Back
Home » ஆரோக்கியம்
டயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...
Boldsky | 21st Jan, 2020 10:22 AM
 • பங்க்ரா

  எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆடுபவர் எளிதாக ஆடக்கூடிய வகையில் இருப்பது தான் இந்த பங்க்ரா நடனம். இந்த நடனத்தை எல்லாக் கலைஞர்களும் விரும்புவார்கள். எல்லாருக்கும் பிடித்த முழுமையான நடன வடிவம் என்றே கூறலாம்.

  எனவே தான் இந்த நடனத்தை தொழில்முறை நடனக் கலைஞர்கள் மற்றும் உடற்பயிற்சியாளர்கள் எடையை குறைக்க கையில் எடுத்தனர். அதன் பலனாக கடந்த சில வருடங்களிலேயே இந்த நடனம் மிகவும் பிரபலமானது. இப்பொழுது எல்லாம் ஏன் நம் நாட்டில் கூட டான்ஸ்-கம் உடற்பயிற்சியை தான் மக்கள் விரும்புகின்றனர். இது ஒரு வேடிக்கையான நடன உடற்பயிற்சியாக இருப்பதோடு மேற்கத்திய நாடுகளில் கூட பரவலாகி வருகிறது.


 • மசாலா பங்க்ரா

  இது ஒரு முழுமையான இந்திய நடனம். நமது உடலின் தலை முதல் கால் வரை அனைத்து பகுதிகளும் இந்த நடனத்தில் ஈடுபடுகிறது. இதனால் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த உடலையும் உடற்பயிற்சி செய்ய வைக்க முடியும். இதை சில வாரங்களுக்கு 45-60 நிமிடங்கள் என ஆடி வந்தாலே போதும் உங்கள் உடம்பு ஸ்லிம்மாக மாறுவதை கண்கூடாக காணலாம். இதன் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த நடனம் எந்த வயதினரும் ஆடுவதற்கு ஏற்றது.


 • எடை இழப்புக்கு இது எவ்வாறு உதவுகிறது

  எடை இழப்பை ஏற்படுத்த இது ஒரு வேடிக்கையான உடற்பயிற்சி முறை. நமது வளர்சிதை மாற்றம் மற்றும் எடை இழப்பை ஏற்படுத்த தேவையான இரண்டு காரணிகள் இந்த நடனத்தில் உள்ளன.

  முதலில் நமது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க தேவையற்ற கொழுப்புகளை கரைக்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நடனம் உங்களை சுறுசுறுப்பாக்கி ஒட்டுமொத்த உடலையும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்துகிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்கிறது. சிலர் இந்த மசாலா பங்க்ரா டான்ஸ் மூலம் 20 கிலோ எடையை குறைத்ததாக கூறியுள்ளனர்.

  இந்த டான்ஸ்-கம் வொர்க் அவுட்டில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.


 • கலோரிகளை பற்றிய கவலைப்பட வேண்டாம்

  இனி அந்த டயட் இந்த டயட் என்று இருக்க வேண்டாம். எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரிகளை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் வெண்ணெய்யுடன் ரொட்டி போன்ற உணவுகளை சாப்பிட்டால் கூட உங்கள் கலோரிகளை எரித்து விடும். எளிதாக இந்த நடனத்தின் மூலம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிகளை எரித்து விட முடியும்.


 • மன அழுத்தத்தை குறைக்கிறது

  நடனம் ஆடுவது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய விஷயம். நீங்கள் எவ்வளவு அதிகமாக ஆடுகிறீர்களோ உங்கள் இதயத்திற்கும் சிறந்த உடற்பயிற்சியாகவும் ஆரோக்கியத்தையும் தேடித் தரும்.


 • ஸ்டாமினாவை அதிகரிக்கிறது

  ஆரம்ப நாட்களில் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கும். போதுமான ஸ்டாமினா இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த பங்க்ரா டான்ஸ் உங்களுக்கு போதுமான ஸ்டாமினாவை வழங்குகிறது. இதன் மூலம் நீண்ட நேரம் உங்களால் நடனம் ஆட முடியும்.


 • இதய செயல்பாடு

  பங்க்ரா நடனம் ஒரு சிறந்த சுழற்சி நடனம். இது இதய ஆரோக்கியத்திற்கு மற்றும் அதன் செயல்பாடுகள் ஒழுங்காக இருக்கவும் துணை புரிகிறது.

  என்னங்க டயட்டே இல்லாமல் எடையை குறைக்க நீங்க ரெடியாகிட்டிங்களா!
உடல் பருமன் என்பது ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் கெடுக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. சிலர் லேசாக வெயிட் போட்டால் கூட அதையே நினைத்து மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுகிறார்கள். இந்த எடையை குறைக்கத் தான் எத்தனை உடற்பயிற்சிகள் எத்தனை டயட் முறைகள். ஆனால் எடை என்னவோ குறைவதில்லை என்பது தான் எல்லாருடைய கவலையாக இருந்து வருகிறது.

Image Courtesy

ஜிம்மிற்கு காசை இறைத்தது தான் மிச்சம் என்கிறார்கள் பலர். அப்போ எப்படித்தான் எடையை குறைக்கிறது என்கிறீர்களா? அதற்காக இருக்கவே இருக்கு நம்ம பங்க்ரா நடனம். இந்த நடனம் தான் இப்போது பாலிவுட் பகுதியில் மிகவும் ஃபேமஸ். இந்த நடனத்தை ஆடினாலே போதும் உங்கள் எடையை வெகுவாக குறைக்க முடியும் என்கிறார்கள் பிட்னஸ் வல்லுநர்கள். இத்த மசாலா பங்க்ரா நடனம் மூலம் டயட்டே இல்லாமல் எடையை வெகுவாக குறைக்க இயலும். அதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு தான் இந்த கட்டுரை.

   
 
ஆரோக்கியம்