Back
Home » செய்தி
யார் இந்த அமர் சிங்...அரசியலில் கடந்து வந்த பாதை...தலைவர்கள் அஞ்சலி!!
Oneindia | 1st Aug, 2020 07:33 PM
 • கட்சிக்குள் எதிர்ப்பு

  2016ல் இவர் எழுதிய கடிதத்தில், ''எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன். ஆதலால், மே 13க்குப் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளேன்'' என்று தெரிவித்து இருந்தார். மீண்டும் சமாஜ் வாடி கட்சி சார்பில் ராஜ்ய சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மீண்டும் 2016ல் கட்சியின் பொதுச் செயலாளராக சேர்க்கப்பட்டார்.


 • யுபிஏவுக்கு ஆதரவு

  மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சிகள் வாபஸ் பெற்றன. அப்போது, சமாஜ் வாடி கட்சி 39 எம்.பி.க்களுடன் ஆதரவு கொடுத்தது. இதற்கு முன்னணியில் இருந்து செயல்பட்டவர் அமர் சிங். இதனால், மத்தியிலும் இவரது செல்வாக்கு உயரத் துவங்கியது.


 • நெருக்கமான ஜெயப்பிரதா

  இதற்கு முன்னதாக 2010, பிப்ரவரியில் சமாஜ்வாடி கட்சியில் இருந்து இவரும், இவருக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட நடிகை ஜெயப்பிரதாவும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்குப் பின்னர் நடிகர் அமிதாப்பச்சன் ஆதரவுடன் 2010, டிசம்பரில் தனக்கு நேரு ஒரு வெப்சைட் துவக்கினார்.


 • மீண்டும் தோல்வி

  இதற்குப் பின்னர் 2011ல் சொந்தக் கட்சி ஒன்றை துவங்கி உத்தரப்பிரதேசத்தில் 2012ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் 360 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தினார். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து, 2014, மார்ச்சில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதேபூர் சிக்ரி திகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


 • லஞ்ச ஊழல் வழக்கு

  பாஜக எம்.பி.களுக்கு லஞ்சம் கொடுத்தாக இவர் மீது டெல்லி போலீஸ் 2011, 24 ஆம் தேதி லஞ்ச ஊழல் வழக்கு பதிவு செய்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக முடியாமல் இருந்தார் அமர் சிங். இதற்கு பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்தன. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து அவர் 2011, செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். அப்போது டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். ஆனால், உச்ச நீதிமன்ற வழக்கில் இவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபணம் ஆகவில்லை.

  அரசியலில் என்றுமே முக்கிய நபராக கருதப்பட்டு வந்த அமர் சிங் மரணம் அரசியல் வட்டாரத்தில் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


 • ஆல்கஹால்

  கேரளா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவர் தொழில் அதிபர்களுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். வர்த்தகத்திலும் கொடி கட்டிப் பிறந்தார். ஆல்கஹால் தொழிற்சாலை, ரோடு கான்டிராக்ட், மின் உற்பத்தி என்று இவரது தொழில் வளர்ந்தது. இவரது தந்தை கொல்கத்தாவில் கட்டிட பொருட்கள் விற்பனை செய்து வந்தார். மேலும் ஹார்டுவேர் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.


 • ஐஸ்வர்யா ராய்

  அமிதாப் பச்சனும், அவரது மனைவி ஜெயா பச்சனும் பிரிந்து வாழ்கின்றனர் என்று 2017ல் ஒரு குண்டை தூக்கிப் போட்டார் அமர் சிங். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இத்துடன், மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் ஜெயா பச்சனுக்கு நல்ல உறவு இல்லை என்றும் கூறி இருந்தார். பின்னர் பனாமா வழக்கிலும் அமிதாப்பச்சன் பெயர் அடிபட்டபோது, அமிதாப் மவுனமாக ஏன் இருக்கிறார் என்று கேட்டு, இந்த வழக்கில் அமிதாப் பரிசுத்தமானவர் என்று பெயர் பெற வேண்டும் என்றார்.


 • மோடி இரங்கல்

  பல ஆண்டுகளாக ஆற்றல்மிக்க அரசியல் தலைவராக வலம் வந்தவர் அமர் சிங். அரசியலைக் கடந்து இவருக்கு பல துறைகளிலும் இவருக்கு நண்பர்கள் உள்ளனர். இவரது மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி: அமர் சிங் 1956, ஜனவரி 27ஆம் தேதி பிறந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்ய சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். இவரது அரசியல் வாழ்க்கை 1999 ஜனவரி 27 ஆம் தேதியில் இருந்து 2020 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை நீடித்தது. சமாஜ் வாடிக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். ராஜ்ய சபை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். தற்போதும் அவர் ராஜ்ய சபை எம்.பி.ஆக இருக்கிறார்.

2010 ஜனவரி 6ஆம் தேதி சமாஜ்வாடி கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து 2010, பிப்ரவரி 2 ஆம் தேதி இவரை கட்சியில் இருந்து அதன் தலைவர் முலாயம் சிங் யாதவ் வெளியேற்றினார்.

தொடங்கிய வேக்சின் யுத்தம்.. ரஷ்யா, சீனாவின் மருந்துகளை பயன்படுத்த மாட்டோம்..அமெரிக்கா முடிவு.. பகீர்

 
ஆரோக்கியம்