Back
Home » திரைத் துளி
லாக்டவுனால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பிரபல சீரியல் நடிகை.. மேக்கப் மேன் உதவியதாக கதறல்!
Oneindia | 15th May, 2020 07:34 PM
 • தொலைக்காட்சி பிரபலம்

  அந்த வகையில் பிரபல டிவி நடிகையான சோனல் வெங்குர்லேக்கரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இவர் ஷாஷ்திரி சிஸ்டர்ஸ் அன்ட் டெரி கல்லியன் உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு முன்னணி தொலைக்காட்சி பிரபலமாகவும் திகழ்ந்து வருகிறார்.


 • மேக்கப் மேன் உதவி

  இந்நிலையில் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார் சோனல். சாப்பாட்டுக்கு என்ன செய்வது அடுத்த மாதத்தை எப்படி ஓட்டுவது என்று கவலை கொண்டிருந்த சோனலுக்கு அவரது மேக்கப் மேன் பணம் கொடுத்து உதவியதாக தெரிவித்துள்ளார்.


 • சில புரொடியூசர்கள்

  இதுதொடர்பாக இன்ஸ்டாவில் அவர் ஷேர் செய்திருக்கும் பதிவில் " அடுத்த மாதத்தை ஓட்டுவதற்கு என்னிடம் பணம் இல்லை என்று என்னுடைய மேக்கப் மேனிடம் கூறினேன். ஏனென்றால் சில புரொடியூசர்கள் நீண்ட காலமாக எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.


 • கண்களில் கண்ணீர்

  இந்த சூழ்நிலையில் என்னுடைய மேக்கப் மேன் எப்படி சர்வைவ் பண்ணுவார், அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார், அவருக்கு பல செலவுகள் உள்ளன என்று நான் கவலைப்பட்டேன். ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த செய்தி முற்றிலும் எதிர்பாராதது. அவருடைய செய்தியைப் படித்த பிறகு என் கண்களில் கண்ணீர் வந்தது.


 • பிளாக் செய்கிறார்கள்

  மேடம் என்னிடம் 15000 ரூபாய் உள்ளது உங்களுக்கு தேவை என்றால் பெற்றுக்கொள்ளுங்கள் என கூறினார். எனக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுக்க வேண்டியவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை கொடுக்காமல் என் போன் அழைப்புகளை கூட எடுக்காமல் என்னை பிளாக் செய்கிறார்கள்.


 • மேக்கப் மேன் பங்கஜ் குப்தா

  ஆனால் என்னை குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்த என்னுடைய மேக்கப் மேன் பங்கஜ் குப்தா எனக்கு பணம் கொடுக்கிறார். அவர் பணம் கொடுப்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் அவரிடம் இல்லாத போதும் எனக்கு கொடுக்க நினைத்தார் என தெரிவித்துள்ளார்.மேக்கப் மேனின் இந்த உதவி சோனலை ரொம்பவே உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது.


 • சிலரை நினைத்து வருத்தம்

  அவரை மனதார புகழ்ந்திருக்கிறார் சோனல். சில பேருக்காக ரொம்பவே வருத்தப்படுகிறேன் என்றும் சோனல் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அலாக்ஸ்மி என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான சோனல், ஷாஷ்திரி சிஸ்டர்ஸ், யே வாதா ரஹா, சாம் டாம் டண்ட் பேட், தேவ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
சென்னை: லாக்டவுன் காரணமாக பிரபல நடிகை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் நண்பருடன் வேற லெவல் யோகா.. புக் படிக்க உங்களுக்கு வேற இடமே கிடக்கலையா அபிகைல் பாண்டே?

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க பெரும்பாலான தொழில் துறைகள் முடங்கியுள்ளன.

குறிப்பாக சினிமா மற்றும் தொலைக்காட்சி சார்ந்த அனைத்து பணிகளும் முடங்கியிருக்கிறது. இதனால் இதையே நம்பியிருக்கும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

ரைசா கேட்ட ஒரு கேள்வி.. மரண ஓட்டு ஓட்டும் நெட்டிசன்கள்.. லாக்டவுன் போரிங்னா இப்படியெல்லாமா?

   
 
ஆரோக்கியம்