படுகின்ற இந்த காமிக் எஸ்யூவி, ஃபோக்ஸ்வேகனின் எம்கியூபி ஏ0 பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது இந்த கார் 'இந்தியன்-இஸ்ட்' எம்கியூபி ஏ0 பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். மேலும் இந்த காரின் இந்தியாவிற்கான பெயரும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.


  • 2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...

    4.2-4.3 மீட்டரில் இருக்கும் இந்த எஸ்யூவியின் வீல்பேஸும் இந்திய அறிமுகத்தில் இண்டர்நேஷ்னல் வெர்சன்களை விட பெரியதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட முக்கியமாக பெரிய அளவிலான பின்புற இருக்கை பரப்பை இந்த காமிக் எஸ்யூவி கொண்டுள்ளது.


  • 2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...

    இண்டர்நேஷ்னல் காமிக் எஸ்யூவியுடன் மிக நெருக்கமாக ஒத்து போகக்கூடிய டிசைன்களிலேயே இந்த எஸ்யூவி இங்கு வெளியாகவுள்ளது. மேலும் இந்திய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்திய ஸ்டைலும் சிறிது சேர்க்கப்படும் என்பது உறுதி. இதையெல்லாம் விட சிறந்த முறையில் பயன்படுத்தும் விதமான க்ரோமை இந்த காரில் எதிர்பார்க்கலாம்.


  • 2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...

    இன்போடெயின்மெண்ட் திரை இந்த காமிக் காரில் பெரிய அளவில் டேஸ்போர்ட்டின் மையப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களின் மூலம் பார்த்தால் 8.0 இன்ச்சில் தொடுத்திரை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது.


  • 2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...

    ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் மாடலிலும் பனோராமிக் சன்ரூப் அமைப்பை வழங்கும் திட்டத்தை கண்டிப்பாக வைத்திருக்கும். காரின் கேபினில் உள்ள ஐந்து இருக்கைகளில் பின்புற இருக்கைகளும் அட்ஜெஸ்ட் செய்யும் விதத்திலேயே வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    Most Read: காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...


  • 2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...

    காமிக் காரின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள புகைப்படத்தின் மூலம் தெளிவாக தெரியவில்லை. இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகும்போது டர்போ-பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த என்ஜினுடன் சிஎன்ஜி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படவுள்ளது. ஸ்கோடா நிறுவனம் இந்த காரில் டீசல் என்ஜின் தேர்வை வழங்கும் எண்ணத்துடன் இல்லை.


  • 2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...

    இந்த ஸ்கோடா எஸ்யூவி தான் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் இந்தியா 2.0 திட்டத்தின் மூலம் வெளியாகும் முதல் காராகும். இதனுடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் தனது சொந்த தயாரிப்பில் மிட்-சைஸ் எஸ்யூவி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த இரு கார்களும் ஒரே எம்கியூபி ஏ0 பிளாட்ஃபாரத்தில் தான் தயாரிக்கப்படவுள்ளன.

    Most Read: பல கோடி மதிப்புள்ள மஞ்சள் நிற காரை வாங்கிய பிரபல இயக்குநர்: எதற்காக இதை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா


  • 2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...

    இந்த இரு மாடல்களும் அறிமுகமானவுடன் அவ்வளவு எளிதாக இந்திய மார்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவிட முடியாது. ஏனெனில் இவற்றுடன் கடுமையாக போட்டியிட ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்கள் உள்ளன.




இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் ஸ்கோடா நிறுவனத்தின் காமிக் மிட்-சைஸ் எஸ்யூவி அறிமுகமாகவுள்ளது. இதற்கு முன்னதாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிக்காக வைக்கப்படவுள்ளது.

   
 
ஆரோக்கியம்