Back
Home » ஆரோக்கியம்
ஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...!
Boldsky | 27th Feb, 2020 01:30 PM
 • சேற்றுப்புண்

  சேற்றுபுண் ஒரு பொதுவான பூஞ்சை தொற்று. பெரும்பாலும் இது மழைக்காலங்களிலும், தண்ணீரில் அதிக நேரம் காலை வைத்திருக்கும்போது சேற்றுப்புண் ஏற்படுகிறது. இது தோலின் மேல் உருவாகி பரவக்கூடியது. நீங்கள் ஜிம்முக்கு செல்லும்போது, இந்த சேற்றுப்புண் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மிகவும் பொதுவான அறிகுறி சிவப்பு தடிப்புகளுடன் அரிப்பு மற்றும் கால்களின் பக்கத்திலும் கால்விரல்களுக்கும் இடையிலும் சிவந்து வெடித்தல் ஆகும்.

  MOST READ: விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாத மர்மமான மனித நடத்தைகள் என்னென்ன தெரியுமா?


 • சிகிச்சை

  சேற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டிருக்கும் பாதத்தை பூஞ்சை காளான் கிரீம்கள் மற்றும் பொடிகள் மூலம் எளிதாக சிகிச்சையளிக்க முடியும். கடுமையான சந்தர்ப்பங்களில், உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பூஞ்சை காளான் சிகிச்சையை நீங்கள் மேற்கொள்ளலாம். சேற்றுப்புண் வருவதற்குமுன் தடுப்பு சிறந்த சிகிச்சையாகும். எனவே எப்போதும் உங்கள் காலணிகள் அல்லது ஃபிளிப் ஃப்ளாப்புகளை அணியுங்கள். ஜிம் தரையில் உங்கள் கால்களை வைக்க வேண்டாம். நீங்கள் அதிகமாக வியர்த்தால், உங்கள் காலணிகளை அணிவதற்கு முன், கால்களில் பூஞ்சை எதிர்ப்பு பொடியை தடவுங்கள்.


 • பேன்

  பேன்கள் எள்ளின் அளவுள்ள ஒரு ஒட்டுண்ணி பூச்சியாகும். இவை உயிர் வாழ்வதற்காக மனிதனின் சிறு துளி இரத்தத்தை உறிஞ்சும். மார்பு, அக்குள், புருவம், கண் இமைகள் மற்றும் தாடி உள்ளிட்ட உடல் பாகங்களை பேன் தொற்றக்கூடும். பாதிக்கப்பட்ட நபரின் துண்டுகளைப் பயன்படுத்தி நீங்கள் பேன்களைப் பெறலாம். கடுமையான அரிப்பு மிகவும் பொதுவான அறிகுறியாகும்.


 • சிகிச்சை

  பேன்களுக்கு சிகிச்சையளிக்க லோஷன்கள், ஷாம்புகள் மற்றும் இயற்கை மருந்துகள் பல உள்ளன. நீங்கள் பயன்படுத்தும் டவல் (துண்டு), தொப்பிகள் அல்லது பிற பொருட்களை ஜிம்மில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம். உடற்பயிற்சி செய்யும்போது சுகாதாரம் குறித்தும் பயிற்சி செய்யுங்கள். உங்கள் பொருட்களை ஜிம் பையில் மூடி வைக்கவும், இதனால் பேன் நுழைய முடியாது.

  MOST READ: உங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்...!


 • கால் விரல் நகம் பூஞ்சை

  கால் விரல் நகம் பூஞ்சைக்கு மிகவும் பொதுவான காரணம் டிஸ்டல் சப்ஜுங்கல் ஒனிகோமைகோசிஸ். ஒனிகோமைகோசிஸ் என்பது பெரியவர்களுக்கும் வயதானவர்களுக்கும் ஏற்படும் மிகவும் பொதுவான கால் ஆணி பூஞ்சை தொற்று. இதனால் பாதிக்கப்பட்டியிருந்தால், கால் நகங்கள் மிகவும் கடினமாகவும் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இது உங்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தும்.


 • சிகிச்சை

  இந்த பாதிப்பிற்கு சிகிச்சையளிக்க நீங்கள் பூஞ்சை காளான் தூளைப் பயன்படுத்தலாம். எந்த முன்னேற்றமும் இல்லையென்றால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பெற உங்கள் மருத்துவரைச் சந்திக்கலாம். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கீரீம் மற்றும் களிம்புகளை பயன்படுத்தலாம். இந்த நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க மூன்று மாதங்கள் ஆகலாம்.


