Back
Home » திரைவிமர்சனம்
ஷாக் கொடுக்கும் த்ரில்லர்தான்... ஆனா, பதைபதைப்போ, பரபரப்போ இல்லையே..?
Oneindia | 13th Mar, 2020 03:20 PM
 • ஆக்ரோஷ சிபிராஜ்

  போலீஸ் அதிகாரி கேரக்டருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் சிபிராஜ். அவரது உயரமும் தோற்றமும் அதற்கு ஈடுகொடுக்கிறது. காதலியின் கோபத்துக்கு ஆளாகும்போதும், கடத்தப்படும் குழந்தைகள் மர்மமாக இறக்கும்போதும் சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டும்போதும் அளவான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.


 • மிரட்டுகிறார், நட்டி

  நாயகி, ஷிரின் காஞ்ச்வாலா, அழகாக இருக்கிறார். வழக்கமான சினிமா ஹீரோயின்கள் செய்யும் வேலைதான் அவருக்கும். காதல், செல்ல மோதல், பிறகு ஹீரோ உயிரைக் காப்பாற்றுபவர் என தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். ஜீப்பில் இருந்து இறங்கி என்ட்ரியாகும் போதே மிரட்டுகிறார், நட்டி. அவரது உயரமும் அந்த ஸ்டைலும் வில்லத்தனத்துக்கு அப்படியே பொருந்துகிறது.


 • அரசியல்வாதி பவா

  ஆட்டத்தை ஆரம்பிக்கிறேன் என்று அவருக்கு கொடுக்கப்படுகிற பில்டப்தான், பொசுக்கென்று உடைகிறது. அந்த கிளைமாஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. அரசியல்வாதியாக எழுத்தாளர் பவா. செல்லத்துரை, பொருத்தமான தேர்வு. அசையாமல், அலட்டாமல் பேசுகிறார். நடக்கிறார். அவர் கதை சொல்லும் போது இருக்கும் கம்பீரம், இதில் இல்லை. வசனங்களை படித்துவிட்டு ஒப்பிப்பது போல இருக்கிறது. டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம்.


 • பாடல்கள்

  கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் பதிகிறார் சமுத்திரகனி. போலீஸ் அதிகாரி அனில் முரளி, ஏட்டு சார்லி, வில்லத்தன அபிஷேக், கடைசியில் வரும் முனிஷ்காந்த், அரசியல்வாதியின் மகள் ரித்விகா, ஒரு காட்சியில் வரும் சனம் ஷெட்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் படத்துக்கு அது வேகத்தடைதான். ராசாமணியின் ஒளிப்பதிவு, கும்பகோணத்தை விதவிதமாகக் காட்டுகிறது.


 • கேள்விகள்

  நகரில் குழந்தை அடிக்கடி கடத்தப்படுகிறது என்ற விஷயத்தைச் சொல்கிறார்கள் படத்தில். அது நமக்குள் பதைபதைப்பையோ பரபரப்பையோ ஏற்படுத்த வேண்டுமே? ம்ஹூம். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். நட்டி மீதான பில்டப்புகள், ட்விஸ்டுக்காக மட்டுமே என்பதால், அவர் ஏன், ஹீரோ- ஹீரோயின் மீது விபத்தை ஏற்படுத்த வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
குழந்தை கடத்தல் கும்பலுக்குப் பின் இருக்கும் அரசியல்வாதியையும் மருத்துவ பிராடுகளையும் சொல்கிறது வால்டர்!

போலீஸ் அதிகாரி சிபிராஜும், ஷிரின் காஞ்ச்வாலாவும் காதலர்கள். ஊரை மொத்தமாக தன் கன்ட்ரோலில் வைத்திருக்கிறார் எம்.எல்.ஏ, பவா செல்லத்துரை. இந்நிலையில், நகரில் பிறந்த குழந்தைகள் அடிக்கடி காணாமல் போக, இதற்கு பின்னால் ஏதோ சதி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார் சிபிராஜ். அதைத் தேடி சென்றால், காத்திருக்கிறது அடுத்தடுத்து அதிர்ச்சிகள்.

ஸ்ரீதேவியிடம் நிறைய கற்றுக்கொண்டேன் | YAMINI CHANDER INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

இதற்கிடையே சிபியால் என்கவுன்டர் செய்யப்பட்ட சமுத்திரக்கனியின் நண்பர் நட்டி, அதிரடியாக என்ட்ரியாகிறார் வில்லனாக. சிபிராஜ் அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? எதற்காக குழந்தைகள் கடத்தப்பட்டன? நட்டி யார் என்பதைச் சொல்கிறது மீதி படம்.

   
 
ஆரோக்கியம்