Back
Home » ஆரோக்கியம்
மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிபடுகிறீர்களா?..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...!
Boldsky | 21st Jan, 2020 08:33 AM
 • மலச்சிக்கலுக்கு காரணம்

  நீடித்த மலச்சிக்கல் வயிற்று வீக்கம், மூல நோய், குத பிளவு, மலக்குடல் நீடித்தது போன்ற பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் வழக்கமான குடல் இயக்கம் முறைகளில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்க வேண்டியது அவசியம். மலச்சிக்கலின் பெரும்பாலான சந்தர்ப்பங்கள் முறையற்ற மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுதான் காரணம். சில உணவுகள் செரிமான அமைப்புக்கு நல்லது. ஆனால், மற்றவை தீங்கு விளைவிக்கும்.


 • வாழைப்ப

  மலச்சிக்கலுக்கான ஒரு பயனுள்ள மற்றும் விரைவான தீர்வு தரும் ஒரு பழம் வாழைப்பழம் என்பது நாம் அனைவரும் அறிந்தது. இரைப்பை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவை குடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகின்றன மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. இவற்றில் பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளில் நிறைந்துள்ளன. இவை நல்ல செரிமான ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகின்றன. ஆதலால், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், வாழைப்பழம் சாப்பிடுங்கள்.


 • ஆரஞ்சு

  ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளன. இந்த பழத்தில் நரிங்கெனின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளது. இது ஒரு மலமிளக்கியாக வேலை செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்கள். உங்கள் மலச்சிக்கலை போக்குவது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. நீங்கள் சாப்பிடும் சாலட்டில் சில ஆரஞ்சு சுளைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

  MOST READ: காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா?


 • ராஸ்பெர்ரி

  ஸ்ட்ராபெர்ரிகளை விட இருமடங்கு நார்ச்சத்து கொண்டிருப்பதால், ராஸ்பெர்ரி உங்கள் மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இது செரிமான அமைப்பு மூலம் உணவு சீராக செல்ல உதவுகிறது. மேம்பட்ட செரிமானத்தை எளிதாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பெர்ரி உதவுகிறது. இயற்கையான மலமிளக்கி பண்புகளை அதிகம் பயன்படுத்த உங்கள் உணவில் பலவிதமான பெர்ரிகளை நீங்கள் சேர்க்கலாம்.


 • கிவி

  ஒற்றை கிவி பழத்தில் சுமார் 2.5 கிராம் நார்ச்சத்து உள்ளது மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அதிக நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்கள் உங்கள் குடல்கள் இயங்கத்திற்கு பலமாக அமைகிறது. மேலும், கிவி சிறந்த மலமிளக்கியாகும். உங்கள் மலச்சிக்கலை போக்க கிவி பழம் உதவும்.


 • ஆப்பிள்

  பெக்டின் நார்ச்சத்து நிரம்பிய, ஆப்பிள்களை உட்கொள்வது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. பெக்டினின் ஆம்போடெரிக் (ஒரு அடிப்படை மற்றும் ஒரு அமிலமாக செயல்படுகிறது) உங்கள் உடலின் தேவைகளைப் பொறுத்து மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டிற்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது. உங்கள் உணவில் ஒரு ஆப்பிளை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

  MOST READ: பெண் வேடமிட்டு ஆணை திருமணம் செய்து கொண்ட வாலிபர்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்...!


 • அத்திப் பழம்

  நார்ச்சத்தின் அருமையான ஆதாரமான அத்திப்பழம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் வழங்குவதற்கும் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் மிகவும் பயனளிக்கிறது. அத்திப்பழம் குடல்களை வளர்க்கிறது மற்றும் தொனிக்கிறது மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். உலர்ந்த அத்திப்பழங்களை உங்கள் காலை உணவில் சேர்க்கலாம்.


 • கொடிமுந்திரி

  மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதற்கான இயற்கையான தீர்வாக இருப்பது கொடிமுந்திரி. கொடிமுந்திரிகளில் செல்லுலோஸ் போன்ற கரையாத நார்ச்சத்து உள்ளது. இது மலத்தில் உள்ள நீரின் அளவை அதிகரிக்கிறது. மேலும், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மலச்சிக்கல் நிவாரணத்திற்கு நீங்கள் கொடிமுந்திரி சாறையும் பருகலாம்.


