Back
Home » ஹீரோயின்
நான் எப்படி நடிக்க வேண்டும்.. ரசிகர்களிடம் ஐடியா கேட்ட..ரஷ்மிகா மந்தனா !
Oneindia | 3rd Jun, 2020 06:08 PM
 • கனவுக்கன்னி

  ரஷ்மிகா மந்தனா பல படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா உடன் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது ஆல் டைம் பேவரைட். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவரது மார்க்கெட் நிலை எங்கேயோ போய்விட்டது. இந்த படத்தில் வரும் இன்கேம் இன்கேம் என்ற ஒரே பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர். மேலும் இவர்கள் இருவரும் இணையும் படங்களின் ஒவ்வொரு படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்த டியர் காம்ரேட் என்ற படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.


 • நீண்ட நாள் கோரிக்கை

  தெலுங்கு மற்றும் கன்னடா படங்களில் மாறிமாறி நடித்துக் கொண்டிருந்த இவரை தமிழ் ரசிகர்கள் அனைவரும் எப்பொழுது தமிழில் நடிக்க போகின்றீர்கள் என்று கேட்டு வந்த நிலையில் இப்பொழுது முதல் படமே அதிரடியாக நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் நடிகர் கார்த்தி தான் நடித்து வரும் ஒவ்வொரு படங்களை மிகவும் உன்னிப்பாக பார்த்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 • தமிழில் அறிமுகம்

  தமிழில் சுல்தான் என்ற படம் உருவாகி கொண்டு வருகிறது இதை ரெமோ படத்தை இயக்கிய இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இதில் கார்த்தி, ரஷ்மிகா, யோகி பாபு மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் காமெடி கலந்த ரொமான்டிக் படம் என்பதால் இதன் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. சுல்தான் படத்தின் டைட்டிலை ராஷ்மிகா தான் வெளியே சொல்லிவிட்டார் என்பது இன்னொரு தகவல்.


 • எதிர்நோக்கி

  சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் லுக் அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இதில் அல்லு அர்ஜுன் ஹீரோவாகவும் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர் இந்த படத்தை ரங்கஸ்தலம் என்ற மெகா பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 • இந்த மாதிரி நடிக்கணும்

  லாக் டவுனில் எல்லோரும் முடங்கி கிடைக்கும் வேலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகைகள் அனைவரும் தங்களது கவர்ச்சி படங்களையும் மற்றும் வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். ரஷ்மிகா மந்தனாவும் தனது க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறார்.


 • நடிகை காத்திருப்பு

  இந்த நிலையில் ரஷ்மிகா மந்தனா தனது அன்பான ரசிகர்களிடம் எந்த மாதிரி படங்களை நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கின்றீர்கள், எந்தமாதிரி கதாபாத்திரங்களில் என்னை நீங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் எனவும் உங்களின் விருப்பங்களை கேட்க நான் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார்.


 • ரசிகர்களின் விருப்பம்

  அவர் போட்ட ட்விட்டுக்கு பெரும்பாலானோர் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்களில் நடித்தது போன்று நடிக்குமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இன்னும் ஒரு சிலர் கிராமத்து கதாநாயகி போன்று நடியுங்கள் என்றும், சூப்பர் உமன் கதாபாத்திரங்களில் தங்களது கனவு கன்னியை பார்க்க விரும்புவதாக சொல்லி வருகின்றனர். மேலும் சமீபத்திய நடிகைகளில் மிகக் குறுகிய காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ரஷ்மிகா மந்தனா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அழகான கண்கள், மெல்லிய இடை , வசியம் செய்யும் எதார்த்தமான அழகு , எல்லோரையும் கவரும் குறும்பு தனம் இன்று நிறைய பிளஸ்களை அடுக்கி கொண்டே போகலாம் . ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்ஸ் வைத்து ரஷ்மிகா என்ன திட்டம் தீட்டுகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
ஹைதராபாத்: தனது கொஞ்சும் நடிப்பாலும், க்யூட் எக்ஸ்பிரஷனாலும் அதிக ரசிகர்களை கொண்ட ரஷ்மிகா மந்தனா ரசிகர்களிடம் எந்த மாதிரி படங்களை நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கின்றீர்கள் என்று ட்விட்டரில் கேட்டுள்ளார்.

இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

கனவு கன்னியாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களிடம் ட்விட்டரில் ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்டுள்ளார்.

நிக்கர் தெரிய போஸ் கொடுத்த பிரபல நடிகை.. சூப்பர் டூப்பர் என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

 
ஆரோக்கியம்