Back
Home » உலக நடப்புகள்
கத்திரி வெயில் காலத்திலும் இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது...
Boldsky | 10th May, 2020 09:00 AM
 • மேஷம்

  மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உத்தியோகத்துல ப்ரேமோஷனும் சீனியர் அதிகாரியோட சப்போர்ட்டும் கிடைக்கும். சொந்தக்காரங்க கிட்ட ரொம்பவே கவனமா இருங்க. மாணவர்களுக்கு ஆசிரியரோட சப்போர்ட்டுனால மேன்மை கிட்டும். கண்களோட பாதுகாப்புல எச்சரிக்கையோட இருங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு லாபமும் வியாபாரமும் கூடும். பணத்தை ரொம்பவே சிக்கனமா செலவழிக்க பாருங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி குடுத்துடாதீங்க. பேச்சு வார்த்தையில கவனமா இருக்குறது நல்லது. புதுசா வீட்டு மனை வாங்குற முயற்சி வெற்றிகரமா முடியும். சின்னச்சின்னதா அலைச்சல்கள் வரலாம். வாரம் முழுக்க உடல் ரீதியாவும் மன ரீதியாவும் பிரச்சனை உண்டாகும். அதனால ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறையோட இருங்க. வெளியூர் பயணம் போக முயற்சி செய்யாதீங்க.

  அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
  அதிர்ஷ்ட எண் : 36
  அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்கிழமை


 • ரிஷபம்

  ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களோட கவலை எல்லாம் தீரும். இப்ப பாக்குற உத்தியோகம் நிலைக்குமா இல்லை, சம்பளம் வருமா வராதான்னு மனசுக்குள்ள ஒரு கேள்வி எழும். கவர்மெண்ட் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலைச்சுமை குறையலாம். தனியார் துறையில வேலை பாக்குறவங்க கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோட இருங்க. கூடுதல் வேலைப்பளு இருக்கும். மனசை தளரவிடாதீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் கிடைக்கும். வங்கிக் கடனும் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டுல மதிப்பும் மரியாதையும் கூடும். பெண்கள் விலை கூடுன பொருட்களை பத்திரமா பாத்துக்கிறது நல்லது. பணத்தை சிக்கனமா செலவழிக்க பாருங்க. அண்டை வீட்டுக்காரங்களோட வீண் வாக்குவாதம் பண்ணாம அனுசரிச்சி நடந்துக்கோங்க. சிலருக்கு மனசுல குழப்பம் வரலாம். முதல் 2 நாள் சந்திராஷ்டமம் இருக்கு கவனமாக இருங்க வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

  அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  அதிர்ஷ்ட எண் : 15
  அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை


 • மிதுனம்

  மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் சுய தொழில் செய்யுறவங்களுக்கு பேங்க் லோனுக்கு முயற்சி பண்ணினா கிடைக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு அலைச்சல் கூடிடும். உத்தியோகத்துல இருக்குற பெண்கள் வீட்டுலயும், ஆஃபீஸ்லயும் சந்தோஷமா இருப்பாங்க. வீட்டுல இருக்குற பெண்களுக்கு மதிப்பு மரியாதை செல்வாக்கு கூடும். உத்தியோகத்துல வேலைச் சுமை இருக்கும். வண்டி வாகனத்துல போகும்போது ரொம்ப நிதானமா போறது நல்லது. பண விவகாரத்துலு எச்சரிக்கையோட இருக்க பாருங்க. புதுசா சொத்து பத்து வாங்குறதுக்கு இது சரியான சந்தர்ப்பம் இல்லை. பொறுமையா இருங்க. கணவன் மனைவிக்குள்ளாற அநாவசிய வாக்குவாதம் வரலாம். வாய் வார்த்தையை விடாம காதலோட பாருங்க. குடும்பத்தில சந்தோஷம் அதிகமாகும் சங்கடங்கள் தீரும் வார மத்தியில வண்டி வாகனத்தில வெளியே போக வேண்டாம்.

  அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  அதிர்ஷ்ட எண் : 23
  அதிர்ஷ்ட நாள் : புதன்கிழமை


 • கடகம்

  கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஐ.டி துறையில வேலை பாக்குறவங்களுக்கு வேலைச்சுமை குறையலாம். செய்யுற வேலையில நிதானமும் பொறுமையும் ரொம்பவே அவசியம். பெண்கள் விஷயத்துல ரொம்ப கவனமா நடந்துக்குறது நல்லது. இல்லேன்னா அநாவசியமா கெட்ட பெயர் உண்டாகும்கிறதை மனசுல நினைச்சிக்கிட்டு பக்குவமா நடந்துக்கோங்க. வண்டி வாகனத்துல வெளியில போனா எச்சரிக்கையோட இருங்க. நெருப்பு, மின்சார பொருட்களை பயன்படுத்தும்போது ரொம்ப எச்சரிக்கையோட இருங்க. பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் வரலாம். வீட்டுல சந்தோஷமும் உற்சாகமும் கூடிடும். பண வரத்தும் சிறப்பா இருக்கும். வசதி வாய்ப்பு வந்துடும். உத்தியோகத்துல ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு. உங்களோட செல்வாக்கும், சொல்வாக்கும் கூடிடும். பித்தம் சம்பந்தமான நோய் அல்லது மயக்கம் வரலாம். அதனால ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. வார
  கடைசியில வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் பிரச்சினைகள் வரலாம்.

  அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
  அதிர்ஷ்ட எண் : 20
  அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை


 • சிம்மம்

  சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் உத்தியோகத்துல பொறுப்புகளை ரொம்ப கவனமா பாத்துக்கோங்க. தட்டிக்கழிக்காம, யாரையும் நம்பி ஒப்படைக்காம, நீங்க எந்த வேலையையும் செய்யுங்க. மாணவர்கள் மேல் படிப்பு சம்பந்தமான பரீட்சைக்கு ரொம்ப கவனமா படிங்க. பிசினஸ் பண்றவங்க இந்த வாரம் ரொம்ப பொறுமையா நிதானமா நடந்துக்கிட்டா ஏற்படுற தடங்கல் விலகிடும். பேங்க் லோனும் கிடைக்க வாய்ப்பிருக்கு. பிசினஸ்லயும் வியாபாரம் பெருகி லாபமும் கூடும். பணப் பிரச்சனை இந்த வாரம் தீந்துடும். பணம் உங்களை தேடி ஓடி வரும். மனசுக்குள்ளாற மகிழ்ச்சியும் செல்வமும் கூடும். பிள்ளைங்களால உங்களுக்கு பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி குவிப்பீங்க. கணவன் மனைவி பிரச்சினை தீரும் நேசமும் பாசமும் அதிகமாகும்.

  அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
  அதிர்ஷ்ட எண் : 10
  அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை


 • கன்னி

  கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் பிசினஸ் பண்றவங்க ரொம்பவே எச்சரிக்கையோட இருக்க பாருங்க. எதுலயும் பெருசா இன்வெஸ்ட் பண்றதை அவாய்ட் பண்றது நல்லது. உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனைங்களும் இந்த வாரம் காணாம போகும். சீனியர் அதிகாரிங்களோட பாராட்டு மழையில நனைவீங்க. அதனால செய்யுற வேலையிலயும் நிம்மதியும் சந்தோஷமும் கூடிடும். ஐ.டி துறையில வேலை பாக்குறவங்களோட கோரிக்கைகள் நல்லவிதமா நிறைவேரிடும். அக்கம் பக்கத்துல உள்ளவங்களோட இருந்து வந்த பிரச்சனைகளும் மறையும். இந்த வாரம் செய்யுற முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும் கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க.

  அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  அதிர்ஷ்ட எண் : 32
  அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்கிழமை


 • துலாம்

  துலா ராசி நேயர்களே, இந்த வாரம் ஃப்ரண்ட்ஸுங்க கிட்ட தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை அவாய்ட் பண்றது நல்லது. மாணவர்கள் படிப்புல மட்டும் கவனம் செலுத்துறது நல்லது. கவர்மெண்ட் உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கு வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு சந்தர்ப்பம் இருந்தாலும், ரொம்ப எச்சரிக்கையோட இல்லேன்னா சொந்தக்காசுல சூனியம் வச்சிக்குறது மாதிரி ஆயிடும். ரொம்பவே கவனம் அவசியம். கூடப்பொறந்தவங்களோட இருந்து வந்த சண்டை சச்சரவு மனஸ்தாபம் எல்லாம் மறையும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். குடும்பத்துலயும் குதூகலமும், மகிழ்ச்சியும் கூடிடும். பெண்களோட சப்போர்ட்டும் கிடைச்சிடும். மேலும் நல்லது நடக்குறதுக்கு உங்க குலதெய்வத்தை கும்பிடுங்க. பிரச்சனைகள் ஓடி ஒளிஞ்சிக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
  அதிர்ஷ்ட எண் : 22
  அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை


 • விருச்சிகம்

  விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் புதிய பதவியும் பொறுப்புகளும் தேடி வரும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களோட சப்போர்ட்டும் கிடைக்கும். ஷேர்மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணுனது கொழுத்த லாபத்தை கொடுக்கும். பெண்களுக்கு கணவரோட அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். குடும்பத்துக்கு தேவையான பொருட்களையும் வாங்குவீங்க. சிலர் வேலை விஷயமா வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு. இருந்தாலும் எச்சரிக்கையா இருக்குறது அவசியம். இந்த வாரம் உங்களோட ஃபைனான்ஸ் பிரச்சனை எல்லாம் காணாம போயிடும். எதிரிங்களோட இருந்து வந்த பிரச்சனையும் மறையும். தெய்வ பலமும் கூடிடும். சனிக்கிழமை நாள்ல சனிபகவானை கும்பிடுங்க.

  அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  அதிர்ஷ்ட எண் : 36
  அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை


 • தனுசு

  தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் கணவன் மனைவிக்குள்ளாற இருந்து வந்த மனஸ்தாபம் மறைஞ்சி அந்நியோன்யம் கூடிடும். பிசினஸ்ல தடங்கல் விலகி முன்னேற்றம் ஏற்பட்டு லாபமும் கூடிடும். இருந்தாலும் பிசினஸ்ல பெருசா இன்வெஸ்ட் பண்றதை ஒத்திப் போடுறது நல்லது. ஐ.டி.துறையில உத்தியோகம் பாக்குறவங்களுக்கு செல்வாக்கு கூடிடும். பணப்புழக்கமும் அதிகரிக்கும். இது வரைக்கும் தடைபட்டு வந்த சுப காரிய பேச்சுவார்த்தைகளும் நல்லவிதமா கை கூடிவரும். சொந்தக்காரங்க கூட அநாவசிய பிரச்சனை வராம இருக்க வெட்டி பேச்சுகளை தவிர்க்க பாருங்க. இந்த வாரம் உங்களோட எல்லா தேவைகளும் பூர்த்தியாகிடும். அதனால தன்னம்பிக்கையும் துணிச்சலும் கூடிடும். ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

  அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
  அதிர்ஷ்ட எண் : 12
  அதிர்ஷ்ட நாள் : வியாழன்கிழமை


 • மகரம்

  மகர ராசி நேயர்களே, இந்த வாரம் தடைபட்ட சுப காரிய பேச்சு வார்த்தைங்க நல்லபடியா முடியும். வேலை செய்யுறவங்களுக்கு புதுசா அக்ரிமெண்ட் கிடைச்சி கையெழுத்தாகிடும். உத்தியோகத்துல ப்ரமோஷனும் கிடைக்க வாய்ப்பிருக்கு. இது நாள் வரைக்கும் வீட்டுல இருந்தே வேலை பாக்குறவங்களுக்கு இடமாற்றம் கிடைக்க சந்தர்ப்பம் உண்டாகும். அதனால செய்யுற வேலையை அக்கறையோட செய்யுங்க. யார்கிட்டயும் பேசுறப்போ அநாவசியமா கோபப்பட்டு வாய் வார்த்தையை விடாதீங்க. சொந்தக்காரங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைச்சுடும். பெண்களுக்கு உற்சாகம் கூடிடும். கணவன் மனைவிக்குள்ளாற ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து போனீங்கன்னா நெருக்கம் கூடிடும். செய்யுற முயற்சியல வெற்றி கிடைச்சிடும். சமூகத்துலயும் உங்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.

  அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
  அதிர்ஷ்ட எண் : 17
  அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை


 • கும்பம்

  கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் மாணவர்கள் படிப்புல மட்டும் கவனம் செலுத்துங்க. ஆசிரியர்களோட ஆலோசனையை கேட்டு படிச்சா கூடுதல் மார்க் எடுக்கலாம். உத்தியோகத்துல பெண்களுக்கு சீனியர் அதிகாரியோட சப்போர்ட் கிடைக்கும். அதோட புதுசா பதவியும் உங்களை தேடி வரும். பிசினஸ் பண்றவங்களுக்கு கடையை டெவலப் பண்றதுக்கு பேங்க் லோனும் கிடைக்கும். வெளியூர் பிரயாணம் பண்றதை அவாய்ட் பண்ணிடுங்க. கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். உங்க பேச்சு வார்த்தையில கோபத்தை கண்ட்ரோல் பண்ணி தன்மையா பேசி பழகுங்க. மனசுலயும், உடலளவிலும் புது தெம்பும் உற்சாகமும் உண்டாகிடும். இந்த வாரம் பண வரத்து ரொம்ப அமோகமா இருக்கும். ஹெல்த் கண்டிஷன்ல கவனம் செலுத்துங்க.

  அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
  அதிர்ஷ்ட எண் : 44
  அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை


 • மீனம்

  மீன ராசி நேயர்களே, இந்த வாரம் சொந்தக்காரங்க கிட்ட கொஞ்சம் தன்மையோட பேசி பழகுனா மனஸ்தாபமோ பிரச்சனையோ வராம தவிர்த்திடலாம். செய்யுற வேலையில முழு கவனத்தோட இருங்க. பெண்கள் விஷயத்துல கொஞ்சம் எச்சரிக்கையோட நடந்துக்கிட்டா, கெட்ட பேரு வராம தவிர்த்திடலாம். பிசினஸ்ல மறைமுக எதிரிங்களோட தொல்லையும் போட்டியும் காணாம போகும். ஐ.டி. துறையிலும், தனியார் துறையிலும் உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு இன்க்ரிமெண்ட்டும், ப்ரமோஷனும் கட்டாகலாம். இருந்தாலும் வருத்தப்படாம வேலையில கவனமா இருங்க. பணம், நகை நட்டுன்னு விலை கூடுன பொருட்களை ரொம்பவே கவனமா வச்சிக்குறது நல்லது. ஷேர் மார்க்கெட்டுல கமிஷன் மூலமா பணம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இந்த வாரம் உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
  அதிர்ஷ்ட எண் : 17
  அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை
மே மாதத்தின் மத்தியில் அக்னி நட்சத்திர வெயிலின் உக்கிர தாண்டவம் ஒருபக்கம் கொரோனா வைரஸ் லாக் டவுன் மறுபக்கம் என மக்கள் பிரச்சினையில் சிக்கியிருக்கிறார்கள். சூரியனின் இடம் மாற்றம், சுக்கிரன் புதன் கூட்டணி என கிரகங்கள் ரிஷபத்தில் கூடியிருக்கின்றன. இந்த கிரகங்களின் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களும் சிலருக்கு பாதகமான பலன்களும் கிடைக்கப் போகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு சங்கடங்கள் தீர்ந்து சந்தோஷம் அதிகமாகும் என்று பார்க்கலாம். ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால கவனமாக இருப்பது நல்லது.

   
 
ஆரோக்கியம்