Back
Home » சிறப்பு பகுதி
மெகா ஹிட் 'பாபி'யில் இருந்து ஜீத்து ஜோசப்பின் 'த பாடி' வரை.. பிரபல நடிகர் ரிஷி கபூரின் திரைப்பயணம்!
Oneindia | 30th Apr, 2020 11:52 AM
 • சினிமா குடும்பம்

  இந்த குடும்பம், பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கி இருக்கிறது, பாலிவுட்டில். இந்தக் குடும்பத்தில் ஒருவர்தான் பழம்பெரும் ஹீரோவும் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ்கபூர். இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ள ராஜ்கபூரின் மூன்றாவது மகன்தான் ரிஷி கபூர். குடும்பமே சினிமாவில் இருக்க, இவர் மட்டும் விட்டுவிடுவாரா என்ன? குடும்ப வழியில் நடிக்கத் தொடங்கினார்.


 • தேசிய விருது

  அப்பா ராஜ்குமாரின் 'ஶ்ரீ 420' படத்தில் ஒரு பாடல் காட்சியில், முதன்முதலாகத் தலைகாட்டினார் ரிஷி. அடுத்து அப்பாவின் மேரே நாம் ஜோக்கர் படத்தில் இளம் வயது ராஜ்கபூராக நடித்தார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது அவருக்கு. பிறகு சினிமா பக்கம் தலைகாட்டாத ரிஷி கபூர், நேரடியாக ஹீரோவாகக் களத்தில் இறங்கினார். அந்தப் படம் 'பாபி'.


 • எனக்காக அல்ல

  இந்தப் படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானது குறித்து, ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார் ரிஷி கபூர். 'அப்பாதான் அந்த படத்தை தயாரித்து இயக்கினார். இது என்னை ஹீரோவாக்க உருவக்கப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. அப்போது ராஜேஷ் கண்ணா, சூப்பர் ஸ்டார். அவரை வைத்து இந்த காதல் கதையை இயக்கலாம் என நினைத்தார் அப்பா. அவருக்கு சம்பளம் கொடுக்க முடியாததால்தான், என்னை ஹீரோவாக்கினார்'.


 • கமல்ஹாசனுடன் சாகர்

  அந்த, பாபி படம் டிரெண்ட் ஷெட்டராக அமைந்தது. இப்போதும் தவிர்க்க முடியாத இந்தி சினிமாவின் 25 படங்கள் பட்டியலில் 'பாபி'யும் இருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடித்த, லைலா மஜ்னு, சாந்தினி, அமர் அக்பர் அந்தோணி, கர்ஸ், சர்கம் உட்பட பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. கமல்ஹாசனுடன் இணைந்து சாகர் என்ற படத்திலும் ரஜினியுடன் தோஸ்தி துஸ்மனி படத்திலும் நடித்திருக்கிறார் ரிஷி கபூர்.


 • அமிதாப்பச்சனுடன்

  இரண்டாயிரமாவது ஆண்டு வரை ஹீரோவாக நடித்து வந்த ரிஷி கபூர், பிறகு கேரக்டர் ரோலில் நடிக்கத் தொடங்கினார். யே ஹே ஜல்வா, ஹம் தும், ஃபானா, நமஸ்தே லண்டன், லவ் ஆஜ்கல் உட்பட பல படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார், ரிஷி கபூர். கடந்த சில வருடங்களுக்கு முன், தனது நண்பர் அமிதாப்பச்சனுடன் 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்து '102 நாட் அவுட்' என்ற படத்தில் நடித்தார். இந்த காமெடி படம் ஹிட் படமாக அமைந்தது.


 • நடிகை நீது சிங்

  அவர் கடைசியாக நடித்த படம், 'த பாடி'. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த மிஸ்டரி த்ரில்லர் படம், கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்த இந்தப் படத்துக்குப் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்தார் ரிஷி கபூர். இவர் தன்னுடன் 15 படங்களில் ஜோடியாக நடித்த நடிகை நீது சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார், 1980 ஆம் வருடம்.


 • ரன்பீர் கபூர்

  பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட திருமணங்களில் ஒன்று இவர்களுடையது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். மகன் ரன்பீர் கபூர், அப்பா, தாத்தா வழியை பின்பற்றி பாலிவுட்டின் பிரபல ஹீரோவாக இருக்கிறார். மகள் ரித்திமா ஃபேஷன் டிசைனர். தொழிலதிபர் பரத் சஹானியை திருமணம் செய்திருக்கிறார் இவர். ஏராளமான விருதுகளை பெற்றுள்ள இந்தி சினிமாவின் லெஜண்ட்டான ரிஷி கபூர், மறைந்துவிட்டாலும் அவர் படங்களின் மூலம் வாழ்ந்துகொண்டிருப்பார்.
சென்னை: இந்தி சினிமாவுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. இர்ஃபான் கான் மறைந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்குள், உயிரிழந்திருக்கிறார் இன்னொரு பிரபலம் ரிஷி கபூர்!

Rishi Kapoor demise shook the nation and Bollywood

பாலிவுட்டில், கபூர் குடும்பத்துக்கு பெரிய சினிமா வரலாறு இருக்கிறது. 'எங்க குடும்பத்துக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு' என்று வரும் வசனங்களை பல படங்களில் கேட்டிருப்போம். அந்த வசனம் இவர்கள் குடும்பத்துக்கு அப்படியே பொருந்தும்!

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஸ்டூடியோ என இவர்கள் மெகா குடும்பத்துக்காரர்கள்.

24 மணி நேரத்தில் 2வது ஷாக்.. பிரபல நடிகர் ரிஷி கபூர் காலமானார்.. பெரும் சோகத்தில் பாலிவுட்!

   
 
ஆரோக்கியம்