Back
Home » ஆரோக்கியம்
கீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
Boldsky | 26th Feb, 2020 02:17 PM
 • பசலைக் கீரை மற்றும் பால் பொருட்கள்

  பாலில் உள்ள கால்சியம் மற்றும் பசலைக் கீரையில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம், உடலில் கால்சியம் ஆக்ஸலேட் கற்களை உருவாக்கி, சிறுநீரகங்களில் அடைப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

  இது பசலைக்கீரை மற்றும் பால் பொருட்களுக்கு மட்டுமல்ல, அனைத்து வகையான பச்சை இலை காய்கறிகள் மற்றும் பால் பொருட்களுக்கும் பொருந்தும். இப்போது இவை இரண்டின் சிறப்பையும், குறைபாடுகளையும் காண்போம்.

  குறிப்பு: இது அனைத்து உயர் ஆக்ஸாலிக் அமிலம் மற்றும் கால்சியம் உணவு கலவைகளுக்கும் பொருந்தும்.


 • பசலைக்கீரை

  பசலைக்கீரையின் ஊட்டச்சத்துப் பட்டியலைப் பார்த்தால், இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடியதாகவே உள்ளது. இருப்பினும், நம்மில் பலருக்கும் பசலைக்கீரையிலும் அதிகளவில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது என்ற விஷயம் தெரியாது. இந்த கீரையில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பு ஆக்ஸாலிக் அமிலம் 95% கால்சியம் உடலால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால் கீரையில் உள்ள கால்சியத்தில் வெறும் 5% மட்டுமே உடலால் உறிஞ்சப்படுகிறது.


 • ஆக்ஸாலிக் அமிலம் என்றால் என்ன?

  இது இயற்கையாக நிகழும் இரசாயனமாகும். இது உடலில் அதிக அளவில் சேர்ந்தால், ஆபத்தான விஷமாகலாம். இருப்பினும், நீங்கள் கலவைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், இவை நம் உணவில் இல்லை (ஆனால் ப்ளீச் மற்றும் எதிர்ப்பு துருப்பிடித்தல் போன்ற பொருட்களில் உள்ளன). ஆக்ஸாலிக் அமிலம் பச்சை இலைக் கீரைகளில் காணப்படுகிறது. உடலில் செல்லும் போது, இது கால்சியம் போன்ற தாதுக்களுடன் இணைந்து கால்சியம் ஆக்ஸலேட் உருவாகிறது. இந்த சிறிய கற்கள் படிகங்கள் பின்னர் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் கற்களுக்கு வழிவகுக்கும். இது நடக்க பல வருடங்கள் ஆகும், உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் இந்த முழு செயல்முறையும் உடலில் தொடர்ந்து, படிப்படியாக கல் துகள்களை ஏற்படுத்தும்.


 • பால்

  மறுபுறம், பாலில் கால்சியம் சத்து வளமான அளவில் உள்ளது. ஒரு லிட்டர் பாலில் சுமார் 1100 மிகி முதல் 1300 மிகி வரை காணப்படுகிறது. கால்சியம் நமது எலும்புகள், தசை சுருக்கம், ஹார்மோன் சுரப்பு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தைப் பராமரிக்க உதவுகிறது.


 • பசலைக்கீரையுடன் பாலை உட்கொள்வது தீங்கை உண்டாக்குமா?

  இது வெறும் கட்டுக்கதையே தவிர உண்மை அல்ல என ஊட்டச்சத்து நிபுணரும், நீரிழிவு கல்வியாளருமான டாக்டர் சுவாதி பாத்வால் கூறுகிறார்.

  அதிகளவிலான கால்சியம் நிறைந்த உணவுகளுடன், ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், சிறுநீரக கல் உருவாக்கத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. ஏனெனில் குடலில் கால்சியம் ஆக்ஸாலிக் அமிலத்துடன் பிணைந்து, அதன் உறிஞ்சுதலைத் தடுப்பதுடன், சிறுநீர் ஆக்ஸலேட்டைக் குறைக்கிறது. குடலில் உருவாகும் இந்த படிகங்கள், நார்ச்சத்து மற்றும் பிற தேவையற்ற வெகுஜனங்களால் மலமாக கழிக்கப்படுகின்றன.


 • ஆயுர்வேதம்

  இதுக்குறித்து ஆயுர்வேதம் கூறுவது என்னவென்றால், ஆயுர்வேதத்தின் படி, பால் மற்றும் கீரையின் கலவையானது பருவ மாற்றத்தின் போது கபத்தை அகற்ற உதவுகிறது. இருப்பினும், மிதமான அளவில் மட்டுமே உட்கொள்ள பரிந்துரைக்கிறது. அதுவும் 1/2 கப் பால் மற்றும் 2-3 பசலைக்கீரை இலை மட்டுமே.
உலகில் பல்வேறு விஷயங்கள் மக்களால் சரியான காரணம் தெரியாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் பலரும் காரணம் தெரியாமல் பின்பற்றும் ஒன்று தான் பசலைக் கீரை சாப்பிட்டால் பால் குடிக்கக்கூடாது என்பது. இந்தியர்களைப் பொறுத்தவரை, எந்த கீரை வகைகளுடனும் பால் அல்லது தயிரை சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்ற பொதுவான கருத்து பின்பற்றப்பட்டு வருகிறது.

MOST READ: வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க...

உண்மையிலேயே இந்த காம்பினேஷன் உடலுக்கு பல்வேறு தீமைகளை உண்டாக்குமா? இதுப் பற்றிய உங்களின் கருத்து என்ன? இப்போது நாம், பசலைக்கீரை சாப்பிட்டால் ஏன் தயிர் அல்லது பாலை உட்கொள்ளக்கூடாது என்பதன் பின்னணியில் உள்ள உண்மையைக் காண்போம்.

MOST READ: ஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

   
 
ஆரோக்கியம்