Back
Home » சிறப்பு பகுதி
திரையுலகை தலைகீழாக புரட்டிய கொரோனா.. லாக்டவுனுக்கு பிறகு மீளுமா.. மெகா பட்ஜெட் படங்களின் நிலை என்ன?
Oneindia | 5th May, 2020 04:51 PM
 • பயமின்றி வருவார்களா

  கொரோனா கலவரம் முடிவுக்கு வந்தாலும், மக்கள் பயமின்றி கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு வருவார்களா? என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. மறுபடியும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கினால், மீண்டும் தியேட்டர்கள் மூடப்படும் அபாயமும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடங்கப்பட்டு கிடப்பில் கிடக்கும் பல மெகா பட்ஜெட் படங்களின் நிலை என்ன ஆகும்? என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.


 • பொன்னியின் செல்வன்

  மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஷூட்டிங் இதுவரை 25 சதவீதம் தான் நிறைவு அடைந்திருக்கிறது. லாக்டவுன் காரணமாக போடப்பட்ட செட்டுகள், நடிகர்களின் கால்ஷீட் மற்றும் அவர்களின் ஆரோக்கிய விஷயங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும், திட்டமிட்டதை போல அத்தனை பட்ஜெட்டை மீண்டும் தயாரிப்பு நிறுவனம் செலவிடுமா? என்ற மில்லியன் டாலர் கேள்வியும் உதயமாகி இருக்கிறது.


 • இந்தியன் 2

  ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல படங்கள் பட்ஜெட் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்கும் அந்த பாதிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தையும் லைகா நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தர்பார் படத்தின் தோல்வி மற்றும் இந்தியன் 2 ஷூட்டிங் விபத்து உள்ளிட்டவற்றால் லைகா சுபாஸ்கரன் மனமுடைந்து போயுள்ளார்.


 • ஆர்.ஆர்.ஆர்

  அப்படியே பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், திரையரங்குகளுக்கு கூட்டம் வராமல் இருந்தால், ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி வசூல் சாதனை எல்லாம் எப்படி சாத்தியமாகும். பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படமும் இன்னும் பாதி கிணற்றை தாண்ட வேண்டி இருக்கிறது. அஜய் தேவ்கன், ஆலியா பட் காட்சிகள் எல்லாம் முற்றிலுமாக படமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 • ஹாலிவுட்டிலும்

  இந்தியாவில் மட்டுமின்றி, இந்த லாக்டவுன் பாதிப்பு ஹாலிவுட் உள்ளிட்ட அனைத்து உலக சினிமா மார்க்கெட்டின் ஆணி வேரையும் பிடுங்கி எறிந்து இருக்கிறது. இந்நிலையில், பல ஆயிரம் கோடிகளில் உருவாகி வரும் படங்களின் நிலையும் என்ன ஆகும் என்பதும் தயாரிப்பாளர்களையும் தியேட்டர் உரிமையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவதார் 2 எல்லாம் வருமா? இல்லை அப்படியே நின்று போய் விடுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.


 • வசூல் பாதிக்கும்

  தளபதி விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, அஜித்தின் வலிமை, விக்ரமின் கோப்ரா, தனுஷின் ஜகமே தந்திரம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ரஜினியின் அண்ணாத்த என 2020ம் ஆண்டு கோலிவுட்டில் வசூலை வாரி குவிக்கலாம் என கனவு கண்ட திரையுலகிற்கு கொரோனா எனும் காலன் அனைத்தையும் பகல் கனவாக மாற்றிச் சென்றது தான் கொடுமை.


 • ஓ.டி.டி

  ஓ.டி.டி என அழைக்கப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்டவற்றின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. எதிர்கால சினிமாக்கள் தியேட்டரை சந்திக்காமல் இப்படி வெளியாகுமேயானால், பல ஆயிரம் கோடி வசூல் சாதனை பாதிப்பது மட்டுமின்றி, தயாரிப்பாளர்களும் பல ஆயிரம் கோடிகளை கொட்டி படமெடுக்க முன் வரமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.


 • நடிகர்களின் சம்பளம்

  கொரோனா பாதிப்பால் வட்டிக்கு வாங்கிய பணமெல்லாம் பல குட்டிகளை போட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர்களின் நிலையை உணர்ந்து ஹீரோ, ஹீரோயின்கள் தங்களின் சம்பளத்தை குறைக்க முன் வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. 100 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் எல்லாம், 10 கோடி சம்பளத்துக்கு தங்களை குறைத்துக் கொள்வார்களா? சம்பளத்தை குறைத்துக் கொள்ள தாமாகவே முன் வர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.
சென்னை: மார்ச் மாதம் தொடங்கிய லாக்டவுன் மே மாதத்தையும் தாண்டி செல்லும் என்றே தெரிகிறது.

Amazonல் வெளியாகும் தமிழ் படங்கள் | Master, Soorarai pottru

லாக்டவுன் முடிந்தாலும், தியேட்டர்கள் திறக்க செப்டம்பர் அல்லது, இந்த ஆண்டு இறுதி கூட ஆகும் என கணித்து வருகின்றனர்.

அப்படியே தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், முன்பு போல ஹவுஸ்ஃபுல் காட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை. சமூக இடைவெளியுடனே அனுமதிக்கப்படலாம்.

செம க்யூட்.. சுத்திப்போடுங்க.. கண்ணுப்பட போகுது.. பிக்பாஸ் நடிகையின் அட்டகாச டிக்டாக் வீடியோ!

   
 
ஆரோக்கியம்