உலகில் அதிகளவு மக்களால் சாப்பிடப்படும் முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளையாகும். இதன் சுவை மட்டுமின்றி இதன் மருத்துவ குணங்களுக்குகாக இதனை சாப்பிடுபவர்கள் ஏராளம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அளப்பறியா நன்மைகளை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாதுளையால் சில ஆபத்துக்களும் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.