Back
Home » செய்தி
கராச்சி விமான விபத்து- 37 பேர் பலி -4 பேர் உயிருடன் மீட்பு என தகவல்
Oneindia | 22nd May, 2020 09:31 PM

கராச்சி: பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 107 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கராச்சியில் குடியிருப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Pakistan flight incident| பாகிஸ்தான் விமானி அனுப்பிய தகவல்.. விமான விபத்தின் பின்னணி

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து பிகே 8303 என்ற விமானம் 107 பயணிகளுடன் இன்று கராச்சிக்கு சென்றது. கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்கும் போது குடியிருப்புகள் மீது அந்த விமானம் மோதி வெடித்து சிதறியது.

இதனையடுத்து விமான விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை அங்கு 37 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சிந்து மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் அஜ்ரா பெசுகோ கூறுகையில், 37 உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 4 பேர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.

என்னால் முடியவில்லை.. விமானம் விழுவதற்கு முன் பைலட் அனுப்பிய மெசேஜ்.. பாக். விபத்தின் பகீர் பின்னணி

இடிபாடுகளில் இருந்து 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் பாகிஸ்தானும் லாக்டவுனை அமல்படுத்தியிருந்தது.

கடந்த 16-ந் தேதி முதல்தான் பாகிஸ்தானில் விமான சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

   
 
ஆரோக்கியம்