வளர்ந்து வரும் நவீன உலகில் உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, சூழல்கள் மற்றும் கால நிலை மாற்றத்தினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு உருவாகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் டிவி, கிரைண்டர், மிக்ஸி இருப்பது போல் சர்க்கரை நோயும் இருக்கிறது. சாதாரணாமாக முன்பு எல்லாம் வீட்டிற்கு வந்த விருதாளிகளிடம் எப்படி இருக்கிங்க என்று கேட்பது மாறி உங்களுக்கு சர்க்கரை நோயின் அளவு எவ்வளவு இருக்கிறது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். 35 வயதிற்குமேல் சர்க்கரை நோய் என்பது சாதாரணமாக மாறிவிட்டது.
முன்பெல்லாம் சர்க்கரை நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோய் என்று கூறுவதுண்டு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் சர்க்கரை நோய் இருக்கிறது. தினமும் காலையில் எழுந்து டீ, காபி குடிப்பதைப் போன்று, இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரிகைகள் எடுத்துக்கொள்வதும் நம் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. உலகில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா.