Back
Home » செய்தி
வனிதா எத்தனை கல்யாணம் செஞ்சா நமக்கென்ன.. தமிழ்நாடு இருக்கிற இருப்பில்.. அதுவா இப்ப ரொம்ப முக்கியம்
Oneindia | 30th Jun, 2020 10:18 AM
 • சாத்தான்குளம்

  லாக்அப் மரணம் என்பது இனி தமிழகத்தில் நடக்கவே கூடாது என்ற நிலையை கொண்டு வர வேண்டிய அவசியத்தை அனைவரும் உரத்த குரலில் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இன்னும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்ற முழு விவரமும் நமக்கு தெரியாது.. ஆனால் அதிபயங்கரம் அதில் இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டிய பொறுப்பு தமிழக மக்களுக்கு உள்ளது.


 • தொற்றின் உச்சம்

  அதேபோல, கொரோனா நாம் நினைத்ததைவிட, வேறு எங்கோ நின்று பயமுறுத்துகிறது.. இதன் பாதிப்பு இன்றைய நாளைவிட, வரும் நவம்பர் இறுதியில்தான் உச்சத்தை தொடும் என்று சொல்லி வருகிறார்கள். இதனால் திரும்பத் திரும்ப லாக்டவுனில் உழன்று வருகிறோம்.. அரசை மட்டுமே நாம் குறை சொல்லி கொண்டிருக்க முடியாது.. அரசின் பேச்சை பொதுமக்கள் சிலர் கீழ்ப்படிந்து நடக்காததன் விளைவும் இந்த உச்சத்துக்கு ஒரு காரணம்.


 • நெருக்கடி

  யார் கையிலும் இப்போது காசு இல்லை.. மறுபடியும் லாக்டவுன் என்றால், அல்லது பொதுபோக்குவரத்தை முடக்கிவிட்டால் வாழ்வாதாரம் என்பது இன்னும் மோசமாக பாதிக்கப்படும்.. அப்படி பார்த்தால், அடுத்து வரும் 3, 4 மாதங்களுக்குள் நாம் கொரோனாவை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளோம்.


 • கல்யாணம்

  இப்படி பிரச்சனைக்குள் நாம் உழன்று கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல், நாளைக்கு யார் தொற்றால் பாதிக்கப்படுவோம் என்றுகூட கவலைப்படாமல், வனிதா கல்யாணம் பற்றி ஒருசிலர் கருத்து சொல்லி கொண்டிருப்பது, அதை சீரியஸாக விவாதித்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய வேதனையாக உள்ளது.. இந்த விஷயத்தை எடுத்து வைத்து கொண்டு விவாதிப்பதும், கமெண்ட் போடுவதும் தேவையற்றது.. இதனால் தமிழகத்தின் அதிமுக்கிய பிரச்சனைகள் திசைதிருப்பக்கூடிய விபரீதமும் எழும்.


 • திமுக, அதிமுக

  முதலில், ஒருவரது திருமணத்தை பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை.. 40 வயசுல கல்யாணம் பண்ண கூடாதுன்னு சட்டமும் இல்லை.. அப்படியே பிரச்சனை வந்தாலும், அது வனிதா குடும்பத்தை மட்டுமே சாரும்.. ஒருவேளை வனிதா கல்யாணத்தில் சமூக விலகல் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், சில தினங்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் இல்ல திருமணம் நடந்தது குறித்து முதலில் பேச வேண்டும்.. திருவள்ளூரில் பர்த்டே பார்ட்டி கொண்டாடினாரே திமுக பிரமுகர், அவரை பற்றி முதலில் கேள்வி எழுப்ப வேண்டும்!!


 • இளைய சமுதாயம்

  அதைவிட்டுவிட்டு, நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை விட்டு, நம்மை எப்படி தற்காத்து கொள்வது என்பதையும் மறந்துவிட்டு, இப்படி ஒரு நடிகையின் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைத்து கொண்டிருந்தால், நம்மை காப்பாற்ற யாரும் நாளை வர மாட்டார்கள்!
சென்னை: வனிதா எத்தனை கல்யாணம் பண்ணா என்ன? 4 நாட்களாக தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை அப்படி அப்படியே, விட்டுவிட்டு, வனிதா கல்யாண விஷயத்தை ஒருசிலர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவதும், விமர்சித்து வருவதும் கவலை அளித்து வருகிறது.

வனிதா என்பவர் ஒரு நடிகை.. திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை.. ஆனால், அதையெல்லாத்தையும் விட தமிழகம் கவலைப்பட பல பிரச்சினைகள் உள்ளன.

சாத்தான்குளம் விவகாரத்தில் நாடே கொந்தளித்து உள்ளது.. வட இந்தியாவில் உள்ள நடிகர், நடிகைகள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

"நான்தான் கடவுள்".. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்!

   
 
ஆரோக்கியம்