Back
Home » ஆரோக்கியம்
பெண்களே! உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா?
Boldsky | 22nd Jan, 2020 01:24 PM
  • யோனியை கழுவுதல்

    பெண்களே, உங்கள் அக்குள்களையோ அல்லது முதுகையோ சோப்பு போட்டு துடைப்பது மற்றும் தடவுவது போன்று சுத்தம் செய்வது போன்றதல்ல, உங்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது. யோனிப் பகுதியில் சோப்பு போட்டு துடைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில் இது அந்த பகுதியை மிகவும் வறட்சியாகவும், சங்கடமாகவும் மாற்றும்.

    MOST READ: குளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க...இல்லனா பிரச்சனதான்...!


  • ஸ்பிளாஸ் தண்ணீர்

    யோனிப் பகுதியில் சோப்பைப் பயன்படுத்தும்போது எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, ஸ்பிளாஸ் தண்ணீர் போதுமானது. நீங்கள் ஒரு துப்புரவுத் தீர்வைப் பயன்படுத்த வேண்டுமென்றால், வாசனை இல்லாத, ஹைபோஅலர்கெனியை பயன்படுத்தலாம். அதை உங்கள் கைகளைப் பயன்படுத்தி தடவவும், துணி அல்லது லூஃபாவைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.


  • ஜிம் ஆடைகளில் நீண்ட நேரம் இருப்பது

    ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது என்பது நல்ல விஷயம் என்றாலும், அதில், சில தீங்குகளும் இருக்கிறது. ஜிம் உடைதான் அந்த தீங்கை விளைவிக்கிறது. ஜிம் ஆடைகள் எப்போதும் உடலோடு ஒட்டி இருக்கும், இறுக்கமாக இருக்கும். தொடர்ந்து, அதிக நேரம் ஜிம் உடையில் இருப்பதால், அது யோனிப் பகுதியில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.


  • உள்ளாடைகளை மாற்ற வேண்டும்

    ஈஸ்ட் தொற்று, ஏராளமான பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் மற்றும் வியர்வை உங்கள் யோனிப் பகுதியில் ஏற்படலாம். எனவே நீங்கள் உங்கள் வொர்க்அவுட்டை முடித்தவுடன், வியர்வை வொர்க்அவுட் கியரை கழற்றவும். முடிந்தால், உங்கள் ஜிம்மில் குளிக்க முயற்சிக்கவும். மேலும், உங்கள் உள்ளாடைகளை மாற்றி புதிய உள்ளாடைகளை உடுத்த வேண்டும்.

    MOST READ: டீ, காபி குடிப்பவரா நீங்கள்? அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க...!


  • சானிட்டரி பேட் அணிவது

    சானிட்டரி பேட்கள் அணிவதால் கூட உங்கள் யோனிப் பகுதிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். உங்கள் யோனி பகுதி உணர்திறன் உடையதாக இருந்தால், நாள் முழுவதும் சானிட்டரி நாப்கின் அணிவது எரிச்சலை ஏற்படுத்தும் அல்லது தோல் சிவத்தலுக்கு வழிவகுக்கும். நீங்கள் உண்மையில் பேட் பயன்படுத்துவதைத் தொடர விரும்பினால், பருத்தியால் செய்யப்பட்டவற்றைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.


  • இயற்கை

    நீங்கள் இயற்கை முறையை பின்பற்றுகிறீர்களோ இல்லையோ, உங்கள் யோனிப் பகுதிகளின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் இயற்கை முறையை பின்பற்றித்தான் ஆக வேண்டும். அந்தரங்க முடி யோனிப் பகுதிகளின் தோலுக்கும் உள்ளாடைகளுக்கும் இடையில் இருக்கும் காற்று பாக்கெட்டைப் பாதுகாக்க உதவுகிறது. இந்த ஏர் பாக்கெட் கிருமிகள் மற்றும் தொற்று பாக்டீரியாக்களுக்கு வறண்ட சருமம் போன்றவை இல்லாமல் இருக்க உதவுகிறது.


  • ஷேவிங்

    முடி இல்லாத நிலையில், காற்று பாக்கெட் இருக்காது. மேலும் வியர்வை காரணமாக ஈரப்பதம் குவிந்துவிடும் . எனவே, ஷேவிங் செய்வது மிகவும் ஆரோக்கியமானதாக தோன்றலாம். ஆனால் இது ஆரோக்கியமற்றதாகும். நீங்கள் விரும்பினால், அதை ஒழுங்கமைக்கலாம் அல்லது பிகினி வரி பகுதிகளை மட்டுமே ஷேவிங் செய்யலாம்.

