Back
Home » ஆரோக்கியம்
இந்த நோய் உள்ளவங்க செத்துப்போய்ட்டதா நினைச்சுகிட்டே வாழ்வாங்களாம்... ஆபத்தான உளவியல் கோளாறுகள்...!
Boldsky | 17th Feb, 2020 10:20 AM
 • காப்கிராஸ் டெலூஷன்

  இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நெருக்கமான ஒருவர் வஞ்சகராக இருப்பதாக உருவத்தில் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஸ்கிசோஃப்ரினியா உள்ளவர்களுக்கு இந்த வகை நோய் ஏற்படுவது பொதுவானது, இருப்பினும் இது டிமென்ஷியா, கால்-கை வலிப்பு அல்லது தலையில் காயங்கள் உள்ளவர்களிடமும் ஏற்படுகிறது.


 • ஃப்ரெகோலி சிண்ட்ரோம்

  இது காப்கிராஸ் டெலூஷன் நோய்க்கு நேர் எதிரானது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை பொறுத்தவரை ஒரே நபர் வெவ்வேறு நபராக தோற்றமளிக்கக்கூடியவராக இருப்பதாக நினைப்பார்கள்.


 • கோட்டார்டிஸ் பிரமை

  இது மிகவும் வித்தியாசமான ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே இறந்து விட்டதாகவும், தான் உயிரோடு இல்லை என்றும் நினைப்பார்கள். வர்களின் உடல் அழுகும் நிலையில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள், அல்லது அவர்கள் இரத்தம் அல்லது உட்புற உறுப்புகள் அனைத்தையும் இழந்துவிட்டார்கள் என்று நம்புகிறார்கள். மனச்சோர்வு அல்லது ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளுக்கு இது அடிக்கடி காணப்படுகிறது.

  MOST READ: ஆண்களை வாடகைக்கு அழைத்துச்செல்லும் வினோத வேலை...இந்த வேலையவாது இன்ஜினியருங்களுக்கு கொடுங்கப்பா...!


 • பரம்னேசியா

  இந்த கோளாறு நகலெடுக்கப்பட்டது என்ற மருட்சி நம்பிக்கையால் வகைப்படுத்தப்படுகிறது. இதன்படி ஒரே நேரத்தில் ஒரே பொருள் இரண்டாக இருப்பதாக இவர்கள் நினைப்பார்கள். உதாரணத்திற்கு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இருக்கும் இடம் இன்னொரு இடத்தில் இருப்பதாக நினைப்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு உலகத்தில் இருப்பதாக இவர்கள் நினைப்பார்கள்.


 • ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்

  இந்த கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் கை தங்களுக்கே சொந்தமானது அல்ல என்று நம்புகிறார்கள். சில நேரங்களில் ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் உள்ளவர்கள் தங்களுக்குள் ஒரு ஆவி அல்லது அதுபோன்ற ஒன்று இருப்பதாக நம்புகிறார்கள். பொதுவாக, மூளையின் இரண்டு அரைக்கோளங்களை இணைக்கும் கார்பஸ் கால்சோமுக்கு சேதம் ஏற்பட்டவர்களுக்கு இது ஏற்படுகிறது.


 • மைக்ரோப்சியா

  இது ஒரு நரம்பியல் நிலை, இதில் படங்கள், இடம் மற்றும் நேரம் பற்றிய கருத்து சிதைந்துவிடும். மிகவும் குழப்பமான அறிகுறி உடல் உருவத்தை மாற்றுவதாகும், ஏனெனில் பாதிக்கப்பட்டவர் தங்கள் உடல் உறுப்புகளின் அளவு மற்றும் வடிவம் குறித்து குழப்பமடையக்கூடும். இது அதீத பய உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும். இது ஒற்றைத் தலைவலி, மூளைக் கட்டிகள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தொற்றுநோய்களுடன் தொடர்புடையது. இதற்கு சிறந்த சிகிச்சை ஓய்வாகும். இது ஒற்றைத் தலைவலி, மூளைக் கட்டிகள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தொற்றுநோய்களுடன் மிகவும் தொடர்புடையது.


 • பாரிஸ் சிண்ட்ரோம்

  பிரெஞ்சு தலைநகருக்கு வருகை தரும் ஜப்பானிய குடிமக்களுக்கு இந்த பாரிஸ் சிண்ட்ரோம் காணப்படுகிறது. ஜப்பானியர்கள் பாரிஸுக்கு வரும்போது பெரும்பாலும் பதட்டமான முறிவுக்கு ஆளாகிறார்கள், ஆனால் இது உலகின் பிற பகுதிகளில் உள்ள ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடமும் காணப்படுகிறது. திடீரென மாறிய கலாச்சாரம் உடல் மற்றும் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பிரமைகள், நினைவிழப்பு, பதட்டம் போன்றவை ஏற்படலாம்.

  MOST READ: இந்த அபூர்வ ரேகைகளில் ஏதவாது ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அசாதாரண வாழ்க்கையை வாழ்வார்களாம்...!


 • பாரீன் அஸ்ஸன்ட் சிண்ட்ரோம்

  இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தாய்மொழியை வெளிநாட்டு உச்சரிப்பில் பேசுவார்கள். இந்த அரிய நோய் தலையில் ஏற்படும் பலத்த காயம் அல்லது மூளையின் பேசும் திறனை கட்டுப்படுத்தும் நியூக்ளியசில் பாதிப்பு ஏற்படுவதால் ஏற்படுகிறது.
மனிதர்களின் ஆரோக்கியம் என்பது அவர்களின் உடல்நலத்தை மட்டும் சார்ந்ததல்ல. மனஆரோக்கியத்தையும் சார்ந்தது. உளவியல் கோளாறுகள் பெரும்பாலும் நமது மனதில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் நமது உயிருக்கே கூட ஆபத்தாய் முடியலாம். மனித மூளைக்கு நடக்கவே இயலாத, கற்பனைக்கும் எட்டாத பல ஆச்சரியங்களை சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. இது வரமா அல்லது சாபமா என்பது நமது மனதின் வலிமையை பொறுத்தது.

ஒருசில உளவியல் கோளாறுகள் எளிதில் குணப்படுத்தக்கூடியதாக இருக்கலாம் ஆனால் சில உளவியல் கோளாறுகள் மிகவும் ஆபத்தானவை. இந்த பதிவில் விசித்திரமான மற்றும் அசாதாரணமான பிற உளவியல் கோளாறுகளைப் பற்றி பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்