Back
Home » ஆரோக்கியம்
தடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்!
Boldsky | 16th Jan, 2020 04:34 PM
 • பிரட் மற்றும் வினிகர்

  சுலபமாக தடித்த தோலை சரிசெய்யும் வழி என்றால் பிரட் மற்றும் வினிகர் வழியைக் கூறலாம். இதனை செய்வதன் மூலம் தடித்த தோலை இருந்த இடம் தெரியாமல் மறைக்க செய்யலாம்.

  தேவையான பொருட்கள்:

  * 1 கப் ஆப்பிள் சிடர் வினிகர் அல்லது ஏதாவது ஒரு வினிகர்
  * ஒரு பிரட் துண்டு
  * துணி
  * மெடிக்கல் டேப்


 • பயன்படுத்தும் முறை:

  * சில தடித்த தோலில் வெடிப்பு ஏற்படவோ அல்லது புண்ணாக மாறவோ வாய்ப்புள்ளது. அப்படி ஏதேனும் ஆனால், முதலில் அந்த இடத்தை முற்றிலுமாக சுத்தம் செய்ய வேண்டும்.

  * பின்னர், அரை கப் வினிகரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதில் ஒரு துண்டு பிரட்டை போட்டு ஊற வைக்கவும். பிரட் துண்டை தேவையான காயத்திற்கு ஏற்ற அளவில் நறுக்கி போட்டு கொள்வது சிறந்தது.

  * பிரட் வினிகரில் நன்கு ஊறியதும், அதனை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து ஒரு துணியால் கட்டவும்.

  * பின்னர், மெடிக்கல் டேப் கொண்டு நன்கு சுற்றி கட்டுப் போடவும்.


 • இதன் நன்மை என்ன?

  வினிகரானது, சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் பண்புகளை கொண்டது. வினிகரில் உள்ள அமிலத்தன்மை தோலை மிருதுவாக்க வல்லது. பிரட்டை வினிகரில் ஊற வைத்து கட்டும் போது, வினிகரானது பாதிக்கப்பட்ட பகுதியில் நீண்ட நேரம் படுவதால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.


 • எலுமிச்சை பேஸ்ட்

  தடித்த தோல் மீது எலுமிச்சை பேஸ்ட்டை தொடர்ந்து தேய்த்து வர, அது மறைந்துவிடும். அதோடு சருமம் மிருதுவாவதை நீங்களே நன்கு உணரலாம்.

  தேவையான பொருட்கள்:

  * 2-3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  * 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில்
  * பேக்கிங் சோடா
  * கம்பி வலை துண்டு (mesh strip)
  * மெடிக்கல் டேப்


 • பயன்படுத்தும் முறை:

  * முதலில், எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயிலை நன்கு கலந்து கொள்ளவும்.

  * அத்துடன், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை போட்டு பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.

  * இப்போது, தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.

  * பாதிக்கப்பட்ட இடத்தில் தயாரித்த இந்த பேஸ்ட்டை, சிறிது சிறிதாக அப்ளை செய்து, கம்பி வலையை நான்கு, ஐந்தாக மடித்து அப்ளை செய்த பேஸ்ட் மீது வைக்கவும்.

  * இதன்மூலம், பேஸ்ட் தடித்த தோலின் மீது நன்கு பதியும்.

  * இறுதியாக, மெடிக்கல் டேப் கொண்டு கட்டுப் போட்டுக் கொள்ளவும்.

  இதன் நன்மை என்ன?

  பேக்கிங் சோடாவில் உள்ள சோடியம் பைக் கார்போனேட், பழைய சருமத்தை அகற்ற உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை, சருமத்தை மிருதுவாக்கவும், ஆலிவ் ஆயில் புதிய சருமம் உருவாகவும் உதவுகிறது. நாளொன்றிற்கு ஒரு முறை இதனை செய்து வருவதன் மூலம், பாதிப்பின் அடையாளம் கூட தெரியாமல் நீங்கிவிடும்.


 • குறிப்பு:

  இங்கே கொடுக்கப்பட்டு குறிப்புகள் அனைத்தும் சிறிய அளவிலான தடித்த தோல் பிரச்சனைக்கு மட்டுமே. பிரச்சனை பெரிதாக இருந்தால், மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

  இவை அனைத்தும், இயற்கை வைத்திய முறை என்றாலும் கூட, சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இவை எதிர்வினையாகக்கூடும். எனவே, இவற்றை சருமத்தில் பயன்படுத்தும் போது, மிகுந்த எச்சரிக்கை தேவை.

  முக்கியமாக, தடித்த தோலை எக்காரணம் கொண்டும் நீங்களாவே உங்கள் கைகள் கொண்டு அகற்றக்கூடாது. அப்படி செய்தால், விளைவு பெரிதாகி விடும்.
கால்சஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது தான் தடித்த தோல் பிரச்சனை. நமது சருமம் மிருதுவாக இருக்க வேண்டுமென்று தான் அனைவருமே விரும்புவர். குறிப்பாக நமது உள்ளங்கை மற்றும் பாதம் மிருதுவாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாவதவர்களே இருக்க முடியாது. பாதத்தை பொறுத்தவரை, பித்தவெடிப்பு போன்ற பிரச்சனையும், உள்ளங்கையில் காப்பு என்று வழக்காடு மொழியில் அழைக்கப்படும் பிரச்சனையும் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தான்.

கை, கால் என இரு பாகங்களும் சந்திக்கும் ஒரே பிரச்சனை தான் இந்த தடித்த தோல் எனப்படும் கால்சஸ். முதிர்ச்சி மற்றும் அதிகப்படியான வேலையின் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படக்கூடும். அழகை கெடுப்பது மட்டுமின்றி, உடலின் செயல்பாட்டையும் கூட இது பாதிக்கக்கூடும். இதில் பெரும் அவதி என்னவென்றால், பிறருக்கு கை கொடுக்கும் போது கை முரட்டுத் தனமாக இருந்தால் நிச்சயம் நமக்கு சங்கடமாகத் தானே இருக்கும்.

MOST READ: நடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!

இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான 2 எளிய வீட்டு வைத்திய முறைகளை தற்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்...

   
 
ஆரோக்கியம்