Back
Home » திரைவிமர்சனம்
தாராள பிரபு விமர்சனம்... அடல்ட் கன்டென்ட்தான்... கொஞ்சம் அப்படி இப்படி சொல்லியிருக்காங்க..!
Oneindia | 13th Mar, 2020 08:48 PM
 • விந்துதானம்

  டாக்டர் விவேக், ஒரு ஹோம் நடத்துகிறார். குழந்தை இல்லாதவர்களுக்கு உயிரணுதானம் பெற்று குழந்தை பாக்கியம் தரும் கிளினிக். ஆஃபர்கள் குவிய, ஆரோக்கியமான டோனர் தேவை. மாட்டுகிறார் ஹரிஷ் கல்யாண். புட்பால் பிளேயர், எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஸ்டிராங்கான டோனர். துரத்தி துரத்தி விஷயத்தைச் சொல்லி, சம்மதிக்க வைக்கிறார். பிறகு அவர் காட்டில் பண மழை.


 • குழந்தை பாக்கியம்

  டாக்டர் விவேக்கின் திருவிளையாடலால் ஹரிஷ், தான்யா கல்யாணம் நடக்கிறது. பின்னர்தான் பிரச்னை. வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளின் விவரம் கேட்டு கதவை தட்டுகிறது போலீஸ். தான்யாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மருத்துவம் கைவிரிக்க, ஹரிஷ், உயிரணு டோனர் என்பது தெரிய வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக வரும் சிக்கலை, விவேக் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் படத்தின் அடுத்த பகுதி.


 • வாழ்த்துகள்

  ஹரிஷ் கல்யாண் அந்த கேரடக்ரில் நன்றாக நடிக்கிறார். வீட்டில் செல்லமாகச் கொஞ்சுகிறார், காதலியிடம் வழிகிறார், விந்து டோனர் என்கிறதில் வெட்கம் கொள்கிறார். நடிப்பிலும், உடல் மொழியிலும் முன்னேற்றம். வாழ்த்துகள் பாஸூ!
  தான்யா ஹோப்பின் நடிப்பு, கிளாஸ். தன்னைப் பற்றிச் சொல்லிவிட்டு ஹரிஷின் பதிலுக்காக காத்திருக்கும் அந்த தருணத்தை அழகாக வெளிப்படுத்துகிறார்.


 • வசனங்கள்

  ஹரிஷ் பற்றிய உண்மை தெரிந்த பிறகு 'உனக்கு ஊரெல்லாம் குழந்தை, எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை' என்று உருகவும் செய்கிறார். ஆனால் சில காட்சிகளில் அவருக்கு அக்கா போலவும் தெரிகிறார். விவேக் படம் முழுக்க வரும் இன்னொரு ஹீரோ. நீண்ட இடைவெளிக்கு பிறகு கவனிக்க வைக்கிற கேரக்டர் அவருக்கு. அவ்வப்போது அவர் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் தியேட்டரை அதிர வைக்கிறது.


 • சொதப்புவது

  ஒரு டாக்டராக, தன் கடமையையும், தன்னால் பாதிக்கப்பட்டவனை பாதுகாப்பதில் பொறுப்பையும் காட்டுகிறார். பொதுவாக ரீமேக் படங்களை சொதப்புவதுதான் நம் சினிமாவின் வழக்கம். ஆனால் இந்தப் படத்தைக் கச்சிதமாகத் தந்திருக்கிறார், கிருஷ்ணா மாரிமுத்து. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவு குளிர்ச்சி. 5 பேர் இசை அமைத்திருக்கிறார்கள். பின்னணி இசை சிறப்பு.


 • நாடக காட்சிகள்

  விந்துதானம் குறித்து தமிழ்நாட்டில் அதிக அறிமுகமில்லை. அதை கொஞ்சம் முகச் சுழிப்போடுதான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. விவேக், டோனர் தேடி அலைவதும், அதற்காக அவர் போடும் திட்டங்களும் நாடக காட்சிகளை போல இருக்கிறது. விந்து தானத்தைவிட தத்தெடுப்புதான் நம் நாட்டுக்கு உகந்தது என்பதை படம் அழுத்தமாக பேசவில்லை என்றாலும் கவனிக்க வைக்கிறார் இந்த தாராள பிரபு.
Star Cast: ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக், அனுபமா குமார், சச்சு

Director: கிருஷ்ணா மாரிமுத்து

சென்னை: இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன விக்கி டோனரை, அப்படியே தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். மக்களால் அதிகம் அறியப்படாத 'உயிரணு தானம்தான்'தான் கதை களம்.

வேலை தேடும் ஹரிஷ் கல்யாணுக்கு காதல் கிடைக்கிறது. அம்மா நடத்தும் பாரம்பரிய சித்த வைத்திய நிலையத்தில் இருந்து மசாஜ் ஆயிலை டெலிவரி செய்யச் சென்ற இடத்தில் தன்யா ஹோப்புடன் லவ். இது ஒரு பக்கம்...

   
 
ஆரோக்கியம்