    MOST READ: பெண்களே! ஆண்களை "அந்த " நேரத்தில் திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா?


  • பாக்டீரியா

    "நச்சு அதிர்ச்சி நோய்க்குறி" பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு வகை உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயாகும். இது ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் (ஸ்டாப்) பாக்டீரியா எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் இது குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (ஸ்ட்ரெப்) பாக்டீரியா எனப்படும் மற்றொரு வகை பாக்டீரியாக்களால் சுரக்கும் நச்சுகள் காரணமாகவும் ஏற்படலாம்.


  • டம்பான்களை அதிக நேரம் பயன்படுத்துதல்

    நச்சு அதிர்ச்சி நோய்க்குறியின் முதன்மைக் காரணங்களில் ஒன்று பரிந்துரைக்கப்பட்ட கால அளவை விட நீண்ட நேரம் டம்பான்களை பயன்படுத்துவது. இதை முழுதாக நீங்கள் உணரவில்லை என்றாலும், உங்களால் முடிந்தவரை அதை மாற்ற முயற்சிக்கவும்.

    MOST READ: ஆண்களே! உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க...!


  • உணவுகள்

    சில உணவை உட்கொள்வது பொதுவாக உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமானதாக இருக்கும். மேலும், அது உங்கள் யோனிப் பகுதியில் நோய்த்தொற்றுகளை உருவாக்குகிறது. உதாரணமாக, நீங்கள் அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட உணவை உட்கொண்டால், அது ஈஸ்ட் தொற்றுநோய்களுக்கு (கேண்டிடா) காரணமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஏற்படுத்தும். நீங்கள் காரமான உணவை சாப்பிட்டால், அது உங்கள் யோனியின் இயற்கையான பிஎச்(pH) ஐ மாற்றும். இதனால் அது வித்தியாசமாக இருக்கும். இதைத் தவிர்க்க, உங்கள் உணவில் புரோபயாடிக்குகளை நீங்கள் சேர்க்கலாம். இது உங்கள் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும்.


  • பேன்டி லைனர்கள்

    பெண்கள் அனுபவிக்கும் யோனி வெளியேற்றம் என்பது அவர்களை தூய்மைப்படுத்தும் இயற்கையான வழியாகும். நம்மில் சிலர் இதைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். யோனி வெளியேற்றத்தை அனுபவிக்கும் போது சங்கடமாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக பேன்டி லைனர்கள் அல்லது சானிட்டரி நாப்கின்களை அணிவதை நாடுகிறார்கள். இருப்பினும், இது ஒரு புத்திசாலித்தனமான காரியம் அல்ல. நீண்ட காலத்திற்கு ஒரு பேன்டிலினரை அணிவது உங்கள் யோனி பகுதியை எரிச்சலடையச் செய்யலாம். எனவே, நீங்கள் வெளியேற்றத்தை அனுபவித்தால் அதைப் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் துர்நாற்றம் வீசுவதை அனுபவிக்கிறீர்கள் அல்லது வழக்கமான அளவை விட அதிகமான யோனி வெளியேற்றத்தைஅனுபவிக்கிறீர்கள் என்றால், மருத்துவரை அணுகவும்.




பெண்கள் பெரும்பாலும், அவர்களது உடலமைப்பு மற்றும் சருமத்தை கவனித்துக்கொள்வதை உள்ளடக்கிய தோற்றத்திற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், அவர்களின் யோனிப் பகுதிகளை பற்றி அவற்றின் சுகாதாரம் பற்றி என்ன செய்கிறார்கள் என்றால், நிறைய பேர் இல்லை என்றுதான் கூறுகிறார்கள்.பாலியல் ஆரோக்கியம் மற்றும் பெண்களின் தனிப்பட்ட பகுதிகளின் பராமரிப்பு போன்ற தலைப்புகள் துல்லியமாக ஒரு மூலையில் தள்ளப்படுகின்றன. ஏனெனில் இந்த தலைப்புகளில் சிறிது தயக்கம் அல்லது களங்கம் உள்ளது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். இதைப் பற்றி ஒருவரிடம் கேட்பதை மிகவும் சங்கடமாக உணர்கிறார்கள்.

ஆனால் பெண்களே, உங்கள் யோனி ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு வெட்கமோ, தயக்கமோ கொள்ளக்கூடாது. உங்கள் அன்றாட வாழ்வில் யோனி ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் சில கெட்ட பழக்கங்கள் உள்ளன.அவை என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்த கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

 
ஆரோக்கியம்