Back
Home » ஆரோக்கியம்
வே புரோட்டீன் சாப்பிடுறீங்களா? அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…
Boldsky | 15th May, 2020 10:00 AM
 • வே புரோட்டீன்

  வே ஒரு துணை உணவு என்றே கூற வேண்டும். தசைகளில் புரதத் தொகுப்பை மேம்படுத்துவதற்கும், மெலிந்த தசையை வலுவாக்குவதற்கும் மக்கள் இந்த வே புரோட்டீனை பயன்படுத்துகின்றனர். பாலானது கேசின் மற்றும் வே ஆகிய இரண்டு புரதங்கள் அடங்கியது. வே புரதமானது, கேசினிலிருந்து பிரிக்கலாம் அல்லது சீஸ் தயாரிப்பின் போது பெறலாம். அத்தகைய வே புரதத்தில் 9 அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளதால் அதனை முழுமையான புரதச்சத்து என்றே கூற வேண்டும். மேலும், அதில் குறைந்த அளவிலான லாக்டோஸ் மட்டுமே இருக்கும். வே புரதத்தை உட்கொள்வதன் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் பல உள்ளன. மேலும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து அதன் புதிய சிகிச்சை பண்புகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

  வே புரோட்டீன் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளைப் பற்றி தற்போது காண்போம். வே புரோட்டீன் சாப்பிடுபவர்களுக்கு இது நிச்சயம் உதவக்கூடிய ஒன்றாக இருக்கும்...


 • வே புரோட்டீன் நன்மைகள்

  உடல் எடை குறைக்க உதவும்

  158 பேர் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவை நியூட்ரீசன் & மெட்டபாலிசம் வெளியிட்டது, அதில் பிற பதப்படுத்தப்பட்ட பானங்களை உட்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், வே வழங்கப்பட்டவர்கள் "கணிசமாக அதிக அளவிலான உடல் கொழுப்பை இழந்ததோடு, மெலிந்த தசையை வலுவடைய செய்ததும்" கண்டறியப்பட்டுள்ளது.


 • புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

  புற்றுநோய் சிகிச்சையில் வே புரோட்டீன் செறிவு பயன்படுத்துவதற்கான நம்பிக்கைக்குரிய முடிவுகளை ஆன்டிகேன்சர் ரிசர்ச் இதழ் வெளியிட்டுள்ளன. இருப்பினும், இது குறித்த ஆராய்ச்சி மேலும் தேவைப்படுகிறது.


 • கொழுப்பைக் குறைத்தல்

  தி பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், அதிக எடை கொண்ட 70 ஆண்களுக்கும் பெண்களுக்கும் 12 வாரங்களுக்கு வே சப்ளிமெண்ட்ஸ் கொடுக்கப்பட்டு, அவர்களின் லிப்பிட் மற்றும் இன்சுலின் அளவுகளை பரிசோதித்தது. கேசீன் புரதத்துடன் ஒப்பிடும் போது வே புரோட்டீன் குழுவில் 12 வது வாரத்தில் மொத்த கொழுப்பு மற்றும் எல்.டி.எல் கொழுப்பில் கணிசமான குறைவு ஏற்படுவது கண்டறிப்பட்டுள்ளது.


 • ஆஸ்துமா

  ஆஸ்துமா உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வே புரதம் மேம்படுத்தும். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட 11 குழந்தைகளை உள்ளடக்கிய ஒரு சிறிய ஆய்வின் முடிவில், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 10 கிராம் வீதம் தினமும் இரண்டு முறை வே புரோட்டீன் கொடுக்கப்பட்டதன் விளைவாக, நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவது கண்டறியப்பட்டது.


 • இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்

  சர்வதேச டைரி ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவில், வே புரோட்டீன் கலந்து வழங்கப்பட்ட பானங்களால், உயர் இரத்த அழுத்தம் இருந்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் கணிசமாகக் குறைவது கண்டறிந்தது; இதய நோய் அல்லது பக்கவாதம் உருவாகும் அபாயமும் குறைவாகவே இருந்தது.


 • எச்.ஐ.வி நோயாளிகளில் எடை இழப்பைக் குறைத்தல்

  மருத்துவ மற்றும் புலனாய்வு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், எச்.ஐ.வி உறுதி செய்யப்பட்ட நோயாளிகளிடையே எடை இழப்பைக் குறைக்க வே புரோட்டீன் உதவக்கூடும் என்பது கண்டறியப்பட்டது.


 • சாத்தியமான ஆபத்துகள்

  பாலில் ஒவ்வாமை உள்ள சிலருக்கு வே புரோட்டீனிலும் ஒவ்வாமை கொண்டவர்களாக இருக்கலாம். மிதமான அளவுகளில், வே புரோட்டீனை எடுத்துக் கொள்வதன் மூலம் எந்தவொரு பாதகமான நிகழ்வுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும், மிக அதிக அளவு உட்கொள்வதனால் மட்டுமே இதுபோன்ற ஆபத்துகள் ஏற்படலாம்:

  * வயிற்று வலிகள்

  * தசை பிடிப்புகள்

  * பசியின்மை

  * குமட்டல்

  * தலைவலி

  * சோர்வு

  வே புரோட்டீனை தொடர்ச்சியாக அதிக அளவு உட்கொண்டு வந்தால் முகப்பரு ஏற்படக்கூடும். ஊட்டச்சத்து பார்வையில் பார்க்கும் போது, வே புரோட்டீன் மிகவும் அசாதாரணமானது மற்றும் இயற்கை புரதத்திற்கு சமமானதாக இல்லை.

  இது போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்துகள் அபாயகரமானது என்று சிலர் நம்புகின்றனர். ஏனெனில், அவை நிறைய ஊட்டச்சத்துக்களை தன்னிடையே கொண்டிருந்தாலும், சமநிலையை பெறுவதற்காக அவை அதிகப்படியான சத்துக்களால் நிரப்பப்படுகின்றன.
உணவு என்பது உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும், உயிர் வாழ அடிப்படையாக தேவைப்படக்கூடிய ஒன்று. உணவு, உறக்கம் எக்காரணம் கொண்டும் தவிர்க்கப்பட கூடாது. அப்படியாகும் பட்சத்தில் உடல் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். அதுவும் கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் உணவின் முக்கியத்துவம் நிச்சயம் தெரிந்திருக்கும். உடற்பயிற்சி மட்டும் அழகான உடற்கட்டமைப்பை தந்துவிடாது. சத்தான ஆகாரமும் மிக மிக தேவையான ஒன்று.

உடற்பயிற்சி செய்பவர்கள் புரோட்டீன் அதாவது புரதச்சத்துள்ள உணவுகளை தேடி தேடி அதிகமாக சாப்பிடுவர். குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் இயற்கை முறையில் சத்துக்களை பெறுவதை காட்டிலும், டப்பாக்களில் அடைக்கப்பட்ட சத்துக்களை சாப்பிடுவர்கள் அதிகரித்து விட்டனர். அப்படிப்பட்ட ஒன்று தான் "வே புரோட்டீன்". இதனை சாப்பிடுவதனால் முழு சத்தும் உடலுக்கு கிடைத்துவிடும் என்று எண்ணுகின்றனர். அதில் ஒரு பாதி உண்மை என்றாலும், அளவறிந்து உண்பது தானே சிறந்தது.

 
ஆரோக்கியம்