Back
Home » Car News
உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!
DriveSpark | 23rd May, 2020 05:28 PM
 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி பிள்ளை. இந்தியா மற்றும் அரபு நாடுகளைக் கட்டிடத் தொழிலில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர், ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். ஆனால், தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதியாக உள்ளார்.

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  ஆரம்பத்தில் பல்கலைக் கழகம் மற்றும் சிறு சிறு வணிகம் குறுகிய வட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரவி பிள்ளை, ஆர்பி குழுமம் என்ற பெயரில் கட்டிடப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். இத்தொழிலின் மூலமே தற்போது வளர்ச்சியின் உச்சத்தை எட்டியிருக்கின்றார்.

  MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  ஆம், ரவி பிள்ளை தற்போது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் கன்ஸ்ட்ரக்சன் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக அரபு, கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் பெரும்பாலான கட்டிடப் பணிகளை இவரே செய்து வருகிறார். இவர், கட்டிடப் பணிகளில் மட்டுமின்றி வாகனங்கள்மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார்.

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  இதனாலயே ரவி பிள்ளையின் வீட்டில் இருக்கும் கார் நிறுத்தத்தில் ஏராளமான விலையுயர்ந்த சொகுசு கார்கள் அணி வகுத்து நிற்கின்றன. அவை ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை ஆகும். அந்தவகையில், ரவி பிள்ளையிடம் இருக்கும் கார்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

  MOST READ: மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...?

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்

  ரவி பிள்ளையிடம் இருக்கும் விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரே முதல் இடத்தில் இருக்கின்றது. இது ஓர் செடான் ரக லக்சூரி காராகும். இந்த காரை அவர் கடந்த 2011ம் ஆண்டு வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  இந்த காரில் உல்லாச கப்பல்களுக்கு இணையான சொகுசு வசதிகள் ஏராளமாக இடம்பெற்றிருக்கின்றன. இதனாலயே இந்த காரில் செல்லும்போது கப்பலில் பயணிப்பதைப் போன்று உணர்வு ஏற்படும். எனவேதான் ரவி பிள்ளை அவரது பொதுவான பயணங்களில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செடான் காரையே அதிகம் பயன்படுத்துகின்றார்.

  MOST READ: வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்600

  லிமோசைன் தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 ஓர் செடான் ரக காராகும். இதில், அளவுகடந்த சொகுசு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனாலயே லக்சூரி பயணத்தை விரும்பும் தொழிலதிபர்களின் முதல் தேர்வாக மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்600 உள்ளது. இந்த காரின் இருக்கைகள் மசாஜ் வசதியைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  இதேபோன்று, உயர் ரக இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, ஃபெர்ப்யூம் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பிரிமியம் வசதிகள் அக்காரில் இடம்பெற்றிருக்கின்றன.

  மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்600 6.0 லிட்டர் வி12 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 530 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

  MOST READ: மலிவு விலை... எக்கசக்க அம்சங்கள்... விற்பனைக்கு அறிமுகமானது ஜிபிஎஸ்ஐஇ மின்சார ஸ்கூட்டர்!

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  பிஎம்டபிள்யூ 520டி

  ரவி பிள்ளையிடம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5 செரீஸ் காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. இது டீசல் எஞ்ஜினுடைய மாடலாகும். 520டி என்று அழைக்கப்படும் இந்த கார் இந்தியாவில் அமோகமான வரவேற்பைப் பெற்ற சொகுசு கார்களில் ஒன்றாகும். இந்த காரில் அதிக நம்பத் தன்மை இருப்பதன் காரணத்தினாலயே இந்தியர்கள் மத்தியில் இந்த கார் நல்லவேற்பைப் பெற்றது.

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  இந்த மிட்-சைஸ் செடான் ரக காரை ரவி பிள்ளை வெகு நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, எந்தவொரு மாற்றமும் செய்யாமல் தற்போது வரை அக்காரை அவர் பயன்படுத்தி வருவதால், பிஎம்டபிள்யூ 520டி அவருக்கு மிகவும் பிடித்தமான கார் என யூகிக்கப்படுகின்றது.

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  ஆடி ஏ6 மேட்ரிக்ஸ்

  ரவி பிள்ளை, அவரது மகளின் திருமணத்தை அலங்கரிக்கும் விதமாக ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் காரை வாங்கியிருந்தார். இக்கார் மண்டபத்தின் நுழைவாயிலில் வரவேற்பளிக்கும் விதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைப் பலர் கண்டதாகக் கூறப்படுகின்றது. இக்கல்யாணம் 2015ம் ஆண்டு நடைபெற்றது. இந்த காரும் இந்தியாவில் அதிக புகழ்வாய்ந்த சொகுசு கார்களில் ஒன்றாக இருக்கின்றது.

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  இக்கார் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்பதாலே அதிக பாதுகாப்பை விரும்பும் தொழிலதிபர்கள் இக்காரை தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்த கார் துப்பாக்கி குண்டு போன்ற வெடி விபத்து சம்பவங்களை எளிதாக கையாளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்500

  ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் காரை மட்டுமின்றி ரவி பிள்ளை மற்றுமொரு காரையும் அவரது மகளின் கல்யாணத்தின் களமிறக்கியிருந்தார். அதுதான் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்500. இந்த காரை அவரது மகளுக்கு திருமண பரிசாக வழங்கியிருந்தார். மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்500 மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டையே அவர் பரிசாக வழங்கியிருந்தார்.

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  இது ஆரம்ப நிலை காராக இருந்தாலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சொகுசு வசதிகளைத் தாங்கிய காராக அது இருக்கின்றது. இந்த காரின் புகைப்படங்களை சமீப காலங்களுக்கு முன்பு டீம் பிஎச்பி தளம் இணையத்தில் வெளியிட்டிருந்தது. இதன் மூலமே இக்காரின் தரிசனம் வெளியுலகிற்கு கிடைத்தது.

 • உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!

  லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆடோபயோகிராஃபி

  நாம் மேலே பார்த்த பல கார்கள் செடான் ரக கார்களே ஆகும். எனவே, ரவி பிள்ளையிடம் இருக்கும் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக காராக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆடோபயோகிராஃபி காட்சியளிக்கின்றது. இந்த காரையும் ரவி பிள்ளை அவரது மகளின் திருமணத்தைத் தொடர்ந்தே வாங்கியுள்ளார். இதன் பின்னர்தான் அவரது கராஜிலும் இந்த கார் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.
ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த ரவி பிள்ளை, உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கின்றார். இவர் பயன்படுத்தும் கார்கள் ஒவ்வொன்றும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

ஆரோக்கியம்