Back
Home » ஆரோக்கியம்
இந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா?
Boldsky | 16th Nov, 2019 05:51 PM
 • மருத்துவ குணம் கொண்ட கவா

  1886ஆம் ஆண்டில் இருந்து கவாவின் மருத்துவ குணம் உலகிற்கு தெரியவந்தது.இத்தாவரத்தின் வேர் நரம்பு மண்டல நோய்களை போக்கும், தசை நோய்களை குணப்படுத்தும். மருத்துவ குணம் நிறைந்த இந்த தாவரம், அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரோலியாவில் மருந்திற்காக பயிரிடப்படுகிறது. சதைப்பற்றுடைய தண்டும், இதய வடிவிலான இலைகளையும் கொண்ட இத்தாவரம் என்றும் பசுமையுடன் இருக்கும்.

  இத்தாவரத்தின் தண்டின் அடிப்பகுதியும், வேரும் மருத்துவ குணம் உடையவை. கவா ஒரு பொழுதுபோக்கு பானமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இது தூக்கமின்மை மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்க மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. கவா தாவரத்தின் வேரில் காணப்படும் கவாலோக்டோன்கள், கருவயன், அல்கலாய்டு பிப்பெரிடைன், பைபர் மெதி சிடிசைன், ஆகியவை மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளன. இப்போது கவாவின் நன்மைகளைக் காண்போம்.


 • தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம்

  கவா தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தை குறைத்து மனநிம்மதியை ஏற்படுத்தும். ஜர்னல் ஆஃப் அஃபெக்டிவ் கோளாறுகள் என்ற இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வின்படி, மனநோய் அல்லாது கவலைக் கோளாறுகளுடன் தொடர்புடைய தூக்கமின்மைக்கு கவா சாறு மிகுந்த நன்மை பயக்கும். தூக்கம் வராமல் அவதிப்படும் இன்ஸோமினியா நோயாளிகளுக்கு இது சிறந்தது. இந்த கவா டீ குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

  கவாவில் காணப்படும் கவாலேக்டேக்டோன்கள் எனப்படும் வேதிப்பொருள் மைய நரம்பு மண்டல அழுத்தத்தினை குறைப்பதுடன் வலிப்புக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும், தசை இருக்கம் மற்றும் மன கிளர்ச்சி அழுத்தங்களை குணப்படுத்தவும் கவா மருந்து உதவுகிறது.

  MOST READ: வாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள்? அப்படின்னா கட்டாயம் இத படிங்க...


 • புற்றுநோய் பாதுகாப்பு மற்றும் மூளையின் செயல்திறன்

  2004 மனித மனோதத்துவவியல் ஆய்வின் படி, கவா டீ பருகுவதால் மூளையின் செயல்திறன் மேம்படுகிறது என்கிறது. கவா தாவரத்தின் சாறு அறிவாற்றலை அதிகரிப்பதோடு மகிழ்ச்சியையும் தருகிறது. கவா சாறை பருகுவதால் மார்பக, சிறுநீர்ப்பை மற்றும் பெருங்குடல் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிரான சைட்டோடாக்ஸிசிட்டியைக் கொண்டுள்ளது. ஆதலால் புற்றுநோய் ஏற்படாமல் கவா பாதுக்காக்கிறது.


 • அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்

  கவாவில் உள்ள கவாலாக்டோன்கள் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பியல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் மூளை சேதத்தைத் தடுக்க உதவுகிறது.

  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கவா டீயை பருகினால் விரைவில் குணமடைவார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் கவா டீ பருகுவதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்கி அதை பாதுகாக்க உதவுகிறது.


 • பதற்றம் மற்றும் தோல் வறட்சி நீங்கும்

  வேரில் இருக்கும் வேதிப்பொருட்கள் ஊக்குவியாகவும், வலுவேற்றியாகவும், செயல்பட வைக்கும். இது அதீத படபடப்பு மற்றும் கவலைகளைப் போக்கும். இது வலி போக்குவி. நன்றாக தூக்கத்தை தூண்டும். சிறுநீர்ப்பை கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.