 • பிறப்புறுப்பில் நமைச்சல்

  ஆண், பெண் இருபாலருக்கும் பிறப்புறுப்பில் நமைச்சல் ஏற்படும். பிறப்புறுப்பு என்பது மிகவும் மென்மையானது. அந்த பகுதியில் நமைச்சல் ஏற்படுவதற்கு பூஞ்சை தொற்று காரணமாக இருக்கலாம். ஜிம்மில் நீங்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும்போது கால்களுக்கு இடையில் அடிக்கடி உராய்வு மற்றும் அந்த பகுதியில் ஈரம் ஏற்படும். உராய்வு மற்றும் ஈரப்பதம் காரணமாக பிறப்புறுப்பு பகுதியில் நமைச்சலை பெறுகிறார்கள். பொதுவாக நமைச்சலைத் தொடர்ந்து இளஞ்சிவப்பு-சிவப்பு சொறி போன்றவை காணப்படும்.

  MOST READ: உங்க லவ்வர் 'அந்த' விஷயத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதற்கான அறிகுறிகள் இதுதானாம்...!


 • சிகிச்சை

  ஈரப்பதத்தைக் குறைக்க உதவும் உலர்ந்த துத்தநாகப் பவுடரை அந்த பகுதியில் தேய்க்கலாம். ஈரமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். வொர்க் அவுட் செய்யும்போது, குறிப்பாக ஈரப்பதத்தைத் துடைக்கும் உள்ளாடைகளைத் தேர்வுசெய்து அணிய வேண்டும். இதில், நீங்கள் எந்த முன்னேற்றத்தையும் உணரவில்லை என்றால், மருத்துவரை சந்திக்கலாம்.


 • படர்தாமரை

  படர்தாமரை பலவிதமான பூஞ்சைகளால் ஏற்படும் தோலின் பொதுவான தொற்று. நீங்கள் தோலில் இருந்து தோல் தொடர்பு, அழுக்கு துண்டுகள், ஈரமான ஜிம் ஷவர் மற்றும் பிற பாதிக்கப்பட்டவரின் ஆடைகள் மூலம் படர்தாமரையை நீங்கள் பெறலாம். இது தோலின் மீது சிவப்பு திட்டுக்களை உருவாக்கி, அரிப்பு மற்றும் நமைச்சலை ஏற்படுத்தும். இது பொதுவாக மார்பு, முதுகு, பிட்டம் மற்றும் தொடை பகுதியில் ஏற்படுகிறது.


 • சிகிச்சை

  இதை இயற்கை வைத்திய முறையில் சரிசெய்யலாம். பூண்டு, வேப்பிலை, அயோடின் ஆகியவற்றை கொண்டு படர்தாமரையை அகற்றலாம். மருத்துவரின் அறிவுறைபடி, களிம்புகள் மற்றும் கிரீம்களை எடுத்துக் கொள்ளலாம். சொறி ஒரு உடல் பாகத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதில் பரவக்கூடும், எனவே இதை புறக்கணிக்காதீர்கள். உடனே சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.
சுறுசுறுப்பாக இருக்கவும ஆரோக்கியமாகவும் இருக்கவும் நாம் ஜிம்முக்குச் செல்கிறோம். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால், மறுபுறம் உங்கள் உடற்பயிற்சி கூடமே உங்களை நோய்வாய்ப்படுத்தக்கூடிய பாக்டீரியா மற்றும் கிருமிகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதை நீங்கள் அறிந்தால் உண்மையாக ஆச்சரியப்படுவீர்கள்.

எந்தவொரு நல்ல விஷயத்திலும், சில தீங்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது இங்குதாம் இருக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஜிம்மிற்கு செல்லும் நீங்கள், அங்கிருந்து சில வியாதிகளை அல்லது தொற்றுகளை பிடித்துக்கொண்டு வருகிறீர்கள். உங்கள் உடற்பயிற்சி நிலையத்திலிருந்து நீங்கள் பிடிக்கக்கூடிய பொதுவான தொற்றுநோய்களை பற்றியும் அவற்றிற்க்கான சிகிச்சை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

   
 
ஆரோக்கியம்