Back
Home » ஆரோக்கியம்
சளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா?
Boldsky | 14th Jan, 2020 05:51 PM
 • எரிக்கப்பட்ட வெங்காயம்

  வறுக்கப்பட்ட வெங்காயம் உணவுகளுக்கு சுவையை கூட்டப் பயன்படுகிறது. ஆனால் எரிக்கப்பட்ட வெங்காயம் ஜலதோஷத்தை குணப்படுத்த உதவும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதனை நேரடியாக நெருப்பில் வாட்டுங்கள். அதன்பின் அதனை சாப்பிடுங்கள், இந்த எரிந்த வெங்காயம் இருமல் மற்றும் மார்பு சளியை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது.


 • வெற்றிலை

  சளியை குணப்படுத்த வெற்றிலையை பயன்படுத்தலாம் என்பது வெகுசிலருக்குத் தெரியும். வெற்றிலையை விரும்பி சாப்பிடுபவர்களுக்கே இந்த உண்மை தெரியாது. இதனை எப்படி பயன்படுத்த வேண்டுமெனில் ஒரு துளி தேன் கொண்டு வெற்றிலையை நன்கு கசக்கி சாப்பிடுவது சிறந்த நிவாரணத்தை அளிக்கும்.


 • தவளையின் தோல்

  தவளையின் சருமம் காய்ச்சலைக் குணப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. தீராத சளியால் பாதிக்கப்படுபவர்கள் தவளையின் தோலை எடுத்து உலர்த்தி அதனை பொடியாக்கி ஜூஸில் கலந்து குடிக்கவும். இது எவ்வளவு கடுமையான சளியையும் விரைவில் குணப்படுத்தும்.

  MOST READ: தலைசுற்ற வைக்கும் இந்தியர்களின் வினோதமான உணவுப்பழக்கங்கள்... நம்ம ஆளுங்க இதெல்லாம சாப்பிடுறாங்க...


 • சாணக்கரைசல்

  இந்தியாவில் மாட்டு சாணம் என்பது இன்றும் பல விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சாணத்திற்கு மற்றொரு பயன்பாடும் உள்ளது. பண்டைய காலங்களில் சளி பிடித்தால் சிலுவை வடிவத்தில் மார்பில் சாணத்தை பூசினார்கள். இந்த விசித்திரமான பழக்கம் சளியை குணப்படுத்தும் என்று பண்டைய மக்கள் நம்பினார்கள்.


 • ஆல்கஹால் சிகிச்சை

  ண்டியது என்னவென்றால் ஒரு வாழைப்பழத்தை மேஜையின் மீது வையுங்கள். இரண்டு வாழைப்பழமாக தெரியும் வரை விஸ்கி அருந்துங்கள். இரண்டு வாழைப்பழம் தெரிந்தவுடன் குடிப்பதை நிறுத்திவிட்டு தூங்குங்கள், காலையில் சளி காணாமல் போயிருக்கும்.


 • ஈரமான சாக்ஸ்

  ஈரமான சாக்ஸ் சளிக்கு ஒரு மிகசிறந்த தீர்வாகும். இதனை எப்படி செய்ய வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் உங்கள் கால்களை நன்கு நனைக்கவும். அதற்கு பிறகுதான் முக்கியமான பகுதி வருகிறது, ஒரு ஜோடி சாக்ஸை குளிர்ந்த நீரில் நனைத்து விட்டு அதனை நன்கு பிழிந்து விட்டு அணிந்து கொள்ளுங்கள்.

  MOST READ: இந்த ராசிக்காரங்க ஆபத்தான அதிபுத்திசாலியா இருப்பாங்களாம்... உஷாரா இருந்துக்கோங்க...!


 • சாக்லேட்

  தொண்டையில் புண் இருக்கும்போது உப்பு நீரில் வாய் கொப்பளிக்கிறோம். அடுத்தமுறை சாக்லெட்டை பயன்படுத்தவும், வெளிப்படையாக தியோபிரோமைன் உணர்ச்சி நரம்புகளை அமைதிப்படுத்துகிறது, இது உங்கள் தீவிர மார்பு நெரிசலில் இருந்து நிவாரணம் அளிப்பதாக நம்பப்படுகிறது.


 • கால்களில் நீராவி

  பெரும்பாலும் சளியை குணப்படுத்த மார்பில் தடவுவதை நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் உங்கள் கால்களில் நீராவி தேய்த்தல் உங்கள் சளியை குணப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பாதத்தை நீராவியில் காட்டுவது அல்லது மருந்தை பாதத்தில் தேய்ப்பது சளியை குணப்படுத்தும்.

  MOST READ: 2020-ன் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகள் இவைதான்... இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?


 • வெங்காய மாலை

  மற்ற தீர்வுகளைக் காட்டிலும் வெங்காயம் சளிக்கு நல்ல தீர்வை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில் பேய்களை விரட்ட கழுத்தில் பூண்டு மாலையை அணிவார்கள், அதேபோல சளியை குணப்படுத்த வெங்காய மாலை அணிந்து கொள்ளுங்கள். இது பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம் ஆனால் இது பலனளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் நமது ஆரோக்கிய வாழ்க்கை என்பது பெரும்பாலும் மருத்துவமனையை சார்ந்துதான் இருக்கிறது. சின்ன சின்ன நோய்களுக்குக் கூட நாம் மருத்துவமனைக்குத்தான் ஓட வேண்டியிருக்கிறது. ஆனால் நம் முன்னோர்கள் மருத்துவமனையே இல்லாமல்தான் ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்தனர்.

அந்த காலத்திலும் நோய்கள் இருந்தது, ஆனால் அதற்கு வலிமையான வீட்டு வைத்தியங்களும் இருந்தது. பொதுவாக வீட்டு வைத்தியங்கள் எளிமையனதாகவும், வீட்டிலேயே செய்யக்கூடியதாகவும், நல்ல பலனை தரக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் மிகவும் கடினமானதாகவும், விநோதமானதாகவும் இருக்கும். இந்த பதிவில் சாதாரண சளிக்கு இருக்கும் சில மோசமான வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்