  இந்த கவா கவா மருந்தை வாராத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் உட்கொண்டால் மது குடித்து ஈரல் கெட்டுப்போனவர்களுக்கு குணம் தெரியும் என்கின்றனர் மருத்துவர்கள். தோல் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இந்த மருந்து வாய்ப்புண், மற்றும் பல்வலி ஆகியவற்றில் கொப்பளிப்பாகப் பயன்படுகிறது.


 • கவாவின் பக்க விளைவுகள்

  கவாவை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றாலும், கவா செடியை நுகர்வதால் கல்லீரலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. பின்னர் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினர் கவா தொடர்பான தயாரிப்புகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாக எச்சரித்தனர்.

  * அஜீரணம்

  * தலைவலி

  * மயக்கம்

  * சொறி ஏற்படுதல்

  * வயிற்றுப்போக்கு

  * தலைச்சுற்றல்

  * கல்லீரல் பாதிப்பு


 • கவா டீ ரெசிபி

  கவாவை காப்ஸ்யூல்கள், தேநீர் மற்றும் டிஞ்சர் வடிவத்தில் உட்கொள்ளலாம். கவாலாக்டோன்களின் தினசரி அளவு 250 மி.கி.க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  * ஒரு கப் சுடு நீர்

  * 2-4 டீஸ்புன் உலர்ந்த கவா பொடி

  சுடு நீரில் உலர்ந்த கவா பொடியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 4 நிமிடங்கள் வரை இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். ஒரு வடிகட்டி பையில் அதை ஊற்றி வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு டீ கப்பில் ஊற்றி அருந்தலாம். இப்போது சுவையான ஆரோக்கியமான கவா டீ ரெடி.

  MOST READ: இந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்... உஷாரா இருங்க...!


 • கவா டீ பருகுவதால் ஏற்படும் நன்மைகள்


  * நிம்மதியான உறக்கம்

  * மூளை செயல் திறன் அதிகரித்தல்

  * போதையை கட்டுபடுத்துதல்

  * பக்கவாதத்திலிருந்து மீட்டல்

  * மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்தல்

  * மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணி

  * அழற்சி எதிர்ப்பு பொருள்

  * சரும பயன்கள்

  கவா பல்வேறு உடல்நல நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும். இருப்பினும், கவா கல்லீரலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்ற அறிக்கைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலை கொண்டுள்ளனர். எனவே, கவாவை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பசிபிக் தீவுகளில் இயற்கையாக காணப்படும் தாவரம் கவா(பைபர் மெதிஸ்டிகம்). இச்செடியின் வேரில் இருந்து பெறப்படும் சாறு உடலுக்கு உகந்தது எனக் கூறப்படுகிறது. இச்செடியின் இலை இதய வடிவில் இருக்கும். இதை கவா கவா, அவா என்று பல பெயர்களில் அழைப்பார்கள். பசுபிக் மாக்கடல் பகுதியைச் சுற்றிய பாலினேசியத் தீவுகளான ஹவாய், வானுவாட்டு, மைக்ரோனேசியா ஆகிய நாடுகளின் பண்பாட்டிலும், உணவுப் பழக்கத்திலும் கவா முக்கியத்துவம் பெற்றது. கவா செடி தொண்டை வலியைப் போக்கக் கூடியது எனவும், நல்ல மனநிலையைத் தரக் கூடியது எனவும் கூறப்படுகிறது.

தென் பசுபிக் நாடுகளான பிஜி, ஹவாய், டோங்கா, நியூகினியா உள்ளிட்ட தீவுகளில் இது மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தாவரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பானம் திருமணம், பிறப்பு, மரணம் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளிலும் பானமாக பருகுகின்றனர்.

 
ஆரோக்கியம்