குடிப்பழக்கம் என்பது உடல் நலத்திற்கு மிகவும் கேடான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். குடிச்சா போதை ஏறி திண்டாடுபவர்களும் உண்டு. ஆனால் சில பேருக்கு குடிக்காமலேயே போதை ஏற்படுமாம். இது ஒரு வகை நோய்க்குறி என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக குடிப்பழக்கத்தில் இருப்பவர்கள் அல்லது குடிப்பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த ஆட்டோ மதுபான நோய்க்குறியால் பாதிக்கப்படுகிறார்கள். இது ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் கூட குடிக்காவிட்டாலும் குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டுவார்களாம். அதைப் பற்றிய விரிவான தொகுப்பு தான் இந்த கட்டுரை.