Back
Home » ஆரோக்கியம்
உங்களுக்கு உடல் எடை குறையணுமா? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..!
Boldsky | 28th Nov, 2019 05:43 PM
 • பழங்களில் உள்ள சத்துக்கள்

  பழங்களில் குறைந்த அளவிலான கொழுப்பு, சோடியம் மற்றும் கலோரிகளே உள்ளன. அத்துடன் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் C மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்களும் பழத்தில் உள்ளன. யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றாலும் அல்லது சாப்பிடமுடியாத சூழலில் இருந்தாலும் "பழங்கள் சாப்பிடுங்கள்" என்பது மருத்துவரின் அறிவுரையாக இருக்கும். நிறைய பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.


 • இதய நோய்களைத் தடுக்க உதவும்

  பழத்தில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு வயதாகும்போது பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். ஐந்து பழங்களை அல்லது காய்கறிகளை சாப்பிடும் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 15 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

  இரத்தத்தின் ஆரோக்கியமான சுழற்சியை ஊக்குவிக்கப் பழங்கள் உதவுகின்றன. இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதில் குறிப்பாகப் பயனளிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


 • நீரிழிவு நோய்க்கான ஆபத்தை குறைக்கலாம்

  நீரிழிவு நோய் அனைவரையும் பாதிக்கிறது. இதில், பெரும்பாலன மக்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்சுலினை சரியான வழியில் பயன்படுத்த இயலாமை அல்லது உடலில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்ய இயலாமை ஆகியவற்றால் நீரிழிவு நோய் வகைப்படுத்தப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த பழங்களை உண்ணுவதால் உடலில் இன்சுலின் அளவு மேம்படுகிறது.

  பழங்களை தினமும் சாப்பிட்டுவருவதால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்கிறது புதிய ஆய்வு ஒன்று. குறிப்பாக, திராட்சை, ஆப்பிள், புளூபெர்ரி போன்ற பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும் ஆபத்து 25 சதவீதம் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் பழச்சாறு குடிக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு டைப் 2 டயபடீஸ் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது எனவும் கூறியுள்ளனர்.

  MOST READ: உடலுறவின்போது பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததைபோல நடிப்பதற்கு இதுதான் காரணம்...!


 • புற்றுநோயை தடுக்க உதவுகின்றன

  நமது உடலை சரியாக கவனித்து கொள்ளாவிட்டால் பல வகையான புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பழங்களை சாப்பிடுவதன் மூலம் சில புற்றுநோய்களுக்கான அபாயத்தை குறைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். பழங்களில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன.

  பழத்தில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் சில வகையான புற்றுநோய்களிலிருந்து நமக்குப் பாதுகாப்பு வழங்குகின்றன. அன்றாட உணவில் நிறைய பழங்களை சேர்ப்பது உணவுக்குழாய், வயிறு மற்றும் நுரையீரல் பகுதிகளில் புற்றுநோய் உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கும். மேலும் வாய், தொண்டை, கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளிலும் புற்றுநோய் உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது.


 • உடல் குறைக்க உதவுகிறது

  பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுகிறது. அத்துடன் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பழங்களை எல்லா நேரங்களிலும் சாப்பிடுவதை காட்டிலும் காலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அதன் பலன்களை அதிகமாகப் பெறலாம். வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பழங்கள் பெரும் பங்கு வகிக்கிறது.


 • கர்ப்பிணிப்பெண்கள்

  கரு வளர்ச்சியின்போது நரம்புக்குழாய் குறைபாடுகள், முதுகெலும்பு மற்றும் உடல்கூறு சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தை குறைக்க பழங்கள் உதவுகின்றன. ஃபோலிக் அமிலம் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்துக்கு உதவுகிறது.

  கர்ப்பிணிகளுக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் அத்தியாவசியமானது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தச் சத்தானது நாம் உட்கொள்கிற பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மூலமாகக் கிடைக்கிறது. இதன் காரணமாகத்தான் கர்ப்பகாலத்தில் அதிக பழங்களை உட்கொள்ள சொல்கிறார்கள்.


 • பல நோய்களை தடுக்கலாம்

  பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பு நன்மைகள் உங்கள் ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும். பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் மற்றும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதைக் குறைக்க உதவுகிறது.

  பொட்டாசியம் சத்து நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது. பழம் நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. பழத்தில் உள்ள வைட்டமின் சி ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பழத்தில் இயற்கையாகவே கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாக உள்ளதால் இது அனைவருக்கும் நன்மையளிக்கிறது.
பழங்கள், காய்கறி, கீரைகள் சாப்பிடுங்கள். இதுதான் உடலுக்குச் சக்தி தருகிறது என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். பழங்கள் இயற்கையாகவே இனிமையானவை. பழங்கள் உங்கள் உடலுக்கு சுத்தப்படுத்திகளாக செயல்படுகின்றன. உடலுக்கு நல்ல ஆற்றலைத் தரும் பழங்கள், நல்ல ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளையும் வழங்குகின்றன. ஒவ்வொரு பழங்களுக்கும் ஒரு நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் சக்திகள் நிறைந்த நிறைய பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன பயன் கிடைக்கிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

நம்முடைய அன்றாட உணவில் பழங்களை சேர்ப்பது மிகவும் நல்லது. தினமும் மதிய உணவோடு ஒரு ஆப்பிளை சாப்பிடுவது, காலை உணவோடு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது போன்றதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இயற்கையான பழங்கள் வழங்கும் ஏராளமான நன்மைகளைப் பெற தினசரி உணவில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

   
 
ஆரோக்கியம்