Back
Home » ஆரோக்கியம்
பெருங்குடல் அழற்சியால் மரணமடைந்த நடிகர் இர்ஃபான் கான்: இந்நோய் குறித்து பலரும் அறியாத விஷயங்கள்!
Boldsky | 29th Apr, 2020 01:50 PM
 • பெருங்குடல் அழற்சி என்றால் என்ன?

  பெருங்குடல் அழற்சி என்பது பெருங்குடலின் உட்சுவர் பகுதியில் ஏற்பட்ட அழற்சி ஆகும். இந்த நிலைக்கு ஆங்கில மருத்துவ பெயர் கோலிடிஸ். நோய்த்தொற்று, மோசமான இரத்த ஓட்டம் மற்றும் ஒட்டுண்ணிகள் உள்ளிட்ட காரணங்களால் பெருங்குடல் அழற்சியில் பல்வேறு வகைகள் உள்ளன.


 • பெருங்குடல் அழற்சிக்கான காரணங்கள்

  தொற்று

  வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளால் பெருங்குடல் அழற்சி ஏற்படலாம். ஒருவருக்கு பெருங்குடல் அழற்சி அசுத்தமான நீர் மற்றும் அசுத்தமான உணவுகளை உட்கொள்வது அல்லது மோசமான சுகாதாரம் போன்றவற்றால் ஏற்படலாம்.

  க்ளோஸ்ட்ரிடியம் டிஃப்சைல் (Clostridium difficile) எனப்படும் மற்றொரு பாக்டீரியமும் பெருங்குடலில் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. இது ஒருவர் ஆன்டி-பயாடிக் மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக, அதிகப்படியான பாக்டீரியாக்களின் பெருக்கத்தால், குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் சமநிலையில் இடையூறை ஏற்படுத்துவதால் நிகழ்கிறது.


 • அழற்சி குடல் நோய்க்குறி (Inflammatory Bowel Syndrome/IBS)

  IBS என்பது ஒரு நாள்பட்ட நோய்களின் குழு ஆகும். இது செரிமான மண்டலத்தில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. IBS-யில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி.


 • இஸ்கிமிக் பெருங்குடல் அழற்சி

  பெருங்குடலின் ஒரு பகுதியில் இரத்த ஓட்டம் குறையும் போது, அது இஸ்கிமிக் பெருங்குடல் அழற்சியை உண்டாக்குகிறது. குடலில் இரத்த வழங்கல் குறைவதால், வலி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். குறுகிய அல்லது அடைப்பு ஏற்பட்ட தமனிகள், குறைந்த இரத்த அழுத்தம் அல்லது இரத்த சோகை காரணமாகவும் இஸ்கிமிக் பெருங்குடல் அழற்சி ஏற்படலாம்.


 • ஒவ்வாமை எதிர்வினைகள்

  ஒவ்வாமை கோலிடிஸ் பெரியவர்களை விட குழந்தைகளிடம் தான் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலை கிட்டத்தட்ட இரண்டு-மூன்று சதவீத குழந்தைகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் இம்மாதிரியான அழற்சி மாட்டுப்பாலில் உள்ள புரோட்டீனால் ஏற்படும். இந்த அழற்சியானது இரத்தம் அல்லது சளி கலந்த மலம் மற்றும் வாய்வுத் தொல்லையை உண்டாக்கும்.


 • மைக்ரோஸ்கோபிக் பெருங்குடல் அழற்சி

  லிம்போசைட்டுகளின் அளவு அதிகரிக்கும் போது ஏற்படுவது தான் மைக்ரோஸ்கோபிக் பெருங்குடல் அழற்சி. இந்த வகை பெருங்குடல் அழற்சியை மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காண முடியும்.


 • மருந்து தூண்டலால் ஏற்படும் பெருங்குடல் அழற்சி

  குறிப்பிட்ட சில அழற்சி எதிர்ப்பு மருந்துகள் சிலருக்கு பெருங்குடல் அழற்சியுடன் தொடர்பு கொண்டுள்ளன. இதற்கு NSAID மருந்துகள் தான் காரணம். வயதானவர்கள் அல்லது NDAID-களை நீண்ட நாட்களாக பயன்படுத்துபவர்களுக்கு மருந்து தூண்டலால் ஏற்படும் பெருங்குடல் அழற்சி ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.


 • பெருங்குடல் அழற்சிக்கான அறிகுறிகள்:

  * அடிவயிற்று வலி மற்றும் பிடிப்புக்கள்

  * காய்ச்சல்

  * குமட்டல்

  * இரத்தம் கலந்த அல்லது இரத்தமில்லாத வயிற்றுப்போக்கு

  * வயிற்று உப்புசம்

  * களைப்பு

  * உடல் எடை இழப்பு

  * உடல் வறட்சி

  * குளிர்

  உங்களுக்கு நாள்பட்ட வயிற்றுப்போக்கு இருந்தால் மற்றும் கடுமையான வயிற்று வலியை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.


 • சிகிச்சைகள்

  பெருங்குடல் அழற்சியின் வகைகளைப் பொறுத்து சிகிச்சை முறைகள் வேறுபடும். பெரும்பாலான வகை பெருங்குடல் அழற்சிக்கு அழற்சி எதிர்ப்பு மருந்துகள், நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள், வயிற்றுப்போக்கு எதிர்ப்பு மருந்துகள், ஆன்டி-பயாடிக் மருந்துகுள் மற்றும் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் டி போன்ற சப்ளிமெண்ட்டுகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான் பெருங்குடல் தொற்றின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஏப்ரல் 29,2020 அன்று காலை காலமானார். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில், அவர் ஒரு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதற்காக ஒரு வருடமாக இங்கிலாந்தில் சிகிச்சை பெற்றதாகவும் அறிவித்திருந்தார். இந்த நடிகர் ஏப்ரல் 28 ஆம் தேதி மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Shocking: Irfan Khan Passed Away | Mystery behind

நடிகர் இர்ஃபான் கானின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இப்போது 54 வயதில் மரணமடைந்த பிரபல நடிகருக்கு இருந்த பெருங்குடல் அழற்சி குறித்தும், அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை விரிவாக காண்போம்.

   
 
ஆரோக்கியம்