Back
Home » ஆரோக்கியம்
உடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…
Boldsky | 26th Feb, 2020 09:58 AM
 • கொழுப்பு குறைப்பு மற்றும் எடை குறைப்பின் வித்தியாசம்

  கௌரவ் தனேஜா, சான்றழிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர், விமானி, கட்டிடப் பொறியாளர் விவரிப்பது என்னவென்றால், கொழுப்பு குறைப்பு என்பது நமது உடலில் உள்ள கொழுப்பை குறைப்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். எடையை குறைப்பதில் அல்ல. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. கொழுப்பு குறைப்பு என்பது உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்குவது மற்றும் எடை குறைப்பு என்பது ஒட்டுமொத்த உடலின் எடையை குறைப்பதாகும். அந்த எடை நீரின் எடையாகவோ, தசையின் எடையாகவோ, கொழுப்பாகவோ அல்லது எலும்பின் எடையாகவோ இருக்கலாம்.


 • எடை குறைப்பு சரியானதா?

  பெரும்பாலானோர் எடை குறைப்பு தான் சரியானது என நினைக்கின்றனர். ஆனால், அது தேவையற்ற ஒன்றாகும். உதாரணத்திற்கு, ஜிம்மிற்கு சென்று கடினமாக உடற்பயிற்சி செய்து கொழுப்பை குறைக்கிறோம் என்றால், அங்கு கொழுப்பு மட்டுமே குறைந்திருக்கும். அதற்கு பதிலாக தசை வளர்ந்திருக்கும் மற்றும் உடலின் எடையும் சீராகவே இருக்கும். நம் உடலில் கொழுப்பு சேருவதை விட இது தான் சிறந்தது. இதற்கு மாறாக, எடை குறைப்பில் ஈடுபட்டால், அதன் பயனாக தசைகளை இழந்து, கொழுப்பை இழந்து, எடை சரிபார்ப்பில் உடல் எடையை குறைக்க செய்திடலாம். ஆனால், உடல் எடையுடன் சேர்ந்து, தசை வலிமையும் இழந்து, பலவீனத்தை தான் பெற முடியும், என்று கருத்து தெரிவிக்கிறார்.


 • கொழுப்பு குறைப்பை விட எடை குறைப்பு சுலபமானது

  உடற்பயிற்சி எதுவும் செய்யாமல், உணவு கட்டுப்பாட்டுடன் மட்டும் இருந்தாலே உடல் எடை குறைந்திடும். ஆனால், அதனால் உடலில் உள்ள கொழுப்பை எல்லாம் குறைத்திட முடியாது. உடலில் தசையை இழப்பவர்கள் பலவீனமடைவதோடு, தினசரி வேலைகளை கூட செய்ய வலு இல்லாதவர்களாக ஆகிவிடுவர். முறையான பயிற்சியாளரும், சிறந்த உணவுப் பழக்கமும் கொழுப்பு குறைப்பதற்கு முக்கியமாக தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்தால், அவரது உடல் எடை குறைய தான் செய்யுமே தவிர, ஆரோக்கியமாகவோ, வலுவாகவோ மாறிட முடியாது. இன்றைய நவீன முறைகளின் படி உடல் எடையை குறைப்பது சுலபம் தான். மாடல்கள், மணப்பெண்கள் மற்றும் மணமகன்கள் போன்றவர்களுக்கு மிகவும் உதவக்கூடியது தான் இது. ஆனால் இதுபோன்றவை உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. எப்போது, இந்த உடனடி எடை குறைப்பு முறையை கை விடுகிறீர்களோ, உடனடியாக உடல் எடை வேகமாக அதிகரித்து விடும். அதன்மூலம், உடலானது மேலும் பலவீனமடைந்துவிடும்.


 • ஃபேடு டயட்டின் வரையறைகள்

  ஊட்டச்சத்து நிபுணர் கௌரவ் தனேஜா விவரித்ததில், ஃபேடு டயட்டை பின்பற்றுவது என்பது தான் தற்கால நடைமுறை ஆகிவிட்டது. ஆனால், இதை பின்பற்றுபவர்கள், இதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவற்றில் நேரடியாக தெரியக் கூடிய பக்க விளைவுகள் என்றால், ஃபேடு டயட் தொடங்கிய சில வாரங்களிலேயே, கண் பார்வை குறைதல், முடி உதிர்வு, வெளிரிய நகங்கள் போன்றவை. ஃபேடு டயட்டால் உடல் எடை குறைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உணரக்கூடியது என்றால், பலவீனம், சோர்வு போன்றவை.


 • கொழுப்புகளைத் தவிர்க்கும் ஃபேடு டயட்

  உடல் எடை குறைப்பில் உத்திரவாதம் அளிக்கும் பெரும்பாலான ஃபேடு டயட்களில், கொழுப்பு என்பது முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. இது மிகவும் தவறான ஒன்று. ஏனென்றால், நமது உடலுக்கு புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை குறிப்பிட்ட அளவு இருந்தால் மட்டும் சீராக செயல்படக்கூடும். அப்படிப்பட்ட நிலையில், கொழுப்பை முற்றிலுமாக தவிர்ப்பதன் மூலம், நமது உடல் கொழுப்பு இழந்ததாக கருதி, உடலில் உள்ள கொழுப்பு வைப்புகளை பயன்படுத்த தொடங்கும்.


 • முடிவு

  இறுதியாக கூற வருவது என்னவென்றால், கொழுப்பு குறைப்பு என்பது தாமதமான ஒரு செயல் என்றால் கூட ஆரோக்கியமான மற்றும் நீண்ட காலம் பலனளிக்கக் கூடிய ஒன்று என்பது தான். குறுக்கு வழி வேண்டாமே, நேர் பாதையை தேர்ந்தெடுத்து, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்.
உடல் எடையை சீராக பராமரிப்பது என்பது இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய கவலைகளில் ஒன்றாகிவிட்டது. நாவிற்கு சுவையாக சாப்பிட வேண்டும், ஆனால், எடை அதிகரித்துவிட கூடாது. இது தான் பலரது வேண்டுதலாகவே மாறிவிட்டது. உடல் எடை குறைப்பதற்கு ஏராளமான வழிமுறைகள் வந்துவிட்டன. உணவு கட்டுப்பாடு மட்டும் இருந்தால் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம் என நம்புபவர்கள் ஒரு புறம். ஆனால், ஜிம்மிற்கு சென்று கடினமான உடற்பயிற்சியால் உடல் எடை குறைப்பதை நம்புபவர்கள் மறுபுறம். எந்த முறை தான் சரியானது?

MOST READ: வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க...

நமது அழகு, ஆரோக்கியம் எதுவும் குறைந்திடாமல், உடலில் தேங்கிய தேவையற்ற கொழுப்பு மற்றும் தொப்பையை குறைப்பது மட்டுமே சிறந்தது என்கின்றனர் வல்லுநர்கள். உடல் எடை குறைப்பதில் 2 முக்கிய காரணிகள் உள்ளன. ஒன்று - கொழுப்பை குறைத்தல், இரண்டு - எடையை குறைத்தல். கேட்பதற்கு இரண்டும் ஒன்று போல தான் தெரியும். ஆனால், இரண்டும் வெவ்வேறு. எனவே, உடல் எடையை குறைக்கும் பயணத்தில் குதிப்பதற்கு முன்பு இதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அப்போது தான் மேற்கொள்ளும் பயணத்தை சிறந்ததாக மாற்ற முடியும்.

   
 
ஆரோக்கியம்