Back
Home » சிறப்பு பகுதி
ராஜா என்றும் ராஜாதான்.. இளையராஜா அறிமுகமான நாள்!
Oneindia | 14th May, 2020 09:05 PM
 • அசைக்க முடியாத சாதனை

  7000திற்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைப்பாளர் 20000த்திற்கும் மேற்பட்ட கான்செர்டுகள் என பல நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை செய்தவர் நம் ராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் இசையமைத்து, இசைக்கு மொழி கிடையாது, இசை ஒரு தனி மொழி, இது ரசிக்க மட்டும் தான், என்று நிரூபித்தவர் தான் நம் இசைஞானி இளையராஜா


 • பல ரசிகர்கள் வாழ்த்து

  இன்று வரை உலகின் பிரபலமான பாடல்களில் நான்காவது இடம் தளபதி படத்தில் இடம் பெற்ற "ராக்கம்மா கைய தட்டு" பாடலுக்குதான். இப்படி பல சாதனைகளை படைத்த இளையராஜா பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் ஐந்து தேசிய விருதுகளும் வாங்கியுள்ளார். இத்தனையாண்டு காலமாக நம் நெஞ்சை கவர்ந்த ராஜா தமிழ் சினிமாவில் கால் வைத்த நாளான இன்று பல பிரபலங்களும் ரசிகர்களும் இன்னும் பல சாதனைகளை நீங்கள் படைக்க வேண்டும் என வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.


 • நந்தி விருது

  தமிழ் சினிமாவின் இசையில் பெரும் அங்கமாக இருந்த இளையராஜா தெலுங்கு மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்தார்.1990ல் வெளிவந்த ஜகடேகா வீருடு அதிலோக சுந்தரி என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது வாங்கினார். பின், பொப்பிலி ராஜா என்ற திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது வாங்கினார். இது போன்று பல சாதனைகளை தெலுங்கு சினிமாவில் படைத்துள்ளார்.


 • இசைக்கு மொழி இல்லை

  தெலுங்கு சினிமாவில் சாதனை படைத்த இவர் கன்னட சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. 1996ல் வெளிவந்த நம்மூரா மண்டார ஹுவே என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் கன்னட சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்றார். பின் சிவ சைனியா என்ற படத்திற்கு இசையமைத்து கன்னட ரசிகர்களையும் பெற்றுக்கொண்டார்.


 • கொஞ்சி கரையல்லே

  தமிழ் மொழிக்கு அடுத்து அதிகமான படைப்புகள் மலையாள மொழியில் கொடுத்துள்ளார். 1986ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பூ முகப்படியில் நின்னியம் கது என்ற திரைப்படம். மம்முட்டி, ரகுமான், திலகன், மோகன்லால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த கொஞ்சி கரையல்லே என்ற பாடல் கேரளாவின் பட்டி தொட்டி எங்கும் பரவியது. எனவே நம் இசைஞானி தமிழை தாண்டி பல மொழிகளில் சாதனை படைத்தவர்.


 • இசைஞானி

  இசை என்னும் உலகில் இளையராஜா மாபெரும் ஒரு ஞானி என்பதை நாம் அறிந்ததே. எத்தனையோ மொழிகளில் இசை அமைத்த ராஜா மீண்டும் மீண்டும் நம் காதுகளுக்கு விருந்தளித்து வருகிறார். பல வீடுகளில் பல மாநிலங்களில், பல நாடுகளில் இன்றும் இளையராஜா இசை அதிகமாக கேட்கப்பட்டு வருகிறது. மொழி மாறலாம் ஆனால் ரசனை மாறாது என்பதற்கு இளையராஜா ஒரு எடுத்துக்காட்டு.
சென்னை: இசை நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. பலரின் துன்பங்களுக்கு மருந்தாக இருப்பது இசையின் நாயகன் இளையராஜாவின் இசை தான். தனிமை, அழுகை, மகிழ்ச்சி என எந்த மனநிலையில் இருந்தாலும் இவரின் இசை நம்மை வசீகரிக்கும், நம் தலைகோரும், மனதை வசப்படுத்தி கட்டி இழுக்கும் ஆற்றல்படைத்தது.

தமிழ் சினிமாவின் இசையை உலகஅளவில் தூக்கிநிறுத்தி 1970களில் இதே நாளில் வந்த ஒரு பெரும் எழுச்சிதான் இந்த பண்ணைபுரத்து ராஜா. 1976ல் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பஞ்சு அருணாச்சலம் என்ற தயாரிப்பாளரால் இளையராஜா என்று அழைக்கப்பட்டார்.

ஆனால் அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் இந்த இளையராஜா இசையின் ராஜாவாக ஆகப்போகிறார் என்று. அவரது இசை உலகை கட்டி ஆளப்போகிறது என்று. 44 ஆண்டுகள் திரைத்துறையின் தன் இசையின் மூலம் ஆளுமை செய்யும் தந்திரம் இளையராஜாவைத் தவிர வேறு யாருக்கும் அமையாது. எத்தனை இளம் இசையமைப்பாளர்கள் வந்தாலும் ராஜா என்றும் ராஜாதான்.

இந்திய சினிமாவில் டாப் 3 நடிகர்களின் லிஸ்ட்.. பிரபல நடிகை த்ரிஷா டிக் பண்ணிய ஹீரோக்கள் இவங்கதான்!

   
 
ஆரோக்கியம்