 • பேரிக்காய்

  நார்ச்சத்து நிறைந்த, பேரிக்காய் பழம் மலச்சிக்கலை எளிதாக்க உதவும். ஏனெனில், இவற்றில் ஏராளமான பிரக்டோஸ் மற்றும் சர்பிடால் (பழங்கள் மற்றும் தாவரங்களில் காணப்படும் சர்க்கரை ஆல்கஹால் ஒரு டையூரிடிக், மலமிளக்கியாகும்) உள்ளன. பிரக்டோஸ் பெருங்குடலில் முடிவடைகிறது, அங்கு சவ்வூடுபரவல் மூலம் நீரில் இழுக்கப்படுகிறது. இதனால் குடல் இயக்கம் தூண்டப்பட்டு, சர்பிடால் பெருங்குடலுக்குள் தண்ணீரை இழுத்து மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கலை வேகமாக போக்க பேரிக்காய் சாறு அருந்தலாம்.


 • விளாம் பழம்

  வூட் ஆப்பிள் என்றும் அழைக்கப்படும் விளாம் பழத்தின் கூழ் ஆயுர்வேதத்தில் மலச்சிக்கலுக்கான விரைவான தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இரவு உணவிற்கு முன் ஒவ்வொரு நாளும் மாலையில் அரை கப் விளாம் பழ கூழ் மற்றும் ஒரு டீஸ்பூன் வெல்லம் சாப்பிடுவது மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

  MOST READ: இந்த ராசி காதலர்கள் "அந்த" விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...!


 • நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

  பல உணவுகள் மலச்சிக்கலை போக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு மலச்சிக்கலை தீர்க்கிறது. மேலும், குடல் இயக்கங்களைத் தூண்டுகிறது. இருப்பினும், இது அனைவருக்கும் பொருந்தாது. சிலருக்கு அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மலச்சிக்கலை மோசமாக்கும். எனவே உங்களுக்கு எது சரியானது என்பதைப் பற்றி உங்கள் சுகாதார வழங்குநரிடம் பேசுவது முக்கியம். நிறைய தண்ணீர் குடிப்பது, வழக்கமான உடற்பயிற்சி, யோகா, மன அழுத்தத்தை குறைக்க தியானம் போன்ற பல்வேறு வீட்டு வைத்தியங்கள் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்ச்னையாக இருப்பது மலச்சிக்கல். உங்கள் வயிற்றில் உள்ள கழிவுகளை தினமும் வெளியேற்ற வேண்டும். கழிவுகளை தினமும் நீங்கள் வெளியேற்றினால், ஒட்டுமொத்தமாக நீங்கள் சுறுசுறுப்பாகவும் சிறப்பாகவும் உணரமுடியும். மலச்சிக்கல் பிரச்சனையால், கழிவுகளை வெளியேற்ற முடியாமல் தவிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் அது கேடு விளைவிக்கும். போதிய நீர் உட்கொள்ளமால் இருப்பது, உணவில் போதிய நார்ச்சத்து சேர்க்காமல் இருப்பது, துரித உணவு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் குடல் செயல்பாட்டில் கோளாறு ஏற்படுகிறது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, மலச்சிக்கல் என்பது உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் வழியில் வரக்கூடிய ஒரு வியாதியாகும். இது உங்களுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற பல மக்கள் வலுவான மலமிளக்கியை எடுத்துக்கொள்வதை நாடுகிறார்கள்; இருப்பினும், மலமிளக்கியானது உங்கள் குடலுக்கு நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும். மலச்சிக்கலைத் தடுப்பது எப்படி? குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று குழப்பத்தில் இருக்கிறீர்களா?... கவலையைவிடுங்க.. இந்த கட்டுரையில் உங்கள் வயிற்று பிரச்சனையிலிருந்து நிவாரணம் வழங்க உதவும் மிகவும் பயனுள்ள சில பழங்களின் பட்டியலை கொடுத்துள்ளோம்.

   
 
ஆரோக்கியம்