சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் பொங்கலுக்கு ரிலீசானது. அடுத்தபடியாக நெல்சன் திலிப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தின் வேலைகளை துவக்கி உள்ளார் விஜய்.
அதற்குள் விஜய்யின் 66 வது படமான தளபதி 66 படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாய்ப்பை பெறும் டைரக்டர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜ், அஜய் ஞானமுத்து, ஹச்.வினோத், அட்லீ என பலரின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இருப்பினும் தளபதி 66 படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் தான் பெற்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ் தகவலாக, தளபதி 66 ல் விஜய், மீண்டும் அட்லீயுடன் கைகோர்க்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் படங்களை இயக்கிய அட்லீ, நான்காவது முறையாக விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது.
விஜய் 66 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அட்லீ விரைவில் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.